You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஊக்கமருத்து சர்ச்சை: டோக்கியோ ஒலிம்பிக்ஸில் பங்கேற்க ரஷ்யாவுக்கு தடை
அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு அனைத்து முக்கிய விளையாட்டு போட்டிகளிலும் ரஷ்யா கலந்து கொள்ள, உலக ஊக்க மருந்து எதிர்ப்பு அமைப்பால் தடை விதிக்கப்பட்டுள்ளது.
எனவே டோக்கியோவில் 2020ஆம் ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக் போட்டி மற்றும் கத்தாரில் 2022ஆம் ஆண்டு நடைபெறும் கால்பந்து உலகக் கோப்பை போட்டியிலும் ரஷ்யாவின் கொடி அணிவகுப்பில் இடம்பெறாது . அந்நாட்டின் தேசிய கீதமும் ஒலிக்காது.
இந்த போதைப் பொருள் பயன்படுத்துதலில் எந்த குற்றமும் இழைக்கவில்லை என்றும் நிரூபித்த வீரர்கள் பொதுவான ஒரு கொடியில் விளையாடலாம்.
சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற உலக ஊக்க மருத்து எதிர்ப்பு அமைப்பின் கூட்டத்தில் ஒரு மனதாக இந்த முடிவு எடுக்கப்பட்டது.
2015ஆம் ஆண்டிலிருந்து தடகள போட்டியில் பங்கேற்க ரஷ்யாவுக்கு தடை விதிக்கப்பட்டது.
இந்த தடையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ரஷ்யாவிற்கு 21 நாட்கள் உள்ளன.
2014ஆம் ஆண்டு ரஷ்யாவின் சோசி நகரில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் ரஷ்யா விளையாட விதிக்கப்பட்ட தடைக்கு பிறகு தென் கொரியாவில் 2018ஆம் ஆண்டு நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் மொத்தம் 168 ரஷ்ய தடகள வீரர்கள் பொதுவான கொடியின் கீழ் விளையாடினர்.
இருப்பினும் யூரோ 2020 போட்டியில் ரஷ்யா கலந்து கொள்ளலாம். ஐரோப்பிய கால்பந்து சம்மேளனத்தால் நடத்தப்படும் அந்த போட்டிகள் `முக்கிய விளையாட்டு போட்டி` என்று கருதபடுவதில்லை என்பதால் ரஷ்யா அதில் விளையாட எந்தத் தடையும் இல்லை.
பிற செய்திகள்:
- சௌதி உணவகங்களில் இனி ஆண் - பெண் தனித்தனி நுழைவாயில் தேவையில்லை
- டெல்லி தீ விபத்து: "4 பேரை காப்பாற்றினேன்; ஆனால் சகோதரனை மீட்க முடியவில்லையே..."
- சீனாவின் ஏற்றுமதி மீண்டும் சரிவு: அமெரிக்க வர்த்தகப் போர் நீடிப்பதன் விளைவு
- உன்னாவ் வழக்கு: நட்பு, திருமணம், பாலியல் வல்லுறவு மற்றும் எரித்துக் கொலை - நடந்தது என்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: