நிறைவடைகிறது மார்ச் 4ஆம் தேதி நேரலை பக்கம். இதுவரை நடந்த நிகழ்வுகளின் முக்கிய துளிகள் இதோ...
வணக்கம் நேயர்களே!
இன்று காலையில் இருந்து இன்றைய நேரலை பக்கத்தில் பதிவான முக்கிய செய்திகளை இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம்.
- யுக்ரேன் மற்றும் ரஷ்யாவின் அதிகாரிகள் இடையிலான பேச்சுவார்த்தை மேலும் சில வாரங்களுக்கு தொடரலாம் என்று இரு தரப்பிலும் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.
- யுக்ரேனில் ரஷ்ய படையினர் நடத்தி வரும் தாக்குதலின்போது குறைந்தது மூன்று ரஷ்ய தளபதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.மோதல் களத்தில் இந்த தளபதிகள் முன்னணியில் படையை வழிநடத்தி வந்ததாக நம்பப்படுகிறது.
- யுக்ரேனுக்கு எதிரான ரஷ்யாவின் படையெடுப்பு தொடர்ந்துவரும் நிலையில், இந்தியாவை சேர்ந்த ஹர்ஜோத் சிங் என்பவர் யுக்ரேனில் துப்பாக்கிசூடு தாக்குதலுக்கு உள்ளானார். இதையடுத்து, அவர் கீயவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
- யுக்ரேனின் ஸாப்போரீஷியா அணுமின் நிலையத்தில் ரஷ்யா நடத்திய ஷெல் தாக்குதலில் சிலர் உயிரிழந்துள்ளதாகவும், சிலர் காயமடைந்துள்ளதாகவும் யுக்ரேன் வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- ரஷ்யாவில் பிபிசி நியூஸ் செயல்பாடுகளை கனத்த இதயத்துடன் நாங்கள் இடைநிறுத்துகிறோம் என்று பிபிசியின் இடைக்கால இயக்குநர் ஜோனாத்தன் மன்ரோ தெரிவித்துள்ளார்.
- டாய்சா வெலீ அல்லது டி.டபிள்யூ (DW) எனும் ஜெர்மனியின் சர்வதேச ஊடகத்தின் சேவைகளை அணுகுவதற்கு, ரஷ்யாவில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
- ஸாப்போரீஷியா அணுமின் நிலையம் மீதான ரஷ்யாவின் தாக்குதல், “ஆறு செர்னோபில்” அணு உலைகளுக்கு சமமான அழிவுகளை ஏற்படுத்தியிருக்கும் என, யுக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
- இந்திய குடிமக்களை மீட்பதற்கான ‘ஆபரேஷன் கங்கா’ திட்டத்தின் கீழ், 14 சிவிலியன் விமானங்கள் மற்றும் 3 C-17 IAF விமானங்கள் உட்பட யுக்ரேனின் அண்டை நாடுகளில் இருந்து 17 சிறப்பு விமானங்கள் இன்று நாடு திரும்பியுள்ளன.
- ரஷ்ய ஆயுதப்படை குறித்து “போலி” செய்திகளை பரப்புவோரை 15 ஆண்டுகள் வரை சிறையில் அடைக்கும் வகையிலான சட்டம், ரஷ்ய நாடாளுமன்றத்தின் மக்களவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
உங்கள் பகுதியின் சுவாரசியமான செய்திகளைப் பற்றி எங்கள் டிவிட்டர் கணக்கின் மூலம் தகவல் அளியுங்கள். நேற்றைய நேரலைப் பக்கத்தைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

பட மூலாதாரம், Getty Images

பட மூலாதாரம், Getty Images













