விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் பந்தய மோசடியா?

இந்த ஆண்டு நடைபெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் பந்தைய மோசடி இடம்பெற்றதா என்பது குறித்த விசாரணை தொடங்கியுள்ளது.

விம்பிள்டன், டென்னிஸ்,

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள் மீதும் விசாரணை

ஒரு போட்டியின் மீது சந்தேகத்துகுரிய வகையில் பணம் கட்டப்பட்டது என செய்திகள் வெளியான நிலையில், இவ்விசாரணை ஆரம்பமாகியுள்ளது.

அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் விட்டாலியா டியாட்சென்கோவுக்கும் டைமியா பாக்சினெஸ்கிக்கும் இடையேயான முதல் சுற்று ஆட்டம் குறித்த விசாரணையும் டென்னிஸ் அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலப்பகுதியில் சர்வதேச டென்னிஸ் சம்மேளனத்தின் புலனாய்வுப் பிரிவுக்கு 96 போட்டிகள் தொடர்பில் இரகசியத் தகவல்கள் கிடைத்தன.

அதில் இரண்டு தகவல்கள் விம்பிள்டன் மற்றும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டகள் தொடர்பிலானவை.

சந்தேகத்துகுரிய வகையில் ஒரு ஆட்டத்தின் மீது பந்தயம் கட்டப்படும் சமயத்தில், கண்காணிப்பாளர்கள் மற்றும் பெட்டிங் நிறுவனங்கள் விளையாட்டு அமைப்புகளுக்கு இரகசியத் தகவல்களை அனுப்புகின்றன.

அவ்வகையில் தமக்கு சில தகவல்கள் வந்துள்ளதாக சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் கூறியுள்ளது.

எனினும் இரகசியத் தகவல் மட்டுமே அப்போட்டியில் பந்தய மோசடி இடம்பெற்றுள்ளது என்பதற்கு சான்றாகாது எனவும் சர்வதேச டென்னிஸ் சம்மேளன் தெரிவித்துள்ளது.

இது தொடர்பிலான தீவிர விசாரணைகள் நடைபெறுகின்றன.