You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
டென்னிஸ் வீராங்கனை செரீனா திருமணம்: ரெட்டிட் இணை நிறுவனரை மணந்தார்
பிரபல டென்னிஸ் வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் ரெட்டிட் இணை நிறுவனர் அலெக்சிஸ் ஓஹானியை திருமணம் செய்து கொண்டார்.
வியாழக்கிழமையன்று நியூ ஆர்லியன்ஸில் நடைபெற்ற இந்த திருமணத்தில் பியோனஸ், கிம் கர்டிஷியன் மற்றும் ஈவா லாங்கோரியா உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
இத்திருமண நிகழ்வின் கருப்பொருளாக அழகும், மிருகமும் என்று வைக்கப்பட்டிருந்ததாகவும், மேலும் விருந்தினர்கள் பட்டியலில் 200க்கும் மேற்பட்டோர் இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கலை மையம் ஒன்றில் நடைபெற்ற இத்திருமணத்திற்காக, நகரத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதி முழுவதுமாக மூடப்பட்டது.
மேலும், இத்திருமணத்தில் டென்னிஸ் நட்சத்திரங்களான கரோலின் வோஸ்னியாகி, கெல்லி ரோலண்ட், சியரா, லா லா அந்தோனி மற்றும் வோக் இதழின் ஆசிரியர் அன்னா வின்டோர் ஆகியோரும் பங்கேற்றதாக டெய்லி மெயில் பத்திரிக்கை தெரிவித்துள்ளது.
இத்திருமணதிற்கான செலவு ஒரு மில்லியன் டாலர்களை தாண்டியதாகவும் மற்றும் இந்நிகழ்வில் பங்கேற்ற விருந்தினர்கள் வோஜ் இதழுடன் செய்யப்பட்டிருந்த ஒரு பிரத்யேக ஒப்பந்தம் காரணமாக தங்கள் செல்பேசிகளை கொண்டு வரக்கூடாது என்று கேட்டுக்கொள்ளப்பட்டதாகவும் அது தெரிவித்துள்ளது.
செரீனாவின் பயிற்சியாளர் பாட்ரிக் மவுட்டோக்ளோவ், இன்ஸ்டாகிராமில் செரீனாவுக்கு "மகிழ்ச்சியான திருமண நாள்" என்று தனது வாழ்த்துக்களை பதிவு செய்தார்.
இந்த ஜோடி 15 மாதங்கள் டேட்டிங்குக்குப் பிறகு கடந்த ஆண்டு டிசம்பரில் தங்கள் நிச்சயதார்த்தத்தை அறிவித்தது.
"நான் ஆம் என்று கூறினேன்" என்று தலைப்பிட்ட ரெட்டிட் பதிவின் மூலம் இவர்கள் தங்களது முடிவை பொதுவெளியில் அறிவித்தனர்.
இரண்டு மாதங்களுக்கு முன்பு, அலெக்சிஸ் ஒலிம்பியா என்ற பெண் குழந்தையை செரீனா பெற்றெடுத்தார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்