You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
#BBCStreetCricket ராமநாதபுரம் சீ ரைடர்ஸ் அணி வெற்றி - காணொளி
சென்னை மந்தைவெளியில் பிபிசி தமிழ் நடத்தும் #BBCStreetCricket இறுதியாட்டத்தில் ஈரோடு ஸ்டார்ஸ் மற்றும் ராமநாதபுரம் சீ ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.
நேயர்கள் போட்டியை நேரலையில் காண :
இன்று காலை நடைபெற்ற முதல் அரையிறுதி ஆட்டத்தில் சென்னை அணியை ராமநாதபுரம் அணி வீழ்த்தி வெற்றி பெற்றது. இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் திருச்சி அணியை ஈரோடு வீழ்த்தி வெற்றிப்பெற்றது.
அரையிறுதி போட்டியை காண:
அணிகளின் விவரங்கள்
சென்னை சூப்பர் வாரியர்ஸ்
திருச்சி சிங்கம்
ஈரோடு ஸ்டார்ஸ்
ராமநாதபுரம் சீ ரைடர்ஸ்
ஸ்ட்ரீட் கிரிக்கெட்டுக்கு பெயர் போன தமிழகம்
தமிழகம் முழுவதும் பரவலாக விளையாடப்படுவது கிரிக்கெட். இடம், சூழ்நிலை, வீரர்களின் எண்ணிக்கை ஆகியவற்றை பொறுத்து சர்வதேச அளவில் விளையாடப்படும் கிரிக்கெட் விதிகளில் மாற்றங்கள் செய்து பல தரப்பினராலும் பல்வேறு இடங்களில் கிரிக்கெட் விளையாடப்படுகிறது.
அவ்வளவு ஏன்? ஐ பி எல்லில் ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிக்காக விளையாடும் தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன் முதல் பல வீரர்கள் ஸ்ட்ரீட் கிரிக்கெட்டில் இருந்துதான் தங்களது பயணத்தை துவங்கியிருக்கிறார்கள்.
தெருக்கள், காலி வகுப்பறைகள், ஆற்றங்கரையோரங்களில் கடற்கரை, மொட்டை மாடி என எங்கும் கிரிக்கெட் விளையாடப்படுகிறது. தமிழகத்தின் ஓர் அடையாளமாக மாறத் துவங்கியிருக்கும் வீதி கிரிக்கெட்டில் என்னென்ன வேடிக்கையான விதிகள் இருக்கிறதோ அதனை அடிப்படையாக கொண்டு பிபிசி தமிழ், பிரத்யேக தனித்துவ ஸ்ட்ரீட் கிரிக்கெட் விதிகளை தயாரித்துள்ளது.
அதனடிப்படையில் ஸ்ட்ரீட் கிரிக்கெட் தொடர் ஒன்று அறிவிக்கப்பட்டு கடந்த வாரம் லீக் சுற்றுப் போட்டிகள் பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்றன.
அதில் வெற்றி பெற்ற சென்னை, ஈரோடு, திருச்சி மற்றும் ராமநாதபுரம் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. இதில் வெற்றி பெறும் இரு அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.
பிபிசி தமிழ் நேயர்களுக்காக இந்த போட்டிகள் அனைத்தும் பிபிசி தமிழ் பேஸ்புக் பக்கத்தில் நேரலை செய்யப்படும். மேலதிக தகவல்களை தெரிந்துகொள்ள பிபிசி தமிழுடன் இணைந்திருங்கள்.
ஒரு வித்தியாசமான அனுபவத்திற்கு தயாராகுங்கள்!