காமன்வெல்த்: இந்தியாவுக்கு 12ஆவது தங்கப் பதக்கம்

ஆஸ்திரேலியாவில் நடந்துவரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில், இந்தியாவின் ஷ்ரேயாசி சிங், டபுள் ட்ராப் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

ஆஸ்திரேலியாவை சேர்ந்த எம்மா காக்ஸை தோற்கடித்து அவர் வெற்றி பெற்றுள்ளார். இது இந்தியாவுக்கு 12ஆவது தங்கப் பதக்கம் ஆகும்.

அரையிறுதி போட்டியில் வெற்றி பெற்றார் மேரி கோம்

இந்தியாவின் மேரி கோம் அரையிறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார். இலங்கையை சேர்ந்த அனுஷா தில்லுராக்ஷியை 5-0 என்ற கணக்கில் வென்றுள்ளார் மேரி கோம்.

மேரி கோம் மற்றும் வடக்கு அயர்லாந்தை சேர்ந்த கிறிஸ்டினா அரா ஏப்ரல் 14ஆம் தேதியன்று நடைபெறும் இறுதி போட்டியில் மோதுகின்றனர்.

முன்னதாக ஸ்காட்லாந்தின் மேகன் கார்டன்ஸை 5-0 என்ற புள்ளிக் கணக்கில் வென்று, 48 கிலோ எடைப்பிரிவில் அரையிறுதிக்குள் நுழைந்தார் மேரி கோம். அப்போது இந்தியாவுக்கு குறைந்தது வெண்கலம் பதக்கம் உறுதியானது. நிச்சயமாக தங்கம் வெல்லும் முனைப்பில் இருக்கும் மேரி கோம் இறுதிப் போட்டியிலும் வெற்றி பெறுவார் என நம்பலாம்.

இந்தியாவில் நாடாளுமன்ற உறுப்பினராகவும் மூன்று குழந்தைகளுக்கு தாயாகவும் உள்ள மேரி கோம் அவரது வாழ்க்கை வரலாறு திரைப்படமாக்கப்பட்டபின் மிகவும் பிரபலமாக இருக்கிறார்.

'தி ஆஸ்திரேலியன்' எனும் பிரபல நாளிதழ் அவரது படத்துடன் மேரி பற்றிய சிறப்புக் கட்டுரை ஒன்றையும் வெளியிட்டிருந்தது.

ஏர் பிஸ்டல் - மேலும் ஒரு பதக்கம்

50மீ ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் ஓம் பிரகாஷ் மிதர்வால் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.

நடைபெற்ற எட்டு சுற்றுகளிலும் 201.1 புள்ளிகளை பெற்றார் மித்தர்வால்.

காமன்வெல்த் தொடர்பான பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: