ஐபிஎல் 2021: ப்ளே-ஆஃப் சுற்றுக்கு செல்லும் அணிகள் எவை? டெல்லி கேப்பிடல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு அடுத்தது யார்?

பட மூலாதாரம், Bcci /ipl
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி நேற்றைய ஐபிஎல் போட்டியில் பெற்ற வெற்றி நடப்பு ஐபிஎல் தொடரின் ப்ளே-ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறும் நான்காவது அணியாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இருக்கும் என்பதை கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளது.
லீக் போட்டிகளின் கடைசி நாளான இன்று அபுதாபியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோத உள்ளன. துபாயில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோத உள்ளன.
- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் ஆகிய அணிகள் ஏற்கனவே ப்ளே-ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளன. டெல்லி அணி புள்ளிப் பட்டியலில் தற்போது முதலிடத்திலும் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு மூன்றாவது இடத்திலும் உள்ளன.
- ஒருவேளை இன்றைய போட்டியில் பெங்களூரு அணி வெற்றி பெற்றால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு நிகராக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் 18 புள்ளிகள் பெறும். எனினும் நெட் ரன் ரேட் அடிப்படையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை முந்த முடியாது என்பதால் முதல் க்வாலிஃபயர் போட்டியில் டெல்லியுடன் இரண்டாம் இடத்தைத் தக்க வைக்கும் சென்னை அணி மோதும்.
- இன்று அனைத்து லீக் போட்டிகளும் முடிந்தபின்பு 4வது இடத்தில் இருக்கும் அணியே ப்ளே-ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறும் கடைசி அணியாக இருக்கும்.
- தற்போது நான்காமிடத்தில் 14 புள்ளிகளுடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இருக்கிறது. ஐந்தாவது இடத்தில் உள்ள பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ஆறாவது இடத்தில் உள்ள மும்பை இந்தியன்ஸ் ஆகிய இரண்டு அணிகளும் 12 புள்ளிகளை பெற்றுள்ளன.
- இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் ஒருவேளை வெற்றி பெற்றால் நான்காவது இடத்தில் உள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு நிகராக 14 புள்ளிகளைப் பெற முடியும். ஆனால் மும்பை அணி பெற்றுள்ள நெட் ரன் ரேட் அந்த அணியை புள்ளிப் பட்டியலில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்குக் கீழேதான்தான் வைத்திருக்கும்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
- இனி பஞ்சாப் அணி விளையாட போட்டிகள் ஏதும் இல்லாத நிலையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 86 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தியது ப்ளே-ஆஃப் சுற்றுக்கு பஞ்சாப் கிங்ஸ் செல்வதற்கான வாய்ப்பை இல்லாமல் செய்து விட்டது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்








