டோக்யோ ஒலிம்பிக்: அசத்தல் ஆட்டத்தில் மேரி கோம், மனிகா, பி.வி. சிந்து

டோக்யோ ஒலிம்பிக் போட்டியின் மூன்றாவது தினமான இன்று, துப்பாக்கிச் சுடுதல் 10மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் மனு பாக்கர் மற்றும் யெஷஷ்வினி தேஸ்வால் வெற்றி வாய்ப்பை தவறவிட்டனர்பெற்றுள்ளார்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. ஜூலை 25ஆம் தேதி நேரலை நிறைவடைகிறது

    இத்துடன் இன்றைய நேரலையை நிறைவு செய்கிறோம்.

    பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கம் நாளை காலை மீண்டும் தொடங்கும். மேலதிகச் செய்திகளுக்கு முகப்புபக்கம் செல்லவும்.

    பக்கங்கள் வாயிலாகவும் செய்திகளை அறியலாம்.

  2. டோக்யோ ஒலிம்பிக் 2021: ஆஸ்திரேலிய அணியுடன் மோதிய இந்திய அணி அதிர்ச்சி தோல்வி

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

    டோக்யோ ஒலிம்பிக்கின் இரண்டாவது நாளான இன்று 1-7 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியை சந்தித்தது இந்திய ஹாக்கி அணி.

    ஆட்டம் தொடங்கியது முதலே விறுவிறுப்பாக ஆடிய ஆஸ்திரேலிய அணி அடுத்தடுத்து மூன்று கோல்களை அடித்து 4-0 என்ற கணக்கில் தனக்கான இடத்தை தக்க வைத்தது.

    இதைத்தொடர்ந்து இந்திய அணியின் ருபிந்தர் பால் சிங் ஒரு கோல் அடித்தார்.

    ஆனால், அதன் பிறகு இந்திய அணிக்கு சாதகமாக வாய்ப்பு அமையாத நிலையில், ஆஸ்திரேலியா தொடர்ந்து கோல் அடித்தது. ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 7-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

    முன்னதாக, நேற்றைய போட்டியில் நியூஸிலாந்து அணியை 3-1 என்ற கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்குள் இந்தியா நுழைந்தது.

    இருப்பினும் இன்றைய ஆட்டம் இந்தியாவுக்கு கைகொடுக்கவில்லை.

    இந்திய மகளிர் அணி நாளை நடைபெறும் இரண்டாவது தகுதிச்சுற்று போட்டியில் நெதர்லாந்து அணியை எதிர்கொள்கிறது.

  3. ஓ.பன்னீர்செல்வத்துடன் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் சந்திப்பு

    முருகன் பன்னீர்செல்வம்
    படக்குறிப்பு, டெல்லி வந்துள்ள தமிழக முன்னாள் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை அவர் தங்கியுள்ள தமிழ்நாடு இல்ல அறையில் சந்தித்த மத்திய இணை அமைச்சர் எல். முருகன்.

    டெல்லி வந்துள்ள தமிழக முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சர் எல். முருகன் இன்று மாலையில் சந்தித்துப் பேசினார்.

    ஓ.பன்னீர்செல்வம் டெல்லியில் தங்கியுள்ள தமிழ்நாடு அரசு விருந்தினர் இல்லத்தில் தான் மத்திய இணைச்சராக சமீபத்தில் பதவியேற்ற எல். முருகனும் தங்கியுள்ளார்.

    இதையடுத்து ஓ.பன்னீர்செல்வத்தை அவர் தங்கியுள்ள அறையில் எல். முருகன் சந்தித்துப் பேசினார். இது மரியாதை நிமித்தமான சந்திப்புதான் என்று முருகன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    டெல்லியில் நாளை பிரதமர் நரேந்திர மோதியை ஓ.பன்னீர்செல்வமும் தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் சந்தித்துப் பேச திட்டமிட்டுள்ளதாக ஏற்கெனவே அதிமுக தரப்பு கூறியுள்ள நிலையில், முருகன், பன்னீர்செல்வம் இடையிலான சந்திப்பு அரசியல் முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது.

  4. ஐபிஎல் 2021: மும்பை இண்டியன்ஸுடன் மோதும் சிஎஸ்கே அணி ஆட்டத்துடன் செப்டம்பர் 19ல் தொடங்கும் போட்டிகள்

    ஐபிஎல்

    பட மூலாதாரம், IPL 2021

    படக்குறிப்பு, சிஎஸ்கே அணிக்கும் மும்பை இண்டியன்ஸ் அணிக்கும் இடையிலான போட்டி செப்டம்பர் 19ஆம் தேதி துபாயில் நடைபெறவுள்ளது.

    ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறவுள்ள VIVO ஐபிஎல் 2021 போட்டிக்கான மீதமுள்ள அட்டவணையை வெளியிட்டுள்ளது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ).

    கொரோனா பெருந்தொற்று காரணமாக ஐபிஎல் போட்டியின் 14ஆவது சீசன் இந்த ஆண்டு மே மாதம் தள்ளிவைக்கப்பட்டது. இதுவரை 29 லீக் ஆட்டங்கள் மட்டுமே நடைபெற்றுள்ள நிலையில் மீதம் 31 போட்டிகள் நடைபெற வேண்டியுள்ளது.இந்த வரிசையில், 13 ஆட்டங்கள் துபாயிலும், 10 ஆட்டங்கள் ஷார்ஜாவிலும் 8 ஆட்டங்கள் அபு தாபியிலும் நடைபெறவுள்ளன.

    இது குறித்த தகவலை விரிவாக அறிய இங்கே சொடுக்கவும்.

  5. ஹிமாச்சல பிரதேசத்தில் திடீர் நிலச்சரிவால் சிதறிய மலைப்பாறைகள் - 9 பேர் பலி

    ஹிமாச்சல பிரதேசம்

    பட மூலாதாரம், @PBNS_India

    படக்குறிப்பு, ஹிமாச்சல பிரதேசம் கினாரில் ஏற்பட்ட நிலச்சரிவில் பாறைகள் உடைந்து விழுந்த இணைப்புப்பாலம்.

    ஹிமாச்சல பிரதேசத்தின் கினார் மாவட்டத்தில் பட்சேரி-சங்க்லா சாலை பகுதியில் திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில், மலையில் இருந்த பாறைகள் வெடித்துச்சிதறின.

    இதில் அந்த வழியாக சுற்றுலா பயணிகளுடன் வந்த டெம்போ மீது பாறைகள் விழுந்ததில் அதில் இருந்த 9 பயணிகள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் மூன்று பேர் காயம் அடைந்தனர்.

    இந்த நிலச்சரிவை சிலர் காணொளியாக பதிவு செய்து சமூக ஊடகங்களில் பகிர்ந்ததையடுத்து இந்த காட்சி வைரலாகி வருகிறது.

    அதில், மலைப்பகுதியின் மேலிருந்து திடீரென மிகப்பாறைகள் வெடிப்பது போலவும் அதைத்தொடர்ந்து அவை மிக மேகமாக சாலை நோக்கி விழுந்து ஓடுவது போலவும் காட்சிகள் இருந்தன. அந்த மலை பாதையை இணைக்கும் பாலம் மீது பாறைகள் விழுந்ததில் அது ஒரு நொடியில் அப்படியே தரைமட்டமான காட்சியும் பதிவாகியிருந்தது.

    இந்த சம்பவத்தையடுத்து காயம் அடைந்தவர்களை உடனடியாக காவல்துறையினரும் தீயணைப்பு வீரர்களும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஹிமாச்சல பிரதேச அரசு பிரதமரின் நிவாரண நிதிதியில் இருந்து ரூ. 2 லட்சமும் காயம் அடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரமும் வழங்குவதாக அறிவித்துள்ளது.

    YouTube பதிவை கடந்து செல்ல
    Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது YouTubeபதிவில் விளம்பரங்கள் இருக்கக்கூடும்

    YouTube பதிவின் முடிவு

  6. டோக்யோ ஒலிம்பிக்: அசத்தல் ஆட்டத்தில் மேரி கோம், மனிகா பத்ரா, பி.வி.சிந்து, பரணிதரன், பிபிசி தமிழ்

    டோக்யோ ஒலிம்பிக் 2020

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, மேரி கோம்
    டோக்யோ ஒலிம்பிக் 2020

    பட மூலாதாரம், ANNE-CHRISTINE POUJOULAT / Contributor

    படக்குறிப்பு, மனிகா பத்ரா

    டோக்யோ ஒலிம்பிக்கில் மகளிர் குத்துசண்டை போட்டியில் 51 கிலோ எடைப்பிரிவின் முதல் சுற்றில் டொமினிகாவின் மிக்குவேலினா ஹெமாண்டெஸை வீழ்த்தி இந்தியாவின் மேரி கோம் வெற்றி பெற்றுள்ளார்.

    முதல் சுற்றில் 4-1 என்ற கணக்கில் வென்றதன் மூலம் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு இந்தியாவின் மேரி கோம் தகுதி பெற்றுள்ளார்.

    கொலம்பியாவின் வெலேனிகா விக்டோரியாவை வரும் 29ஆம் தேதி மேரி கோம் எதிர்கொள்ளவிருக்கிறார்.

    38 வயதாகும் மேரி கோம், ஆறு முறை உலக சாம்பியன் பட்டத்தை பெற்றவர். அதுமட்டுமின்றி 2012இல் நடந்த லண்டன் ஒலிம்பிக்கிலும் அவர் தங்கம் வென்றார்.

    முதல் சுற்று ஆட்டத்தில் அவர் வீழ்த்திய டொமினிகா வீரரும் 23 வயதானவருமான மிக்குவேலினா ஹெமாண்டெஸ், வளர்ந்து வரும் வீரராக அறியப்படுகிறார். 2019ஆம் ஆண்டில் இவர் அந்நாட்டுக்கு வெண்கல பதக்கம் பெற்றுத் தந்தார்.

    மற்ற விளையாட்டுகள் நிலவரம்டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் மனிகா பத்ரா இரண்டவாது சுற்றில் அசத்தலான வெற்றியை தன்வசமாக்கினார்.

    இந்திய பேட்மிண்டன் நட்சத்திரம் மற்றும் ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற வீராங்கனை பி.வி. சிந்து, ஒற்றையர் குரூப் சுற்றில் இஸ்ரேலின் க்செனியா பொலிகார்போவாவை 21-7, 21-10 என்ற கணக்கில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் மனிகா பத்ரா வெற்றி பெற்றுள்ளார்.உக்ரைன் வீராங்கனை மார்கரைட்டாவை 4-3 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி, மனிகா பத்ரா வெற்றியடைந்துள்ளார்.

    டென்னிஸ் முதல் சுற்று மகளிர் இரட்டையர் ஆட்டத்தில் சானியா மிர்ஸாவும், அங்கிதா ரெய்னாவும் யுக்ரேனின் கிச்நொக் இரட்டையர்களிடம் தோல்வி அடைந்தனர்.

    இந்திய துப்பாக்கி சுடும் வீரர்கள் தீபக் குமார், திவ்யான்ஷ் சிங் பன்வார் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் ஆடவர் இறுதி போட்டிக்குள் நுழைய தகுதி பெறவில்லை. ஜப்பானின் அசாகா துப்பாக்கி சுடுதல் மையத்தில் நடைபெற்ற போட்டியில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவு இறுதி ஆட்டத்தில் பங்கேற்க இந்தியாவை சேர்ந்த மனு பாக்கர், யஷாஸ்வினி தேஸ்வால் தகுதி பெறவில்லை. ஆடவர் லைட் வெயிட் இரட்டையர் துடுப்பு படகு போட்டியில், இந்தியாவின் அர்ஜுன், அர்விந்த் 3-வது இடம் பிடித்து அரையிறுதிக்கு தேர்வானார்.

    ஆடவருக்கான டேபிள் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த சதயன் ஞானசேகரன் இரண்டாவது சுற்றில் தோல்வி அடைந்தார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  7. பிரதமர் மோதியுடன் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் நாளை சந்திப்பு

    பன்னீர்செல்வம்

    பட மூலாதாரம், O.Paneerselvam

    படக்குறிப்பு, ஓ. பன்னீர்செல்வம், அதிமுக தலைமை ஒருங்கிணைப்பாளர்

    தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, முன்னாள் துணை முதல்வரும் அதிமுக தலைமை ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் டெல்லியில் நாளை பிரதமர் நரேந்திர மோதியை சந்திக்க திட்டமிட்டுள்ளனர்.

    இதையெொட்டி டெல்லிக்கு இன்று பிற்பகலில் வந்த ஓ.பன்னீர்செல்வம், சாணக்கியபுரியில் உள்ள தமிழ்நாடு அரசு விருந்தினர் இல்லத்தில் தங்கியுள்ளார். டெல்லி மீனா பாக் பகுதியில் உள்ள தமது மகனின் வீட்டுக்குச் செல்லவும் அவர் திட்டமிட்டுள்ளார்.

    இபிஎஸ், முன்னாள் அமைச்சர்களும் டெல்லி பயணம்:

    இதற்கிடையே, தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, தளவாய் சுந்தரம் உள்ளிட்டோரும் இன்று இரவு டெல்லி புறப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த குழுவினருடன் ஓ.பன்னீர்செல்வமும் இணைந்து நாளை இந்திய பிரதமர் நரேந்திர மோதி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்திக்கவிருப்பதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன.

    பிரதமர் நரேந்திர மோதியை நாடாளுமன்றத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் இந்த குழுவினர் சந்தித்துப் பேசவும் நேரம் கேட்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

  8. மேரி கோம் வெற்றி

    மகளிர் குத்துச் சண்டையின் 51கிலோ எடை பிரிவில் டோமினிகன் குடியரசை சேர்ந்த மிகுலினா ஹெனாண்டெஸுடன் தொடக்க சுற்றில் மோதிய மேரி கோம் வெற்றி பெற்றுள்ளார்.

    முன்னதாக இந்தியாவின் டேபிள் டென்னிஸ் வீராங்கனை மனிகா பத்ரா மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  9. மனு பாக்கர் வெற்றி வாய்ப்பை தவறவிட்டது எப்படி?, ஜான்வி மூலே, டோக்கியோவிலிருந்து

    மனு பக்கர்

    பட மூலாதாரம், ISSF-SPORTS

    ”நீங்கள் பல வருடங்களாக கார் ஓட்டுகிறீர்கள் ஒன்றும் ஆகவில்லை. அதன் பின் ஒரு நாள் உங்கள் கார் பஞ்சரானால் அது உங்கள் தவறா? ஆனால் நீங்கள் அதை எதிர்கொள்ளதான் வேண்டும்,” என்கிறார் துப்பாக்கிச் சுடுதல் பயிற்சியாளர் ரெளநக் பண்டிட்.

    ஒலிம்பிக் போட்டியில் இறுதி சுற்றுக்கு மிக நெருக்கத்தில் இருந்த மனு பாக்கர் அந்த வாய்ப்பை தவறவிட்டது எப்படி என்பதைதான் இவ்வாறு விவரிக்கிறார் அவரின் பயிற்சியாளர்.

    ஒலிம்பிக் போட்டியின் மூன்றாவது நாளில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவை சேர்ந்த மனு பாக்கர் 12ஆவது இடத்தை பிடித்தார்.

    மனு பாக்கர் வெற்றி வாய்ப்பை தவறவிட்டது எப்படி?

    முதலாவது சுற்றில் சிறப்பாக விளையாடிய மனு பாக்கருக்கு இரண்டாவது சுற்றில் அதிர்ச்சி காத்திருந்தது. அவர் பிஸ்டலின் லிவர் உடைந்து போனது. அதை சரி செய்ய அவருக்கு சிறிது நேரம் தேவைப்பட்டது.

    மனுவிடம் மற்றொரு துப்பாக்கி இருந்தது இருப்பினும் அதற்கு மாறுவதற்கு சில நேரங்கள் பிடிக்கும் என்கிறார் பயிற்சியாளர்.

    மனு பாக்கர் அதனை கடந்து வந்தாலும் இறுதிச் சுற்றுக்கு செல்ல தேவையான புள்ளிகளை பெற முடியவில்லை.

    “லிவர் என்பது துப்பாக்கியை லோட் செய்வதற்கான பேரலை திறக்க உதவும். அது உடைந்தால் உங்களால் சுட முடியாது,” என்கிறார் ரெளநக். “மாற்று துப்பாக்கியை பயன்படுத்தலாம் ஆனால் அதற்கேற்றாற்போல் அனைத்தையும் மாற்றம நேரம் எடுக்கும்.

    இது அனைத்தையும் கடந்து இறுதிச் சுற்று வாய்ப்பை வெறும் இரு புள்ளிகளில்தான் தவறவிட்டுள்ளார் மனு பாக்கர்” என்கிறார் பயிற்சியாளர்.

    “பொதுவாக இம்மாதிரியான சம்பவங்கள் நடைபெறுவது அரிது. இருப்பினும் இது துரதிஷ்டவசமானது” என்றார்.

  10. யார் இந்த மீராபாய் சானு?

    டோக்கியோ ஒலிம்பிக் பளு தூக்குதல் போட்டியில் இந்தியாவின் மீராபாய் சானு (26 வயது) வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவின் பதக்கக் கணக்கை தொடக்கிவைத்தார்.

    49 கிலோ எடைப் பிரிவின் இறுதிப் போட்டியில் கிளீன் அன் ஜெர்க் பிரிவில் அவர் முதல் முயற்சியில் 110 கிலோ தூக்க முயன்று அதை சரியாகச் செய்தார்.

    இரண்டாவது முயற்சியில் 115 கிலோ தூக்க முயன்றார். அதில் வெற்றி பெற்றதோடு அதன் மூலம் ஒரு புதிய ஒலிம்பிக் சாதனையையும் படைத்தார்.

    மூன்றாவது முயற்சியில் அவர் 117 கிலோ தூக்க முயன்றார். ஆனால், அதில் அவர் வெற்றி பெறவில்லை.

    ஸ்னாட்ச் பிரிவில், மீராபாய் 84 மற்றும் 87 கிலோ எடையை தூக்கினார். ஆனால் மூன்றாவது முறையாக 89 கிலோவை தூக்க முடியவில்லை.

    மொத்தம் அவர் தூக்கிய எடை 202 கிலோ.

  11. வந்துகொண்டிருக்கும் செய்தி, டென்னிஸ் பெண்கள் இரட்டையர் போட்டி: முதல் சுற்றில் சானியா தோல்வி

    டோக்யோ ஒலிம்பிக் போட்டியில் மூன்றாம் நாளான இன்று நடைபெற்ற டென்னிஸ் போட்டியின் பெண்கள் இரட்டையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் சானியா மிர்சா, அங்கிதா ரெய்னா ஜோடி உக்ரைனை சேர்ந்த எல் கிசேனோக், என் கிசேனோக் ஜோடியிடம் 6-0,6-7,8-10 என்ற செட் கணக்கில் தோல்வியுற்றனர்.

  12. ஆண்கள் டென்னிஸ் ஒற்றையர் போட்டியிலிருந்து ஆண்டி முரே விலகல்

    ஆண்டி முரே

    பட மூலாதாரம், Clive Brunskill / Staff

    பிரிட்டன் டென்னிஸ் வீரர் ஆண்டி முரே ஆண்கள் ஒற்றையர் போட்டியிலிருந்து விலகியுள்ளார்.

    தனது மருத்துவக் குழுவினரின் ஆலோசனைபடி தான் இந்த முடிவை எடுத்ததாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.

    “போட்டியிலிருந்து விலகுவது குறித்து வருத்தமடைகிறேன். இருப்பினும் என் மருத்துவக் குழுவினர் நான் மேற்கொண்டு விளையாட வேண்டாம் என தெரிவித்துள்ளனர். எனவே ஒற்றையர் பிரிவிலிருந்து விலகுகிறேன். இரட்டையர் பிரிவில் கவனம் செலுத்தவுள்ளேன்” என்று தெரிவித்தார் ஆண்டி முரே.

  13. பெண்கள் 10மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டி – ரஷ்யாவுக்கு தங்கம்

    பெண்கள் 10மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் ரஷ்யாவை சேர்ந்த வின்டலினா பட்சாராஷ்கினா தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

    பல்கேரியாவை சேர்ந்த ஆண்டோனேடா கோஸ்டாடினோவா வெள்ளிப் பதக்கமும், சீனாவை சேர்ந்த ஜியாங் ரென்ஷின் வெண்கலப் பதக்கமும் வென்றுள்ளனர்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  14. பி.வி. சிந்து வெற்றி

    டோக்யோ ஒலிம்பிக் போட்டியின் மூன்றாவது தினமான இன்று, மகளிர் ஒற்றையர் பேட்மிண்டன் போட்டியின் முதல் சுற்று ஆட்டத்தில் இஸ்ரேலை சேர்ந்த சேனியா போல்காரபோவாவை எதிர்த்து ஆடிய இந்தியாவை சேர்ந்த பி.வி. சிந்து வெற்றி பெற்றுள்ளார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  15. இந்தியாவின் மனு பக்கர், யெஷஸ்வினி தேஸ்வால் துப்பாக்கிச் சுடுதலில் வெற்றி வாய்ப்பை தவறவிட்டனர்

    டோக்யோ ஒலிம்பிக்கில் இன்று நடைபெற்ற பெண்கள் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கிச் சுடும் போட்டியில் இந்தியாவின் மனு பக்கர் மற்றும் யெஷஸ்வினி தேஸ்வால் முதல் எட்டு இடங்களை பிடிக்க தவறிவிட்டனர்.

    மனு பக்கர் 12ஆவது இடத்தையும், யெஷஸ்வின் 13ஆவது இடத்தையும் பிடித்தனர்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  16. வணக்கம் பிபிசி தமிழ் நேயர்களே!

    தமிழ்நாடு, இந்தியா, இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் நிகழ்வுகளை இந்தப் பக்கத்தில் தொடர்ந்து நேரலையாக வழங்குகிறோம். இணைந்திருங்கள். இந்த நாள் இனிதாகட்டும்.

    நேரலையை தொகுத்து வழங்குவது செய்தியாளர் விஷ்ணு ப்ரியா ராஜசேகர்.