You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'கோபமும், வெறுப்பும்கூட மகிழ்ச்சியைத் தரலாம்' - சொல்கிறது புதிய ஆய்வு
விரும்பும் உணர்ச்சிகளை மனதால் அனுபவிக்க முடிந்தால் மக்கள் மகிழ்ச்சியுடன் இருப்பார்கள்- அந்த உணர்ச்சி கோபம் வெறுப்பு என விரும்பத்தகாத உணர்ச்சிகளாக இருந்தாலும் பரவாயில்லை என ஒரு ஆய்வு கூறியுள்ளது.
மகிழ்ச்சி என்பது, வெறுமனே இன்பத்தை அனுபவிப்பது மற்றும் வலியைத் தவிர்ப்பது மட்டுமல்லாமல் அதற்கும் மேலானது என ஒரு சர்வதேச ஆராய்ச்சிக் குழுவின் ஆய்வு கண்டுபிடித்துள்ளது.
எதிர்மறை உணர்ச்சிகளை அதிகளவு உணர்ந்தால், மகிழ்ச்சியுடன் இருக்கலாம் என ஆய்வு கூறுகிறது.
அமெரிக்கா,பிரேசில், ஜெர்மனி, சீனா, இஸ்ரேல், கானா, போலாந்து, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 2,300 பல்கலைக்கழக மாணவர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
என்ன உணர்ச்சியை விரும்பினார்கள் என்றும் மற்றும் என்ன உணர்ச்சியை அனுபவித்தார்கள் என்றும் பங்கேற்பாளர்களை ஆராய்ச்சியாளர்கள் கேட்டுள்ளனர்.
மக்கள், வாழ்க்கை திருப்தியை எப்படி மதிப்பிடுகிறார்கள் என்பதை இதை வைத்து ஒப்பீட்டு பார்க்கப்பட்டது.
தாங்கள் விரும்பியதற்கு நிகராக அனுபவித்த உணர்ச்சிகள் இருந்தால் மக்களின் வாழ்க்கை திருப்தியுடன் இருக்கும் என ஆராச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
எதிர்மறை உணர்வுகள்
நீங்கள் விரும்பும் உணர்ச்சியை உங்களால் அனுபவிக்க முடிந்தால், நீங்கள் மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள். சோகம், வெறுப்பு என அந்த உணர்வு விரும்பத்தகாத உணர்வாக இருந்தாலும் பரவாயில்லை என ஜெருசலமின் ஹீப்ரு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த முன்னணி ஆராய்ச்சியாளர் டாக்டர் மாயா தாமிர் கூறியுள்ளார்.
அன்பு போன்ற நேர்மறை உணர்ச்சிகளைக் குறைவாக உணர 11% மக்கள் விரும்புவதாகவும், 10% மக்கள் வெறுப்பு மற்றும் கோபம் போன்ற எதிர்மறை உணர்ச்சிகளை அதிகம் உணர விரும்புவதாகவும் இந்த ஆய்வு கூறியுள்ளது.
ஒரு மோசமான கணவரை விட்டுச் செல்ல விரும்பும் ஒரு பெண், அவ்வாறு செய்ய தயாராக இல்லை. காரணம் கணவரை குறைவாக நேசித்தால் அப்பெண் மகிழ்ச்சியாக இருக்கலாம் என ஒரு எடுத்துக்காட்டை தாமிர் கூறுகிறார்.
மோசமாக உணர்வது நல்லதாக இருக்கலாம்
விரும்பத்தகாத உணர்வுகள் என குறிப்பிடும் போது, இந்த ஆய்வானது கோபத்தையும் வெறுப்பையும் மட்டுமே மதிப்பீடு செய்கிறது.
ஆனால், பயம், குற்றவுணர்வு, துக்கம் மற்றும் பதட்டம் போன்றவற்றை விரும்பத்தகாத உணர்வுகள் என கூறுவதற்கான அறிகுறிகள் இல்லை என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
மனரீதியாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த ஆய்வு பொருந்தாது என டாக்டர் மாயா தாமிர் கூறுகிறார். ``மனரீதியாகப் பாதிக்கப்பட்டவர்கள், மற்றவர்களை அதிக சோகமாகவும், குறைவான மகிழ்ச்சியுடனும் இருக்க விரும்புவார்கள். இது பிரச்சனையை அதிகரிக்கவே செய்யும்`` என மாயா கூறியுள்ளார்.
``மேற்கத்திய கலாச்சாரங்களில் எல்லா நேரமும் மிகவும் நன்றாகவே உணர வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள். பெரும்பாலான நேரங்களில் அவர்கள் நன்றாக உணர்ந்தாலும், இன்னும் சிறப்பாக உணர வேண்டும் என்று அவர்கள் நினைக்கலாம். அவை ஒட்டுமொத்தமாகக் குறைவான மகிழ்ச்சியை அவர்களுக்குக் கொடுக்கலாம்`` என்கிறார் மாயா.
பிற செய்திகள்:
- தேவாலயத்தில் பாவ மன்னிப்பு வழங்கும் கூண்டில் ஆபாசப்படம் எடுக்கப்பட்டதா?
- காணாமல் போகும் செளதி அரேபிய இளவரசர்கள்: காரணம் என்ன?
- 2017 புகைப்படப் போட்டி: நடுவர்களை வியக்க வைத்த புகைப்படங்கள் எவை?
- பிபிசி ஊழியர்களின் சொத்துகளை முடக்கியது இரான்
- 'சிறுநீர் கழிக்க ஆண்களுக்கும், பெண்களுக்கும் பொது கழிப்பிடம்' புதிய முயற்சி
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :