கொரோனா வைரஸ்: உங்கள் உயிரைக் காக்கும் கை கழுவும் பழக்கம் - தவிர்த்தால் என்னாகும்?

பட மூலாதாரம், Getty Images
கடந்த வருடம் ஃபாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சியின் தொகுப்பாளரான ஹெக்செத், தான் 10 ஆண்டுகளாக கை கழுவவில்லை எனக் கூறியிருந்தார்.
2015ஆம் ஆண்டு பிரபல நடிகை ஜெனிஃபர் லாரென்ஸ் தான் கழிவறை சென்று வரும்போது கை கழுவியதில்லை என்று கூறினார்.
ஹெக்செத் மற்றும் ஜெனிஃபர் தாங்கள் நகைச்சுவைக்காக அவ்வாறு கூறியதாக ஒப்புக்கொண்டனர்.
ஆனால் சிலர் நேரடியாகவே தாங்கள் அவ்வளவாக கை கழுவுவதில்லை என ஒப்புக்கொள்கின்றனர்.
2015ல் வடக்கு கரோலினா பகுதியின் குடியரசு கட்சியின் உறுப்பினரான தாம் டில்லிஸ், உணவு விடுதிகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் அடிக்கடி கை கழுவதுதான் விதிமுறைகளை மதிப்பதன் சிறந்த உதாரணம் எனக் கூறினார்.

- கொரோனா சந்தேகங்கள்: முக்கிய கேள்விகளும் அதற்கான பதில்களும்
- கொரோனா வைரஸ் அறிகுறிகள் என்ன? பாதுகாத்து கொள்வது எப்படி?
- கொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி? - விரிவான அறிவியல் விளக்கம்
- Pandemic என்றால் என்ன?
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா பரவல் தீவிரமானால் இந்தியாவால் சமாளிக்க முடியுமா?
- முறையாக கை கழுவுதல் எப்படி?
- கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் 5 எளிய வழிகள்
- கொரோனா வைரஸ் அச்சங்களுக்கு நடுவில் உங்கள் மனநலத்தை பாதுகாப்பது எப்படி?
- கொரோனா வைரஸ் தடுப்பூசி எப்போது பயன்பாட்டுக்கு வரும்?
இன்னும் 10 ஆண்டுகளில் கழிவறைக்கு சென்று விட்டு திரும்ப வரும்போது, கை கழுவாமல் வருவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் என ஓர் ஆய்வு கூறுகிறது.
2015ல் எடுத்த ஓர் ஆய்வின்படி கழிவறைக்கு செல்வோரில் 26.2% பேர் மட்டுமே கைகளை சோப்பால் கழுவுகின்றனர்.
உதாசீனப்படுத்தப்படும் சிறிய பழக்கம்
இது ஒரு சிறிய பழக்கம் என தோன்றலாம். ஆனால் நாங்கள் இதற்காக 25 வருடங்களாக விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம். இன்னும் இப்பழக்கம் குறைவாகத்தான் இருக்கிறது, என்கிறார் லண்டன் சுகாதாரம் மற்றும் பாரம்பரிய மருத்துவ கல்லூரியிலிருந்து பொது சுகாதார நிபுணர் ராபர்ட் ஆங்கர்.

பட மூலாதாரம், Getty Images
ஏழ்மை மிக்க நாடுகளில், தண்ணீர் பற்றாக்குறை மற்றும் சோப்பு வாங்க வசதியின்மையை ஒரு காரணமாக கூற முடியும்.
பொருளாதாரத்தில் பின் தங்கிய நாடுகளில் 27% மக்களுக்கு மட்டுமே இந்த சோப்பு போன்ற பொருட்கள் கிடைக்கிறது. உலக சுகாதார நிறுவனம் மற்றும் யுனிசெஃப்பின் கணக்குப்படி 3 பில்லியன் மக்கள் தங்கள் வீட்டில் சோப்பு போன்றவை இல்லாமல் இருக்கின்றனர்.
ஆனால் வளர்ந்த நாடுகளில் கூட 50% பேர்தான் இதை கழிவறைக்கு சென்று வந்த பின் பயன்படுத்துகின்றனர்.
உயிரைக்காக்கும் கண்டுபிடிப்பு
1850இல் இருந்து எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் மூலம் இந்த கை கழுவும் பழக்கத்தால் மனிதனின் சராசரி ஆயுள் கூடுகிறது என நாம் தெரிந்து கொள்ளலாம். இதனால் நாம் இதை உயிரைக் காக்கும் ஒரு பழக்கமாக பார்க்க வேண்டும்.
இந்த சிறிய பழக்கம் பெருந்தொற்று மற்றும் பெரிய பிரச்சனைகளை நம்மிடம் வராமல் காக்கிறது.
2006ல் நடத்தப்பட்ட ஓர் ஆராய்ச்சியில் தொடர்ந்து கைகளை நன்கு கழுவும் பழக்கமுடையவர்களுக்கு சுவாசக் கோளாறு வருவதற்கு 6 % முதல் 44 % சதவீதம் வரை வாய்ப்புகள் குறைகிறது என கூறப்பட்டுள்ளது.
கோவிட்-19 தொற்று பரவும் விகிதத்தை அறிவதற்கு அந்தந்த நாட்டின் கை கழுவும் பழக்கத்தைக் கணக்கில் எடுத்து கொள்ளுதல் ஒரு நல்ல முறையாக இருக்கும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
சிலர் சானிடைசர்களுக்காக நிறைய பணத்தை செலவு செய்ய தயராகும்போதும் சிலர் சோப் பயன்படுத்த மறுக்கிறார்கள்.

பட மூலாதாரம், Getty Images
கழிவறைக்கு சென்று கை கழுவாமல் இவ்வாறு திரும்புவதற்கு சோம்பேறித்தனம் மட்டும் காரணமாக அமைவதில்லை.
சில மனரீதியான காரணங்களும் மக்களை கைகழுவுவதிலிருந்து தடுக்கிறது.
மனிதனின் கற்பனைத்தனமான நம்பிக்கை, சாதாரணமாக இருப்பது போல் நினைக்க வைப்பது மற்றும் அருவருப்படையக் கூடிய எல்லை ஆகியவையும் கை கழுவுவதைத் தடுக்கிறது.
வளர்ந்த நாடுகளில் கை கழுவது பல நேரங்களில் தவிர்க்கப்பட்டாலும், அப்பழக்கம் இல்லாதவர்கள் அவ்வளவாக நோய்வாய்ப்படுவதில்லை என்பதே கை கழுவும் பண்பின் பிரச்சனை என்கிறார் ஆங்கர்.
நேர்மறையான நம்பிக்கை
நேர்மறையான நம்பிக்கை மிக முக்கிய காரணம். அடுத்தவர்களுக்கு தவறாக நடப்பதை விட நமக்கு குறைவாகவே தவறுகள் நடக்கும் என்ற நம்பிக்கை மக்களை கை கழுவும் பழக்கத்திலிருந்து விலக்கி வைக்கிறது.
இந்த நம்பிக்கை உலகம் முழுவதும் பல்வேறு தரப்பினரிடம் பரவி உள்ளது.

இது நமக்கு நடக்கவுள்ள கெட்ட விஷயங்களைப் பற்றிய நமது கணிப்பை தவறாக்கும்.
இந்த கற்பனை எண்ணம்தான் புகை பிடித்தலின் அடிப்படையாக இருப்பது அல்லது அதிகம் செலவாகும் க்ரெடிட் கார்டுகளை வாங்கத் தூண்டுவது போன்றவற்றிக்கு காரணமாக அமையும்.
இது கை கழுவ வேண்டாம் என மக்களை தடுக்கவும் செய்யும். இது செவிலியர்களுக்காக படித்து கொண்டிருக்கும் மாணவர்களிடம் பார்க்கலாம்.
அவர்கள் தங்களுக்கு தெரிந்த நல்ல சுத்தமான பழக்கங்கங்களை சற்று மிகையாக கூறுவதை பார்க்க முடியும். உணவை கையாள்கிறவர்களிடமும் இதைப் பார்க்க முடியும். அவர்கள் தங்களால் அடுத்தவர்கள் சாப்பிடும் உணவு கெடலாம் என்பதை தவறாக கணிப்பார்கள்.
சமூக கட்டுப்பாடு
கை கழுவதலில் மனரீதியான காரணங்கள் உள்ளது என்பதன் மிகப்பெரிய அடையாளம் பல்வேறு இடங்களில் மற்றும் கலாசாரங்களின் பின்பற்றப்படும் கையை சுத்தமாக வைத்திருக்கும் முறையே ஆகும்.

பட மூலாதாரம், Getty Images
63 நாடுகளிலிருந்து 64,002 பேரிடம் செய்த ஓர் ஆராய்ச்சியின் படி கழிவறைக்கு சென்று கை கழுவுதல் தன்னிச்சையாக அவர்கள் செய்யக்கூடிய ஒரு பழக்கம்.
இதை சீனா, ஜப்பான், தென் கொரியா மற்றும் நெதர்லாந்தில் பாதிக்கும் குறைவானோரே ஒப்புக்கொண்டனர். ஆனால் சௌதி அரேபியாவில் 97 சதவீதம் பேர் இது அவர்களின் வாடிக்கை என ஒப்புக்கொண்டனர்.
ஆண்களைவிட பெண்கள் அதிகம் கை கழுவுகிறார்கள் ஓர் ஆய்வு கூறுகிறது. பிரிட்டனில் உள்ள ஒரு மோட்டார் சர்வீஸ் நிலையத்தில் பெண்கள் இரு மடங்கு அதிகமாக கைகளைக் கழுவுகின்றனர் என ஆங்கர் கண்டறிந்துள்ளார்,
கோவிட்-19 பெருந்தொற்று வந்தபோதிலும் 65% சதவீத பெண்கள் மற்றும் 52% சதவீத ஆண்கள் மட்டுமே தங்கள் கைகளைக் கழுவுகின்றனர். சமுதாய பழக்கங்களினால் கூட கை கழுவும் பழக்கத்தில் வேறுபாடு இருக்கலாம் என ஆங்கர் விவரிக்கிறார்.
பொது இடங்களில் வெவ்வேறு கழிவறைகளை ஆணும் பெண்ணும் பயன்படுத்துவர். இரு பாலித்தனவருக்கும் தனிப்பட்ட முறைகள் இருக்கும். அதேபோலதான் வெவ்வேறு குழுக்களுக்கும் தனிப்பட்ட சமுதாய நடை முறைகள் இருக்கும்.
பகுத்தறிவும் அனுபவமும்
கைகழுவும் பழக்கத்துக்கு பின்னால் இருக்கும் மன ரீதியான காரணங்களை கண்டறிவதில் விஞ்ஞானிகள் இவ்வளவு தீவிரமாக இருக்க ஒரு முக்கிய காரணம் இது உயிர் சம்பந்தபட்ட விஷயம் என்பதாகும். அதுவும் குறிப்பாக மருத்துவமனையில் இருக்கும் நோயாளிகளுக்கு மிக முக்கியமான ஒன்று.
பல ஆண்டுகள் உயிரைக்காக்கும் தொழிலை கற்கும் மருத்துவ பணியாளர்கள் வைரஸ்கள் மற்றும் பேக்டீரியாக்கள் பரவாமல் தடுக்கும் மிக முக்கிய அடிப்படை பழக்கத்தை விட்டுவிடுகின்றனர்.
சில சமீப கால கண்டுபிடிப்புகள் அதிர்ச்சயளிக்கும் வகையில் உள்ளது. உதாரணமாக 2019ல் சௌதி அரேபியாவில் உள்ள க்யூபேக் மருத்துவமனையில் வேலை செய்யும் மருத்துவ பணியாளர்கள் 33% மட்டுமே கைகளை கழுவுகின்றனர் என ஓர் ஆய்வில் கண்டறியப்பட்டது. சௌதி அரேபியாவில் கைக் கழுவும் பழக்கம் அடிக்கடி இருக்கும்போதும் மருத்துவ பணியாளர்கள் அதை சரியாக செய்வதில்லை. ஆனால் பொது மக்களின் பார்வையில் அனைத்து மருத்துவ பணியாளர்களும் தவறானவர்களாகத் தெரிவதில்லை.
இந்த வருடம் மார்ச் மாதம் நடந்த ஆய்வின்படி பகுத்தறிவு ஒரு முக்கிய காரணமாக அமைகிறது. பிரேசிலில் நடந்த ஆய்வு ஒன்றில் அதிக பகுத்தறிவு கொண்டவர்கள் சமூக விலகலை அதிகம் கடைப்பிடிக்கிறார்கள் மற்றும் கைகளை அதிகம் கழுவுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அருவருப்பு
அருவருப்பு என்பது மிக முக்கியமான ஒன்று. உணவில் புழு இருப்பதை பார்த்தவுடன் நம்மை அறியாமல் நாம் அதை தவிர்த்துவிடுவோம். அதேபோல் ரயிலில் ஓர் அசுத்தமான இடத்தை பார்த்தவுடன் சுவாசத்தை கட்டுப்படுத்தி கொள்வோம். இந்த அருவருப்பு உணர்வு நம்மை பல இடங்களில் காப்பாற்றுகிறது என்கிறார் உளவியல் நிபுணர் டிக் ஸ்டீவன்சன்.
விலங்கியல் பூங்காவில் தங்களது மலத்தை தாங்களே சாப்பிடும் மனித குரங்கு கூட அடுத்த விலங்கின் உடல் திரவத்தை தொடாது. அருவருப்பு என்பது நம்மை காப்பாற்றிக்கொள்ள மனிதர்களிடம் மட்டும் இருப்பதில்லை. விலங்குகளிடமும் இருக்கும்.
இந்த அருவருப்பு நம்மை அரசியல் முடிவுகள் கூட எடுக்க வைக்கும். மிகவும் அருவருப்பு படக்கூடிய மக்கள் பெரும்பாலும் பழமைவாதிகளுக்கே ஓட்டு போடுவார்கள்.
அதேபோல் ஒரு பாலுறவை ஏற்று கொள்வது, மற்ற நாட்டு மக்களை ஏற்று கொள்வது போன்றவைகளும் அருவருப்பின் அடிப்படையில்தான் முடிவாகும். அருவருப்பு அதிகம் உள்ளவர்கள் நீண்ட நேரம் குழாய் முன்னால் நின்று கைக்கழுவதை விரும்ப மாட்டார்கள்.
ஹைட்டி மற்றும் எத்தியோபியாவில் மக்களின் அறிவு மற்றும் விழிப்புணர்வைக் காட்டுலும் அருவருப்பு உணர்வே அவர்களை கைகளை கழுவ வைக்கிறது என நடத்திய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.
தூய்மையாக வைத்து கொள்வது
கடந்த சில வாரங்களாக அனைத்து தரப்பினரும் கை கழுவதைப் பற்றி நிறைய கருத்துகளைக் கூறியுள்ளதை பார்க்க முடியும். பிரபலங்கள் அனைவரும் கைகளை எப்படி கழுவ வேண்டும் என்பதை விளக்கி காணொளி வெளியிட்டுள்ளதையும் பார்க்க முடியும். ஆனால் கை கழுவும் பழக்கம் அதிகம் இல்லாத நபரை எவ்வாறு இந்த பழக்கத்திற்குள் கொண்டுவருவது?
கை கழுவும் பழக்கத்தை வித்தைபோல் இல்லாமல் அவர்களுக்குள் நாம் அருவருப்பை விதைத்தாலே போதுமானது.
2009ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் மெக்வாரி பல்கலைகழகத்தில் ஸ்டீவன்சன் மாணவர்களை வைத்து ஆய்வு ஒன்றை நடத்தினார்.
மாணவர்களிடம் அவர்கள் கைக்கழுவும் பழக்கம் மற்றும் அருவருப்பு குணத்தைப் பற்றி கேட்டனர். பின்னர் அவர்களை ஒரு கல்வி தொடர்பான காணொளி, ஒரு போராட்ட காணொளி மற்றும் ஓர் இயற்கை சம்பந்தபட்ட காணொலி ஆகியவற்றிலிருந்து ஒன்றை பார்க்க கூறினார்.
ஒரு வாரம் கழித்து அவர்கள் அனைவரையும் மீண்டும் அழைத்து ஆன்டிபேக்டீரியல் டிஷ்யூ மற்றும் கைகளை கழும் ஜெல் இருக்கும் இடத்திற்கு வரக் கூறினார். அவர்கள் சில அருவருக்கதக்க வீடியோக்களை பார்க்கவைக்கப்பட்டார்கள்.
பின்னர் ஒரு தட்டிலிருந்து திண்பண்டத்தை எடுத்து சாப்பிட கூறினார். யாரும் சாப்பிடவில்லை. இந்த ஆய்வின் மூலம் அருவருப்பை தூண்டும் காட்சிகள் பார்த்தால் அவர்கள் கைகளை நன்கு கழுவுவார்கள் என கண்டறியப்பட்டது.
நல்ல பழக்கம்
ஒரு விஷயத்தை நடைமுறைப்படுத்தும்போது அது நமக்கு பழக்கம் ஆகி விடுகிறது. இப்போது நாம் கொரோனா தொற்றின் காலக்கட்டத்தில் உள்ளோம். ஆனால் இந்த கை கழுவும் பழக்கத்தை நாம் விடாமல் வைத்திருப்போமா எனபதே கேள்வி என்கிறார் ஆங்கர்.
கோவிட்-19 உண்டாக்கும் விளைவு என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் இனி எந்த பிரபலமும் தாங்கள் வெகு நாட்களாக கை கழுவவில்லை என சொல்லமாட்டார்கள்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:













