You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கொரோனா வைரஸ்: இணைய வேகத்தைக் கூட்டுவது எப்படி? - நிச்சயம் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்
உலகம் முழுவதும் பரவலாக எழும் குற்றச்சாட்டு இணைய வேகம் முன்பு போல இல்லை என்பதுதான்.
அதாவது அனைத்து நாடுகளிலும் பெரும் எண்ணிக்கையிலான ஊழியர்கள் வீட்டிலிருந்து இணையம் பயன்படுத்துகிறார்கள், பலருக்கு விடுமுறை கொடுக்கப்பட்டிருப்பதால் அமேசான், நெட்ஃப்ளிக்ஸில் படம் பார்ப்பதும் அதிகரித்து இருக்கிறது.
தங்களது இணையச் சேவையை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 20 சதவீதம் அதிகரித்துள்ளதாகப் பிரிட்டனின் ஓபென் ரீச் நிறுவனம் கூறுகிறது.
இப்படியான சூழலில் இணைய வேகம் முன் எப்போதும் இல்லாத அளவுக்குக் குறைந்திருக்கிறது எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்தியாவில் டெலிபோன் நிறுவனங்களை ஒழுங்குபடுத்தும் ட்ராய் போல பிரிட்டனின் ஆஃப்காம் அமைப்பு (Ofcom) இணைய வேகத்தைச் சீராக்க சில ஆலோசனைகளை வழங்கி உள்ளது.
எளிமையாக இருக்கும் அந்த ஆலோசனைகளைக் கடைப்பிடிப்பதனால் இணைய வேகத்தைக் கூட்ட முடியும் என்கிறது ஆஃப்காம்.
- கொரோனா தொற்று குறித்த முக்கிய சந்தேகங்களும், அதற்கான பதில்களும்
- கொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி? - விரிவான அறிவியல் விளக்கம்
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா வைரஸ்: தமிழ்நாட்டில் எப்படி சிகிச்சையளிக்கிறார்கள் மருத்துவர்கள்?
- கொரோனா: உலக நாடுகளின் அச்சமும், பின்பற்றும் வழிமுறைகளும்
மைக்ரோவேவ் ஓவென்
குறிப்பாக மைக்ரோவேவ்ஓவென் பயன்படுத்தும் போது வீடியோ அழைப்புகள் செய்வதோ அல்லது ஹெச்.டி தரத்தில் படங்களைத் தரவிறக்கம் செய்வதோ வேண்டாம் என்கிறது ஆஃப்காம் நிறுவனம்
ஒய். ஃபை சிக்கெனல்களைக் குறைக்கும் ஆற்றல் மைக்ரோவேவ் ஓவன்களுக்கு இருப்பதாகக் கூறுகிறது ஆஃப். காம் நிறுவனம்.
இதுபோல இணையம் மட்டும் அல்லாமல் கைப்பேசிகள், லேண்ட்லைன் தொடர்பான சில அடிப்படையான ஆலோசனைகளை ஆஃப்காம் நிறுவனம் வழங்கி உள்ளது. இது உங்களுக்கும் பயன்படலாம்.
- இன்டர்நெட் ரூட்டரை அதற்கு வரும் சிக்னலில் தாக்கம் செலுத்தம் பொருள்களுக்கு அருகில் வைக்க வேண்டாம். இன்டர்நெட் ரூட்டரிலிருந்து வரும் சிக்னல்களில் தாக்கம் செலுத்தும் ஆற்றல் கார்ட்லெஸ் ஃபோன்கள், ஹாலொஜென் விளக்குகள், கம்ப்யூட்டர் ஸ்பீக்கர்கள், தொலைக்காட்சிகள் ஆகியவற்றுக்கு உண்டு. அதனால் இணைய ரூட்டரை இதன் அருகில் வைக்க வேண்டாம் என்று ஆலோசனை தருகிறது ஆஃப்காம்.
- வீடியோ கான்ஃபரன்சிங் கால்களின் போது தேவையான போது மட்டும் வீடியோவை ஆன் செய்யுங்கள். பெரும்பாலும் ஆடியோவை மட்டுமே பயன்படுத்துங்கள். இது உங்களது கான்ஃபரன்சிங் கால் தடைப்படாமல் இருக்க உதவும்.
- சிறந்த ப்ராட்பேண்ட் வேகத்திற்கு ஈதர்நெட் (ethernet) கேபிள்களை நேரடியாக உங்களது கணிப்பொறியில் இணைத்துப் பயன்படுத்துங்கள்.
- கூடமானவரைப் பிறரை அழைக்க லேண்ட்லைனை பயன்படுத்த ஆலோசனை வழங்குகிறது ஆஃப்காம். கைப்பேசியில் அழைக்க வேண்டுமானால் வைஃபை காலிங் (Wifi Calling Setting)ஐ ஆன் செய்துகொள்ளக் கூறுகிறது ஆஃப்காம் அமைப்பு.
- கைபேசி மூலம் நேரடியாக அழைப்பதை தவிர்க்கும்படி கூறும் அந்நிறுவனம், ஃபேஸ்டைம், ஸ்கைப் மற்றும் வாட்ஸ் ஆப் பயன்படுத்தி வாய்ஸ் கால் செய்யலாம் என்கிறது.
- அதுபோல வைஃபை ரூட்டருடன் இணைக்கப்பட்டிருக்கும் தேவையற்ற சாதனங்களின் இணைப்பை துண்டிக்கும்படியும் ஆலோசனை வழங்கி உள்ளது அந்நிறுனம்.
- வைஃபை உடன் அதிகமான சாதனங்கள் இணைக்கப்பட்டிருந்தால் இணைய வேகம் குறையும் என்கிறது அந்நிறுவனம்.
- ஸ்மார்ட்ஃபோன், டேப்லட் ஆகியவை பேக்ரவுண்டில் இயங்கிக் கொண்டிருக்கும். அதனால், அந்த சாதனங்களை நீங்கள் பயன்படுத்தாத போது வைஃபையை ஆஃப் செய்து வையுங்கள்.
நெட்ஃப்ளிக்ஸ், ஃபேஸ்புக் எடுத்துள்ள முயற்சிகள்
ஆஃப்காம் மட்டும் அல்ல சர்வதேச அளவில் பல நிறுவனங்கள் இணைய வேகத்தைச் சீர்படுத்த தங்களால் ஆன முயற்சிகளில் இறங்கி உள்ளன.
ஃபேஸ்புக், நெட்ஃப்ளிக்ஸ், டிஸ்னி மற்றும் யூ -ட்யூப் தங்களது வீடியோ தரத்தைக் குறைத்துள்ளது. வீட்டில் இருப்போர் இந்த நிறுவனங்களில் காணொளியைத்தான் அதிகம் நுகர்வதால் வீடியோ தரத்தை ஓரளவு குறைப்பது கூட மிகப்பெரிய அளவில் தாக்கத்தைச் செலுத்தும்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: