You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தோனி ஓய்வு: சச்சின், கங்குலி மற்றும் பிற கிரிக்கெட் வீரர்கள் கூறுவது என்ன?
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து மகேந்திர சிங் தோனி ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
அவர் ஓய்வு பெறுவதாக அறிவித்ததிலிருந்து இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகிறார் தோனி. இந்த அறிவிப்பு அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதில் திரைப்பிரபலங்கள், விளையாட்டுத்துறையினர், அரசியல் பிரபலங்களும் அடங்குவர்.
கிரிக்கெட்டுக்கு நீங்கள் அளித்த பங்களிப்பு மிகப்பெரியது. என் வாழ்வில் சிறந்த தருணம் 2011 கோப்பையை வென்றது. உங்கள் இரண்டாவது இன்னிங்சுக்கு வாழ்த்துகள் என சச்சின் டெண்டுல்கர் ட்வீட் செய்துள்ளார்.
பிசிசிஐ தலைவர் செளரவ் கங்குலி தோனி ஓய்வு குறித்து வெளியிட்ட செய்தியில், "இது ஒரு சகாப்தத்தின் முடிவு. நாட்டிற்கும், கிரிக்கெட் உலகத்திலும் சிறந்த வீரர் தோனி. அவருடைய தலைமை பண்புகள் யாருக்கும் வராது. ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அவரது ஆரம்ப காலத்தில் வெளிப்படுத்திய பேட்டிங் திறமைகள் இந்த உலகையே திரும்பிப் பார்க்க வைத்தது. அனைத்து நல்ல விஷயங்களுக்கு ஒரு முடிவு வரும். விக்கெட் கீப்பர்களுக்கு ஒரு தரத்தை நிர்ணயித்தவர் தோனி. அவர் களத்தில் விளையாடி முடிக்கும்போது இறுதியில் எந்த வருத்தமும் இல்லாமல் வெளியேறுவார்.எந்த வருத்தமும் இல்லாமல் முடிப்பார். நான் அவருக்கு வாழ்க்கையில் சிறந்ததே நடக்க வேண்டும் என வாழ்த்துகிறேன்" என கூறியுள்ளார்.
"உங்கள் சிறந்த பணிக்கு வாழ்த்துக்கள். இந்தியா கண்ட சிறந்த கேப்டன்களில் நீங்களும் ஒருவர். உங்களுடன் நேரம் செலவிட்டதில் எனக்கு பெருமை" என தோனியின் ஓய்வு குறித்து முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஸ்ரீகாந்த ட்வீட் செய்துள்ளார்.
"விளையாட்டு வீரர்கள் பலரும் வருவார்கள் போவார்கள். ஆனால், தோனி போன்ற ஒரு அமைதியான வீரரை பார்க்க முடியாது. பல கிரிக்கெட் பிரியர்களுக்கும் தோனி அவர்களது குடும்பத்தில் ஒருவர். ஓம் ஃபினிஷாயா நமஹ" என கிரிக்கெட் வீரர் விரேந்தர் சேவாக் பதிவிட்டுள்ளார்.
எங்கள் மனதில் இருந்து உங்களுக்கு என்றுமே ஓய்வு கிடையாது என்று பதிவிட்டுள்ளார் பிரபல பாலிவுட் நடிகரான ரித்தேஷ் தேஷ்முக்
தனது ஸ்டைலிலேயே ஓய்வு பெற்றுள்ளார் தோனி என பதிவிட்டுள்ளார் இந்திய கிரிக்கெட் வீரரான அஷ்வின். "நீங்கள் நாட்டிற்காக அனைத்தையும் கொடுத்திருக்கிறீர்கள். 2011 உலகக்கோப்பை, மற்றும் ஐபிஎல் போட்டிகள். நீங்கள் என்றுமே எங்கள் நினைவில் நீங்கா இடத்தை பிடித்திருக்கிறீர்கள்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாபெரும் மனிதர் ஓய்வு பெற்றார் என கிரிக்கெட் வர்ணணையாளர் ஹர்ஷா போக்லே தெரிவித்துள்ளார்.
"தோனி ஓய்வு பெற்றார் என்ற செய்தி வருத்தமாக உள்ளது. இந்தியாவின் மிகச்சிறந்த விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன். ஒரு சிறந்த கேப்டன். இந்திய கிரிக்கெட் வரலாற்றில் அவர் ஒரு சகாப்தத்தை படைத்துள்ளார்" என காங்கிரஸ் எம்பி சஷி தரூர் ட்வீட் செய்துள்ளார்.
பிற செய்திகள்:
- எடப்பாடி பழனிசாமி Vs ஓ. பன்னீர்செல்வம்: அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார்?
- இலங்கை : மஹிந்த ராஜபக்ஷவுடன் சமரசமாக செல்வேனா? - அமைச்சர் ஜீவன் தொண்டமான் பேட்டி
- இந்திய சுதந்திர போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த 'ரகசிய வானொலி நிலையம்'
- இஸ்ரேல் - பாலத்தீனம்: என்ன பிரச்சனை? - 100 ஆண்டு வரலாற்றின் முக்கிய தருணங்கள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: