வணக்கம் நேயர்களே!
மார்ச் 3ஆம் தேதி, புதன்கிழமை வெளியான ரஷ்யா - யுக்ரேன் மோதல் தொடர்பான நேரலைப் பக்கம் முடிவடைந்தது.
இன்று நடந்தவற்றின் சுருக்கம்:
- யுக்ரேனில் உள்ள செர்னிவ் நகரில் நடந்த வான் தாக்குதலில் குறைந்தது 22 பேர் உயிரிழந்துள்ளனர்.
- ரஷ்யா மற்றும் யுக்ரேன் ஆகிய இருநாடுகளுக்கும் இடையே இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை என யுக்ரேன் பிரதிநிதி மிகெய்லோ போடோல்யாக் தெரிவித்துள்ளார்.
- யுக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலன்ஸ்கி மேற்கத்திய நாடுகளிடம் தங்களுக்கு போர் விமானங்களை அனுப்புமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
- படைவிலக்கல் மற்றும் நடுநிலைத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையில் யுக்ரேனில் மேற்கொள்ளப்படும் ரஷ்ய ராணுவ நடவடிக்கையின் நோக்கங்கள் நிறைவேற்றப்படும் என்று பிரான்ஸ் அதிபர் எமானுவேல் மக்ரோங்கிடம் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் தெரிவித்துள்ளார்.
- ரஷ்ய படைகள் யுக்ரேனின் கெர்சன் நகரில் உள்ள பிராந்திய நிர்வாக கட்டடத்தை முழுவதுமாக கைப்பற்றியுள்ளது. இதனை நிர்வாக தலைவர் ஹென்னடி லஹுடா தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
- படையெடுப்பு தொடங்கியதிலிருந்து சுமார் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் யுக்ரேனைவிட்டு வெளியேறிவுள்ளதாக ஐ.நா தெரிவித்திருந்தது.
- தங்களது குடிமக்களை ரஷ்யாவைவிட்டு வெளியேற உத்தரவிட்டுள்ளது ஃபிரான்ஸ்.
பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கம் காலையில் மீண்டும் தொடங்கும். மேலதிகச் செய்திகளுக்குமுகப்பு பக்கம்செல்லவும்.
பிபிசி தமிழின்பேஃஸ்புக்,ட்விட்டர்,இன்ஸ்டாகிராம்,யூடியூப்பக்கங்கள் வாயிலாகவும் செய்திகளை அறியலாம்.








