https://ichef.bbci.co.uk/images/ic/raw/p0lnpytp.jpg

நஞ்சான தண்ணீரும் சிதைந்த மலைகளும்

உலகம் சீனாவிடம் இருந்து வாங்கும் அரிய கனிமங்களின் விலை

நீங்கள் பயான் ஓபோவின் எல்லையில் நின்றால், நீங்கள் பார்ப்பது எல்லாம் வட சீனாவில் அமைந்துள்ள இன்னர் மங்கோலியாவின் விளைநிலங்களுக்குள் சிதைந்த சாம்பல் படிமங்களாகத்தான் இருக்கும்.

பல்லாண்டுக் காலமாக ஒரு நவீன புதையலின் தேடலால் பூமிப் பரப்பில் தோண்டப்பட்ட ஆழமான குழிகளில் இருந்து கரும் தூசு மேகங்கள் எழுகின்றன.

சீனாவின் இன்னர் மங்கோலியாவில் அமைந்துள்ள பயான் ஓபோவில் உள்ள ஒரு திறந்தவெளி சுரங்கத்தில் இருந்து தூசி எழுகிறது.

நீங்கள் இந்த நகரத்தைப் பற்றி கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள் - ஆனால் நமக்குத் தெரிந்த வாழ்க்கை பயான் ஓபோ இல்லாமல் ஸ்தம்பித்துவிடும்.

இந்த நகரம் அது அமைந்திருக்கும் மாவட்டத்தில் இருந்து அதன் பெயரைப் பெற்றுள்ளது. அரிய கனிமங்கள் என அறியப்படும் உலோக குழுக்களின் உலகளாவிய விநியோகத்தின் பாதி இங்குதான் உள்ளது. நான் பயன்படுத்தும் திறன்பேசிகள், ப்ளூடூத் ஸ்பீக்கர், கணினிகள். தொலைக்காட்சி திரைகள், மின் வாகனங்கள் என கிட்டத்தட்ட நாம் பயன்படுத்தும் அனைத்திலும் இவை முக்கிய அம்சங்களாக உள்ளன.

சீனா, இவற்றை வெட்டி எடுத்து சுத்திகரிப்பதில் மற்ற நாடுகளை விஞ்சிவிட்டது.

இந்த ஆதிக்கம், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் வரிகள் தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்துவது உள்ளிட்ட சூழ்நிலைகளில் பொருளாதார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் சீனாவுக்கு பெரிய சாதகத்தை வழங்குகிறது. ஆனால் அதற்கு சீனா மிகப்பெரிய விலையைக் கொடுத்துள்ளது.

இதைப் பற்றி மேலும் அறிய சீனாவின் இரு முக்கிய அரிய கனிம மையங்களான வடக்கில் உள்ள பயான் ஓபோவுக்கும் தெற்கின் ஜியாங்சி மாகாணத்தில் உள்ள கான்சோவிற்கும் சென்றோம்.

சீன தலைநகர் பெய்ஜிங், சீனாவின் மஞ்சள் நதி மற்றும் வடக்கில் பயான் ஓபோ, தெற்கில் கான்சோவின் சுரங்கப் பகுதிகளைக் காட்டும் சீனாவின் வரைபடம்

நாங்கள் கதிரியக்க சேறு நிரம்பிய மனிதனால் உருவாக்கப்பட்ட ஏரிகளைக் கண்டறிந்தோம். மாசடைந்த தண்ணீர் மற்றும் மண் பற்றிய புகார்களையும் கேள்விப்பட்டோம். இவை கடந்த காலங்களில் புற்றுநோய் மற்றும் பிறப்பு குறைபாடு சம்பவங்களுடன் தொடர்புபடுத்தப்படுகிறது. இந்தப் பயணங்கள் மிகவும் சவாலானவை.

அதன் சுற்றுச்சூழல் செயல்பாடுகளின் விமர்சனத்தை சீனா உணர்ச்சிபூர்வமாகப் பார்க்கிறது. நாங்கள் போலீசாரால் தடுக்கப்பட்டு கேள்விக்கு உள்ளாக்கப்பட்டோம், அதன் பின்னர் அடையாளம் தெரியாத சுரங்க முதலாளி ஒருவரிடம் மூன்று மணிநேர வாக்குவாதத்தில் சிக்கிக்கொண்டோம். நாங்கள் பதிவு செய்த காட்சிகளை அழிக்காமல் எங்களை அனுப்ப அவர் மறுத்துவிட்டார்.

பேட்டி அல்லது அறிக்கை தொடர்பான எங்களின் அழைப்புகளுக்குப் பதில் இல்லை, ஆனால் அரசாங்கம் இந்தத் துறையின் மீதான தனது மேற்பார்வையைப் பலப்படுத்த புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.

இந்த சுரங்கங்களைச் சுத்தம் செய்ய அதிகாரிகள் முயன்று வருவதாக விஞ்ஞானிகள் பிபிசியிடம் தெரிவித்தனர். இருந்தபோதிலும் வடக்கில் சீனாவின் சுரங்க நடவடிக்கைகள் அதிகரித்த வண்ணமே உள்ளது.

https://ichef.bbci.co.uk/images/ic/raw/p0lnpyv8.jpg

நியோடைமியம் மற்றும் டிஸ்ப்ரோசியம் என அழைக்கப்படும் அரிய கனிமங்களுக்கான வேட்டையில் இயந்திரங்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன. இவை மின் வாகனங்கள் முதல் கணினி ஹார்ட் டிஸ்க் வரை பல்வகையான நவீன தொழில்நுட்பங்களுக்கான சக்தி வாய்ந்த காந்தங்களை உருவாக்குவதில் பயன்படுகிறது.

இந்த அரிய கனிமங்களைக் கண்டுபிடிக்க, இயந்திரங்கள் மேல்நிரப்பரப்பை அடுக்கு அடுக்காக அகற்றுகின்றன, இது அதிக அளவிலான கன உலோகங்கள் மற்றும் கதிரியக்கப் பொருட்கள் அடங்கிய தீங்கான தூசியைக் கிளப்புகிறது.

https://ichef.bbci.co.uk/images/ic/raw/p0lnpyv8.jpg

நியோடைமியம் மற்றும் டிஸ்ப்ரோசியம் என அழைக்கப்படும் அரிய கனிமங்களுக்கான வேட்டையில் இயந்திரங்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன. இவை மின் வாகனங்கள் முதல் கணினி ஹார்ட் டிஸ்க் வரை பல்வகையான நவீன தொழில்நுட்பங்களுக்கான சக்தி வாய்ந்த காந்தங்களை உருவாக்குவதில் பயன்படுகிறது.

இந்த அரிய கனிமங்களைக் கண்டுபிடிக்க, இயந்திரங்கள் மேல்நிரப்பை அடுக்கு அடுக்காக அகற்றுகின்றன, இது அதிக அளவிலான கன உலோகங்கள் மற்றும் கதிரியக்கப் பொருட்கள் அடங்கிய தீங்கான தூசியைக் கிளப்புகிறது.

https://ichef.bbci.co.uk/images/ic/raw/p0lnpytf.jpg

கடந்த சில பத்தாண்டுகளின் செயற்கைக் கோள் புகைப்படங்கள் பயோ ஓபோ சுரங்கம் எவ்வாறு பரவியுள்ளது என்பதைக் காட்டுகிறது.

தலைநகர் பெய்ஜிங்கில் இருந்து 9 மணிநேர பயண தூரத்தில் உள்ள இன்னர் மங்கோலியாவின் பரந்த, வறண்ட நிலப்பரப்பில் இந்தச் சுரங்கம் அமைந்துள்ளது.

https://ichef.bbci.co.uk/images/ic/raw/p0lnpytf.jpg

கடந்த சில பத்தாண்டுகளின் செயற்கைக் கோள் புகைப்படங்கள் பயோ ஓபோ சுரங்கம் எவ்வாறு பரவியுள்ளது என்பதைக் காட்டுகிறது.

தலைநகர் பெய்ஜிங்கில் இருந்து 9 மணிநேர பயண தூரத்தில் உள்ள இன்னர் மங்கோலியாவின் பரந்த, வறண்ட நிலப்பரப்பில் இந்தச் சுரங்கம் அமைந்துள்ளது.

சுரங்க கட்டடங்களுக்கு அருகே திறந்தவெளி சுரங்கங்களுடன் கூடிய பயான் ஓபோ சுரங்கப் பகுதியை செயற்கைக்கோள் புகைப்படங்கள் காட்டுகின்றன.

கடந்த 1999ஆம் ஆண்டின்படி, இந்த திறந்தவெளி சுரங்கங்கள் ஏற்கெனவே பெரும் குவியலான கழிவுகளை உற்பத்தி செய்துள்ளன.

பயான் ஓபோவுக்கு கிழக்கே புதிய திறந்தவெளி சுரங்கங்களுடன் சுரங்கப் பணிகள் விரிவடைந்து வருவதை செயற்கைக்கோள் புகைப்படங்கள் காட்டுகின்றன.

2013-ன் படி, புதிய திறந்தவெளி சுரங்கங்கள் மேற்குப் பகுதியில் திறக்கப்பட்டுள்ளன.

பெரிய குளமாக மாறிய சுரங்க குழிகள் தொடர்ந்து விரிவடைந்து வருகின்றன.
நாசா/யுஎஸ்ஜிஎஸ் லாண்ட்சாட்

கடந்த 25 ஆண்டுகளில் இந்தச் சுரங்கம் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது - சுரங்கம் தோண்டப்பட்ட இடம் விரிவடைய கழிவு குளங்களும் விரிவடைந்துள்ளன.

தென் கோடியில், கன்சோ சுரங்கத்தில் சிறிய, வட்ட வடிவிலான நச்சுக் கழிவுகள் நிரம்பிய கான்கிரீட் குளங்கள், உயரமான, சிதைந்த மலை உச்சிகளின் மீது அமைந்துள்ளன. இந்தக் குளங்கள் திறந்த நிலையிலே உள்ளன.

இவை "கழிவுக் குளங்கள்." இங்கு சுற்றியுள்ள மண்ணில் இருந்து அரிய கனிமங்களை எடுக்க டன் கணக்கான அம்மோனியம் சல்ஃபேட், அம்மோனியம் குளோரைட் மற்றும் இதர ரசாயனங்கள் செலுத்தப்படுகின்றன.

https://ichef.bbci.co.uk/images/ic/raw/p0lnpysn.jpg

ஒரு கட்டத்தில், சட்டவிரோதமான சில உள்பட, ஆயிரத்திற்கும் அதிகமான சுரங்கங்கள், இந்த மாவட்டம் முழுவதிலும் இருந்தன. ஒரு சுரங்கத்தில் இருந்து தேவையானதைப் பெற்ற நிறுவனங்கள் அடுத்த சுரங்கத்தை நோக்கிச் சென்றன.

அதன் பிறகு 2012இல் இவற்றை ஒழுங்குபடுத்தும் முயற்சியில் இறங்கிய அரசு, வழங்கப்பட்டு வந்த சுரங்க உரிமங்களின் எண்ணிக்கையைப் பெருவாரியாகக் குறைத்தது.

ஆனால் அந்தப் பகுதிக்கு ஏற்கெனவே கணிசமான பாதிப்புகள் ஏற்பட்டுவிட்டது. பல பத்தாண்டுகளுக்கு முந்தைய ஆய்வுகள் அரிய கனிமங்களை காடழிப்பு, மண்அரிப்பு, நதிகள் மற்றும் விளைநிலங்களில் ரசாயன கசிவு ஆகியவற்றுடன் தொடர்புபடுத்தப்படுகிறது.

உள்ளூர் விவசாயியான ஹுவாங் ஜியாகோங்கின் நிலத்தைச் சுற்றி நான்கு அரிய கனிம சுரங்கங்கள் உள்ளன. முறையற்ற சுரங்க நடைமுறைகளால் நிலச்சரிவுகள் ஏற்படுவதாக அவர் நம்புகிறார்.

“இங்கு நடக்கும் விஷயங்களின் மீதான அதிகாரிகளின் சகிப்புத்தன்மையும் செயலற்ற தன்மையும்தான்… என்னுடைய பார்வையில் நிலச்சரிவுகள் தொடர்ந்து நடப்பதற்குக் காரணமாக உள்ளது” என அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

https://ichef.bbci.co.uk/images/ic/raw/p0lnpysn.jpg

ஒரு கட்டத்தில், சட்டவிரோதமான சில உள்பட, ஆயிரத்திற்கும் அதிகமான சுரங்கங்கள், இந்த மாவட்டம் முழுவதிலும் இருந்தன. ஒரு சுரங்கத்தில் இருந்து தேவையானதைப் பெற்ற நிறுவனங்கள் அடுத்த சுரங்கத்தை நோக்கிச் சென்றன.

அதன் பிறகு 2012இல் இவற்றை ஒழுங்குபடுத்தும் முயற்சியில் இறங்கிய அரசு, வழங்கப்பட்டு வந்த சுரங்க உரிமங்களின் எண்ணிக்கையைப் பெருவாரியாகக் குறைத்தது.

ஆனால் அந்தப் பகுதிக்கு ஏற்கெனவே கணிசமான பாதிப்புகள் ஏற்பட்டுவிட்டது. பல பத்தாண்டுகளுக்கு முந்தைய ஆய்வுகள் அரிய கனிமங்களை காடழிப்பு, மண்அரிப்பு, நதிகள் மற்றும் விளைநிலங்களில் ரசாயன கசிவு ஆகியவற்றுடன் தொடர்புபடுத்தப்படுகிறது.

உள்ளூர் விவசாயியான ஹுவாங் ஜியாகோங்கின் நிலத்தைச் சுற்றி நான்கு அரிய கனிம சுரங்கங்கள் உள்ளன. முறையற்ற சுரங்க நடைமுறைகளால் நிலச்சரிவுகள் ஏற்படுவதாக அவர் நம்புகிறார்.

“இங்கு நடக்கும் விஷயங்களின் மீதான அதிகாரிகளின் சகிப்புத்தன்மையும் செயலற்ற தன்மையும்தான்… என்னுடைய பார்வையில் நிலச்சரிவுகள் தொடர்ந்து நடப்பதற்குக் காரணமாக உள்ளது” என அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

BBC

அரசுக்குச் சொந்தமான நிறுவனம் சட்டவிரோதமாக நிலத்தை அபகரித்துவிட்டதாக அவர் குற்றம்சாட்டுகிறார். அந்த நிறுவனம் பிபிசியின் கேள்விகளுக்குப் பதிலளிக்க மறுத்துவிட்டது.

"இந்த பிரச்னை நான் தீர்க்க முடியாத அளவிற்கு மிகப் பெரியது. இது அரசின் உயர்நிலையில்தான் கையாளப்பட வேண்டும்" என ஹுவாங் தெரிவித்தார்.

"எங்களைப் போன்ற சாமானிய மக்களிடம் பதில்கள் இல்லை... எங்களைப் போன்ற விவசாயிகள்தான் பாதிக்கப்படக் கூடியவர்கள். எளிமையாகச் சொல்ல வேண்டுமென்றால் நாங்கள் ஒரு பாதகமான சூழ்நிலையில் பிறந்தோம். இது மிகவும் துயரமானது" எனத் தெரிவித்தார்.

சீனாவில் பெருநிறுவனங்களுக்கு எதிராகச் சண்டையிடுவது அரிதானது மட்டுமல்ல ஆபத்தானதும்கூட - அவர்கள் சர்வதேச ஊடகத்திடம் பேசுவது அதைவிட அரிதானது. ஆனால் தனது புகார்கள் கேட்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் ஹுவாங் தனது வழக்கை உள்ளூர் இயற்கை வளங்கள் ஆணையத்திடம் எடுத்துச் சென்றுள்ளார்.

செயற்கைக் கோள் புகைப்படங்கள் ஹுவாங் கிராமம் மற்றும் நிலத்தைச் சுற்றியுள்ள சுரங்க குளங்களைக் காட்டுகின்றன. ஆறு கிலோமீட்டர் சுற்றளவில் குறைந்தபட்சம் நான்கு இடங்கள் தென்படுகின்றன.

கான்சோ பகுதியின் செயற்கைக்கோள் புகைப்படங்கள் சுரங்கப் பணிகளில் பயன்படுத்தப்படும் குளங்களைக் காட்டுகின்றன. விவசாயியின் வீடு மற்றும் நிலத்தைச் சுற்றி எத்தனை உள்ளன என்பது குறிப்பிட்டுக் காட்டப்பட்டுள்ளது.

ஹுவாங்கை நாங்கள் பேட்டி எடுத்தபோது சில நபர்கள் எங்களைச் சூழ்ந்துவிட்டனர். அவர்கள் அந்த அரிய கனிம நிறுவனத்தின் இலச்சினை பொறிக்கப்பட்ட சீருடையை அணிந்திருந்தனர். குறைந்தது 12 பேர் அவர்களின் வாகனங்களைப் பயன்படுத்தி எங்கள் காரை செல்லவிடாமல் தடுத்தனர்.

சிறிது நேரம் கழித்து ஜியாங்ஸி என்கிற சீன அரிய கனிம நிறுவனத்தின் உள்ளூர் மேலாளர் என அடையாளபடுத்திக் கொண்ட ஒருவர் வந்தார். அவர் ஹுவாங்கிடமும் எங்களிடமும் வாக்குவாதம் செய்தார். பேச்சுவார்த்தை நடத்துவதற்கான எங்கள் முயற்சிகள் மற்றும் அவர்களின் கருத்தைக் கேட்க நாங்கள் முன்வந்தபோதும் மூன்று மணிநேரத்திற்கு அவர் எங்களை விடவில்லை.

பயான் ஓபோ மற்றும் கான்சோவில் சுரங்கங்களைச் சுற்றி வாழ்பவர்கள் சுரங்கம் மீதான சீனாவின் "முதலில் வளர்ச்சி பின்னர்தான் தூய்மை" அணுகுமுறையால் பாதிக்கப்படுபவர்களாக இருக்கிறார்கள் என்கிறார் பேராசிரியரும் ரேர் எர்த் ஃப்ரான்டியர்ஸின் ஆசிரியருமான ஜூலி க்ளிங்கர். அந்த நிலை தற்போது மாறியுள்ளது, பாதிப்புகளைத் தடுக்க அவர்கள் கடுமையாக முயல்கிறார்கள் எனக் கூறும் ஜூலி விளைவுகள் தொடர்ந்து இருக்கும் என்றும் தெரிவித்தார்.

"இத்தகைய வளர்ச்சி மாடலின் உண்மையான மனித மற்றும் சுற்றுச்சூழல் விலை என்னவென்று அறிவது மிகவும் கடினமானது" என அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

பயான் ஓபோவில் உள்ள சுரங்கங்கள் அருகே குதிரைகள்

மிக மோசமான சுகாதார விளைவுகள் பயோ ஓபோவுக்கு தெற்கே பாடோவ் உள்ள மிகப்பெரிய குளமாக மாறிய சுரங்க குழிகளைச் சுற்றிக் காணப்படுகிறது. 2010க்கு முந்தைய பத்து ஆண்டுகளில் கிராம மக்கள் தண்ணீரில் அதிக அளவிலான ப்ளோரைட் மற்றும் ஆர்சனிக் நச்சுத்தன்மை உருவான எலும்பு மற்றும் மூட்டுச் சிதைவினால் பாதிக்கப்பட்டனர் என பேராசிரியர் க்ளிங்கர் கூறுகிறார்.

இவர்களில் பெரும்பாலானோர் 1950களில் சுரங்க கழிவுகளைக் கொட்டுவதற்காகக் கட்டப்பட்ட வெய்குவாங் ஏரிக்கு அருகே வாழ்ந்து வருகின்றனர். அன்றில் இருந்து கிராமத்தினரை அதிகாரிகள் அந்த இடத்தில் இருந்து இடம் மாற்றினார்கள். ஆனால் 11 கிமீ நீளமான இந்த குளம் தற்போதும் கதிரியக்க தோரியம் உள்ளிட்ட சாம்பல் களிமண் கழிவுகளால் நிரம்பியுள்ளன.

இந்த நச்சுக் கலப்பு மெல்ல நிலத்தடி நீருக்குள் ஊடுருவி மஞ்சள் நதியை நோக்கி நகர்வதாக ஆய்வுகள் கூறுகின்றன. இது சீனாவின் இரண்டாவது பெரிய நதி, நாட்டின் வடக்குப் பகுதிக்கு முக்கியமான குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது.

பாக்கெட் சாதனங்கள், மின் வாகனங்கள், சூரியமின் தகடுகள், எம்.ஆர்.ஐ கருவிகள் மற்றும் ஜெட் இயந்திரங்களுக்கான தேவை அதிகரிக்க, கவலையளிக்கக்கூடிய ஒரு புள்ளிவிவரத்தையும் பார்க்க வேண்டியுள்ளது - ஒரு டன் அரிய கனிமத்தை வெட்டி எடுப்பது 2,000 டன்கள் நச்சுக் கழிவுகளை உருவாக்குகிறது.

ஒரு டன் அரிய கனிமம் வெட்டப்படுவது, 2,000 டன்கள் நச்சுக் கழிவுகளை உருவாக்குவதைக் காட்டும் கிராபிக்ஸ்

வெளிநாடுகளில் தனது சுரங்க நடவடிக்கைகளை விரிவாக்கம் செய்யும் அதே வேளையில் அரிய கனிமங்களுகான அதன் அவசரம் ஏற்படுத்திய சுற்றுச்சூழல் தீங்குகளைச் சரி செய்ய சீனா தற்போது முயன்று வருகிறது.

ஆனால் எங்கு இந்த கனிமங்கள் வெட்டப்பட்டாலும், சரியான தீர்வுகள் இல்லாமல் நிலங்களும் மக்களின் வாழ்வும் ஆபத்தில்தான் இருக்கும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.

எனினும் பயான் ஓபோவில் உள்ள சில விவசாயிகள் உலகின் அரிய கனிம தலைநகரின் வாழ்க்கைக்குப் பழகிவிட்டனர்.

தங்களின் நிலத்தைச் சிதைத்து தண்ணீரை நஞ்சாக்கிய அந்த கனிமங்கள் வேலைவாய்ப்பையும் கொண்டு வந்துள்ளன.

"இந்த அரிய கனிமங்களால் தற்போது பணம் உள்ளது" என ஒரு விவசாயி கூறினார். "சுரங்கங்கள் ஒரு மாதத்திற்கு 5000 அல்லது 6000 யுவான்கள் (837 டாலர்; 615 யூரோ) வழங்குகின்றன."

நீண்ட காலமாக நாடோடி மக்களின் வசிப்பிடமாக இருந்த இந்தப் பகுதியில் பாரம்பரிய வாழ்வாதாரங்களில் ஒன்றான குதிரை வளர்ப்பில் பணத்தை இழந்ததாக அவர் தெரிவிக்கிறார். அதிக அரிய கனிமங்களுக்கான தேடலைத் தோண்டுபவர்கள் தொடர்கிற நிலையில், குதிரைகள் தற்போதும் சுரங்கத்திற்கு அருகில் உள்ள மேய்ச்சல் நிலங்களைச் சுற்றி வருகின்றன.

பச்சை வெங்காயத்தைப் பயிரிட்டவர் "விவசாயம் நன்றாக உள்ளது," எனத் தெரிவித்தார். "நீங்கள் பயிரை வளர்த்து விற்பனை செய்கிறீர்கள் - அவ்வளவு எளிமையானதுதான்" என்றார்.