வயதை வென்ற கால்பந்து பிரபலங்கள்

இத்தாலியின் தேசிய அணிக்கும் ரோமா கால்பந்து அணிக்கும் விளையாடிய ஃபிரான்சிஸ்கோ டோட்டி ஓய்வு பெறுகிறார். 40 வயதாகும் அவர் ரோமா அணிக்காக விளையாடிய 24 ஆண்டுகளில்783 ஆட்டங்களில் பங்கேற்று 307 கோல்களை அடித்துள்ளார்.

கடந்த 2006ஆம் ஆண்டு இத்தாலி உலகக் கோப்பையை வென்றபோது, அந்த அணியில் டோட்டி உறுப்பினராக இருந்தார்.

அவரைப் போலவே நீண்டகாலம் விளையாடி பிரபலமாக இருந்த சிலர் குறித்து பார்போம்.

ரோஜர் மில்லா

கேமரூன் நாட்டு வீராரான ரோஜர் மில்லா, ஆடுகளத்தில் ஆடும் நடனங்களுக்காக மிகவும் அறியப்பட்டவர்.

அவர் தேசிய அணியில் இருந்தபோது கேமரூன் இருமுறை ஆப்ரிக்கக் கோப்பையை வென்றது.

1982ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் அவர் ஆடினாலும், எட்டு ஆண்டுகள் கழித்து 1990ல் தனது 38ஆவது வயதில் அவர் உலகக் கோப்பை போட்டியில் ஆடியது பெரும் வரவேற்பை பெற்றது.

அந்த வயதில் பல முன்னணி நட்சத்திரங்கள் ஓய்வு பெற்று பல ஆண்டுகள் ஆகியிருந்தன.

1990ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியில், கேமரூன் அணி அடித்த ஒவ்வொரு கோலுக்கு பிறகும் அவர் ஆடிய நடனம் இன்றளவும் பேசப்படுகிறது.

மீண்டும் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியிலும் 42 வயதில் அவரது ஆளுமை வெளிப்பட்டது. மிகவும் அதிக வயதில் உலகக் கோப்பை போட்டியில் கோல் அடித்தவர் எனும் பெருமையை ரோஜர் மில்லா 1994ஆம் ஆண்டு பெற்றார்.

ஆட்டம்-நடனம் என இருபது ஆண்டுகளுக்கும் மேலாக கால்பந்து ரசிகர்களை மகிழ்வித்த ரோஜர் மில்லா 1996ல் ஓய்வு பெற்றார்.

கேமரூன் மற்றுன் பிரான்ஸில் இருந்த கால்பந்து அணிகளுக்காக ஆடிய அவர் 666 கோல்களை அடித்துள்ளார்.

(அடுத்த பகுதியில் மேலும் இரு பிரபலங்கள் குறித்து பார்ப்போம்.)

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்