யுக்ரேன் மீதான ரஷ்ய தாக்குதல்: ஐ.நா தீர்மானத்துக்கு 141 நாடுகள் ஆதரவு, இந்தியா உள்பட 35 நாடுகள் புறக்கணிப்பு

இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நாளில்தான் யுக்ரேனின் கெர்சன் துறைமுகத்தில் ரஷ்ய படையினர் கடுமையான வான் தாக்குதல்கள் மற்றும் கார்கிவ் நகரில் ஏவுகணை, குண்டு தாக்குதல்களை நடத்தியிருக்கிறது. மரியூபோல் நகரில் இடைவிடாது நடத்தப்பட்ட தாக்குதலில் பலி எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என கருதப்படுகிறது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

ஆ. லட்சுமி காந்த் பாரதி

  1. மார்ச் 2 நேரலை நிறைவடைகிறது - புதிய நேரலையில் இணையுங்கள்

    மார்ச் 2ஆம், புதன்கிழமை வெளியான யுக்ரேன் போர் தொடர்பான நேரலைப் பக்கம் முடிவடைந்தது.

    மார்ச் 2ம் தேதி நடந்தவற்றின் சுருக்கம்.

    • யுக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பை கைவிட்டு தமது படைகளை ரஷ்யா திரும்பப் பெற வலியுறுத்தும் ஐ.நா தீர்மானத்துக்கு ஆதரவாக மொத்தமுள்ள 193 நாடுகளில் 141 நாடுகள் ஆதரவாக வாக்களித்துள்ளன. இந்தியா, சீனா, இலங்கை, பாகிஸ்தான் உள்பட 35 நாடுகள் வாக்கெடுப்பை புறக்கணித்துள்ளன.
    • யுக்ரேனில் உள்ள இந்தியர்களை பாதுகாப்பாக வெளியேற்றும் நடவடிக்கை குறித்து ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோதி தொலைபேசியில் பேசியுள்ளதாக இந்திய பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
    • யுக்ரேனின் மரியூபோல் நகரில் ரஷ்யா நடத்திய இடைவிடாத தாக்குதல்களால் நூற்றுக்கணக்கானோர் பலியாகியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
    • அமெரிக்க வான் பரப்பில் ரஷ்ய விமானங்கள் விரைவில் தடை செய்யப்படும் என்று பிபிசியின் அமெரிக்க செய்தி சேகரிப்பு இணை நிறுவனமான சிபிஎஸ் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
    • யுக்ரேன் தலைநகர் கீயவுக்கு மேற்கில் உள்ள ஜைட்டோமைர் நகரின் மீது நடத்தப்பட்ட விமானத் தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டதாக யுக்ரேன் அரசு அவசரகால சேவை கூறுகிறது.
    • யுக்ரேனின் கெர்சன் நகரில் சண்டை நடந்துகொண்டிருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார் அந்நகர மேயர்.
    • ஐரோப்பிய விமான நிறுவனமான விஸ் ஏர் (Wizz Air), யுக்ரேனிய அகதிகளுக்கு, அவர்களின் குறுகிய தூர விமானங்களில் 1,00,000 பேருக்கு இலவச இருக்கைகளை வழங்குவதாக அறிவித்துள்ளது.
    • கார்கிவ் மற்றும் கிழக்கு யுக்ரேனின் பிற பகுதிகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்கும் விஷயத்தில் நாங்கள் இந்திய அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்கிறோம் என்று இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் டெனிஸ் அலிபோவ் தெரிவித்துள்ளார்.
    • ரஷ்யாவில் உள்ள ஆரம்பப் பள்ளிக் குழந்தைகள், யுக்ரேனிய தூதரகத்தில் பூக்களை வைத்ததற்காகவும், " போர் வேண்டாம்" என்று பதாதைகள் வைத்திருந்ததற்காகவும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதாக அறிக்கைகள் மற்றும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
    • யுக்ரேன் மீதான ரஷ்யத் தாக்குதலின்போது அடிக்கடி பேசப்படும் பெயர்களுள் ஒன்று அலெக்ஸாண்டர் லூகஷென்கோ. ரஷ்யாவின் நட்பு நாடுகளுள் ஒன்றான பெலாரூஸின் அதிபர் இவர்.
    • யுக்ரேன் மீது ரஷ்யா நடத்திவரும் தாக்குதல் குறித்து அமெரிக்க நாடாளுமன்றத்தில் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், யுக்ரேன் மீது படையெடுத்தால் மேற்கு நாடுகள் எப்படி எதிர்வினையாற்றும் என்பது குறித்து புதின், தவறாக கணக்குப் போட்டுவிட்டார் என தெரிவித்தார்.
    • கார்கிவ் மற்றும் கிழக்கு யுக்ரேனின் பிற பகுதிகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்கும் விஷயத்தில் நாங்கள் இந்திய அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்கிறோம் என்று இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் டெனிஸ் அலிபோஃப் தெரிவித்துள்ளார்.

    பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கம் காலையில் மீண்டும் தொடங்கும். மேலதிகச் செய்திகளுக்குமுகப்பு பக்கம்செல்லவும்.

    பிபிசி தமிழின்பேஃஸ்புக்,ட்விட்டர்,இன்ஸ்டாகிராம்,யூடியூப்பக்கங்கள் வாயிலாகவும் செய்திகளை அறியலாம்.

    தாக்குதல் தொடங்கியதில் இருந்து ஒவ்வொரு நாளும் வெளியிடப்பட்டுவரும் இந்த நேரலைப் பக்கங்கள் இந்தப் படையெடுப்பில் நடந்த, நடந்துகொண்டிருக்கும் அனைத்தையும் காலவரிசைப் படி பார்ப்பதற்கான ஒரு மூலாதாரமாக விளங்கும்.

  2. ரஷ்யாவுக்கு எதிரான ஐ.நா தீர்மானம்: 141 நாடுகள் எதிர்ப்பு - இந்தியா, சீனா உள்பட 35 நாடுகள் புறக்கணிப்பு

    ஐக்கிய நாடுகள் சபை யுக்ரேன் ரஷ்யா

    பட மூலாதாரம், UNGA

    யுக்ரேன் மீதான ரஷ்யா பலப்பிரயோகம் செய்வதை நிறுத்து விட்டு அங்குள்ள தமது ராணுவத்தை திரும்பப் பெற வலியுறுத்தும் தீர்மானம் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் இன்று நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் 193 உறுப்பு நாடுகளில் 141 நாடுகள் ஆதரவாகவும் ரஷ்யா, சிரியா, பெலாரூஸ், வட கொரியா, எரிட்ரீயா ஆகிய ஐந்து நாடுகள் தீர்மானத்திற்கு எதிராகவும் வாக்களித்தன.

    ரஷ்யாவின் நெருங்கிய நட்பு நாடுகளான இந்தியா, சீனா, பாகிஸ்தான், இலங்கை உள்பட 35 நாடுகள் தீர்மானம் மீதான வாக்கெடுப்பை புறக்கணித்தன.

    இந்த தீர்மானத்துக்கு கட்டுப்பட வேண்டிய அவசியம் சம்பந்தப்பட்ட நாட்டுக்கு இல்லாவிட்டாலும், இது சம்பந்தப்பட்ட நாடு மீது உலக அளவிலான அரசியல் அழுத்தத்தைத் தரும்.

    இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நாளில்தான் யுக்ரேனின் கெர்சன் துறைமுகத்தில் ரஷ்ய படையினர் கடுமையான வான் தாக்குதல்கள் மற்றும் கார்கிவ் நகரில் ஏவுகணை, குண்டு தாக்குதல்களை நடத்தியிருக்கின்றனர். மரியூபோல் நகரில் இடைவிடாது நடத்தப்பட்ட தாக்குதலில் பலி எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என கருதப்படுகிறது.

    ஐ.நா. பாதுகாப்புச் சபையால் அழைக்கப்பட்ட ஒரு அரிய அவசரகால அமர்வு இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்ட செயல்பாட்டுடன் முடிவுக்கு வந்தது.

    இப்படியொரு அவசரகால அமர்வு இதற்கு முன்பு 1997ஆம் ஆண்டில் பாலத்தீனம், ஜெருசலேம் விவகாரத்தை விவாதிப்பதற்காக ஐ.நா சபையால் அழைக்கப்பட்டிருந்தது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

    ஐ.நா தீர்மானம் மீது ஆதரவாக வாக்களித்த நாடுகள் பச்சை வண்ணத்திலும், எதிராக வாக்களித்த நாடுகள் சிவப்பு வண்ணத்திலும், புறக்கணித்த நாடுகள் மஞ்சள் நிறத்திலும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றின் விவரம் இதோ.

    ஐ.நா வாக்கெடுப்பு

    பட மூலாதாரம், UNGA

  3. வந்துகொண்டிருக்கும் செய்தி, ரஷ்ய அதிபர் புதினுடன் தொலைபேசியில் பேசிய இந்திய பிரதமர் நரேந்திர மோதி

    ரஷ்ய அதிபர் புதின் பிரதமர் நரேந்திர மோதி

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, கோப்புப்படம்

    இந்திய பிரதமர் நரேந்திர மோதி, ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினுடன் தொலைபேசியில் பேசினார். யுக்ரேனில் ரஷ்யா மேற்கொண்டுள்ள ராணுவ படையெடுப்பால் ஏற்பட்டுள்ள சூழ்நிலை குறித்தும் அந்த நாட்டின் கார்கிவ் பகுதியில் சிக்கியுள்ள இந்திய மாணவர்கள் குறித்தும் இரு தலைவர்களும் பேசியதாக இந்திய பிரதமர் அலுவலகம் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இரு தலைவர்களும் யுக்ரேனின் மோதல் பகுதிகளில் உள்ள இந்தியர்களை பாதுகாப்பாக வெளியேற்றும் நடவடிக்கை குறித்தும் விவாதித்ததாக அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

  4. யுக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பால் வெளியேறும் மக்கள் - புகைப்பட தொகுப்பு

    யுக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பு தீவிரம் அடைந்து வரும் நிலையில், மேற்கு நோக்கி மக்கள் தங்கள் செல்லப் பிராணிகளுடன் வெளியேறி வருகிறார்கள்.

    யுக்ரேன்
    யுக்ரேன்
    யுக்ரேன்
  5. வந்துகொண்டிருக்கும் செய்தி, யுக்ரேன்: மரியூபோல் நகரில் பலத்த உயிர்சேதம் ஏற்படும் அச்சம் - களத்தகவல், ஜோயஸ் கன்ட்டர், பிபிசி நியூஸ் - லுவீவ்

    யுக்ரேனின் மரியூபோல் நகரில் பலத்த உயிர் சேதம் ஏற்படும் அச்சம் நிலவுவதாக களத்தில் இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

    ரஷ்யாவின் எல்லைக்கு அருகே உள்ள தென்கிழக்கு நகரம் மரியூபோல். இந்த நகரத்தின் மீது பல மணி நேரத்துக்கு தொடர்ச்சியான ஷெல் குண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இதில் ஏராளமான மக்கள் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

    இது பற்றி துணை மேயர் செர்கே ஓர்லோஃப் கூறுகையில், ஆற்றங்கரையோர மாவட்டம் இசுய பொதுவாக தனது தந்தை உள்பட 1,30,000 மக்கள் இங்கு வசிக்கிறார்கள். "இது கிட்டத்தட்ட முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளது" எனஅறு கூறினார்.

    "பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை எங்களால் கணக்கிட முடியவில்லை. ஆனால் குறைந்தது நூற்றுக்கணக்கான மக்கள் இறந்துவிட்டதாக நாங்கள் நம்புகிறோம். உடல்களை மீட்க நாங்கள் அங்கு செல்லவும் முடியாது," என்று அவர் பிபிசியிடம் கூறினார்.

    பீரங்கி, ராக்கெட் லாஞ்சர் தாக்குதல்கள், வான் தாக்குதல்கள், ஏவுகணை தாக்குதல் என பல வடிவங்களில் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. ரஷ்ய படையினர் இந்த நகரத்தை முற்றிலுமாக அழிக்க முயல்கிறார்கள்" என்று ஓர்லோவ் கூறுகிறார்.

    ரஷ்ய படைகள் எல்லா பக்கங்களிலும் பல கிலோ மீட்டர் தூரத்தில் இருப்பதாக அவர் தெரிவித்தார்.

    "யுக்ரேனிய ராணுவம் மிகவும் துணிச்சலானது. அதன் படையினர் நகரத்தை தொடர்ந்து பாதுகாப்பார்கள். ஆனால் ரஷ்ய ராணுவத்தின் பாணி கடற்கொள்ளையர்களைப் போல உள்ளது. யுக்ரேனிய படையினரை இலக்கு வைக்காமல் அவர்கள் முழு மாவட்டத்தையும் அழிக்கிறார்கள்," என்று ஓர்லோஃப் கூறுகிறார்.

    யுக்ரேன் ரஷ்யா தாக்குதல்

    பட மூலாதாரம்,

  6. ரஷ்ய படையெடுப்புக்கு எதிரான போராட்டத்திற்காக, ரஷ்ய ஆரம்ப பள்ளி குழந்தைகள் கைது

    ரஷ்யாவில் உள்ள ஆரம்பப் பள்ளிக் குழந்தைகள், யுக்ரேனிய தூதரகத்தில் பூக்களை வைத்ததற்காகவும், " போர் வேண்டாம்" என்று பதாதைகள் வைத்திருந்ததற்காகவும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதாக அறிக்கைகள் மற்றும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

    இந்த செய்தியை நோபல் பரிசு பெற்ற நோவயா கெஸெட்டா நாளிதழ் உறுதி செய்துள்ளது. மேலும் தற்போது அந்த குழந்தைகள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

    ரஷ்யாவின் அதிபர் மாளிகையான கிரெம்ளின், யுக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பு சம்பந்தமாக விமர்சனம் செய்வோர் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  7. வந்துகொண்டிருக்கும் செய்தி, யுக்ரேனில் ரஷ்ய படையெடுப்பால் இடிபாடுகளுக்கு மத்தியில் சிக்கியுள்ள குழந்தை

    State Emergency Service of Ukraine

    பட மூலாதாரம், State Emergency Service of Ukraine

    யுக்ரேனில் உள்ள கார்கிவ் பகுதியில் மீட்புப் பணியாளர்கள் ஏவுகணைகளால் தாக்கப்பட்ட குடியிருப்பு கட்டிடத்தின் இடிபாடுகளுக்கு மத்தியில் சிக்கியுள்ள ஒரு குழந்தையை தேடி வருவதாக, யுக்ரேனின் அவசரகால சேவையின் செய்தித் தொடர்பாளர் யெவ்ஹென் வாசிலென்கோ தெரிவித்துள்ளார்.

    அவர் கூறுகையில், "கார்கிவின் மத்திய பகுதியில், ஏவுகணைகளால் தாக்கப்பட்டுள்ளது " என்று முகநூலில் ஒரு காணொளி வெளியிட்டுள்ளார். அந்தக் காணொளியில், தெருக்களில் சிதறிக் கிடக்கும் இடிபாடுகள் மற்றும் அறுந்த நிலையிலுள்ள தொலைத்தொடர்பு கேபிள்களை காட்டியுள்ளார்.

    State Emergency Service of Ukraine

    பட மூலாதாரம், State Emergency Service of Ukraine

  8. அலெக்ஸாண்டர் லூகஷென்கோ: புதினின் நண்பர், 'ஐரோப்பாவின் கடைசி சர்வாதிகாரி' - யார் இவர்?

    அலெக்ஸாண்டர் லூகஷென்கோ

    பட மூலாதாரம், GETTY IMAGES

    படக்குறிப்பு, அலெக்ஸாண்டர் லூகஷென்கோ

    யுக்ரேன் மீதான ரஷ்யத் தாக்குதலின்போது அடிக்கடி பேசப்படும் பெயர்களுள் ஒன்று அலெக்ஸாண்டர் லூகஷென்கோ. ரஷ்யாவின் நட்பு நாடுகளுள் ஒன்றான பெலாரூஸின் அதிபர் இவர்.

    ரஷ்ய படைகள் தங்கள் மண்ணில் தங்கியிருக்க அனுமதி அளித்ததுடன், யுக்ரேன் தலைநகர் கீயவை நோக்கி ரஷ்ய படைகள் நகர்ந்து செல்வதற்கும் உதவியவர் என்று இவர் மீது குற்றம்சாட்டப்படுகிறது.

    ரஷ்ய அதிபர் புதினுடன் நெருக்கமான நட்பு கொண்டிருக்கும் லூகஷென்கோ, நாட்டின் பொருளாதார, அரசியல் மற்றும் ராணுவ தேவைகளுக்காக ரஷ்யாவை அதிகமாகச் சார்ந்திருக்கிறார். கடந்த சில ஆண்டுகளாகச் இந்தச் சார்புநிலை அதிகரித்திருப்பதாகவே அரசியல் நிபுணர்கள் கருதுகிறார்கள்.

    யுக்ரேனில் ரஷ்யைப் படையெடுப்புக்குத் தூண்டுகோலாகவும், ஆதரவாகவும் லூகஷென்கோ இருப்பதாக பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் லிஸ் ட்ரூஸ் குற்றம்சாட்டுகிறார்.

  9. வந்துகொண்டிருக்கும் செய்தி, யுக்ரேனில் உள்ள இந்திய தூதரகத்தின் இரண்டாவது அறிவுறுத்தல்

    யுக்ரேனின் கார்கிவில் உள்ள இந்தியர்கள் அங்கிருந்து கிடைக்கும் எல்லா வழிகளிலும் உடனடியாக வெளியேற வேண்டும் என யுக்ரேனுக்கான இந்திய தூதரகம் அறிவுறுத்தல் குறிப்பை வெளியிட்டுள்ளது.

    மேலும் முதலாவது அறிவுறுத்தல் குறிப்பில் இந்தியர்கள் செல்ல வேண்டிய இடத்தை மட்டும் தெரிவித்திருந்த இந்திய தூதரகம், இரண்டாவது குறிப்பில், பெசோசின் 11 கி.மீ, பேபே 12 கி.மீ, பெஸ்லியூடிவ்கா 16 கி.மீ என தூரத்தின் அளவை குறிப்பிட்டிருக்கிறது.

    மாணவர்கள் இந்த இடங்களுக்கு செல்ல வாகனங்களோ பேருந்தோ கிடைக்காவிட்டாலும் அவர்கள் ரயில் நிலையங்களில் இருந்தாலும் கூட அவர்கள் நடந்தே இந்த இடங்களுக்கு செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தல் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  10. கார்கிவில் உள்ள இந்தியர்களுக்கு ஆறு மணி நேரம் அவகாசம்- ரஷ்யா

    யுக்ரேனில் உள்ள கார்கிவ் நகரில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக வெளியேற 6 மணி நேரம் கால அவகாசம் தரப்படும் என ரஷ்யா தெரிவித்துள்ளது. இன்று இரவு கார்கிவில் பயங்கர தாக்குதல் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  11. வந்துகொண்டிருக்கும் செய்தி, யுக்ரேனில் சுமார் 2,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலி - யுக்ரேனிய அதிகாரிகள்

    யுக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பால் இதுவரை 2,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டதாக யுக்ரேன் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

    மேலும் மீட்பு படையினர் 10 பேர் கொல்லப்பட்டதாக, அவசரகால சேவை அமைப்பு தெரிவித்துள்ளது. யுக்ரேன் முழுவதும் ரஷ்ய பீரங்கி தாக்குதலால் ஏற்பட்ட 400க்கும் மேற்பட்ட தீ பற்றி எரிந்த இடங்களை மீட்புக் குழுவினர் அணைத்துள்ளனர் என்றும் 416 வெடிபொருட்கள் செயலிழக்கப்பட்டுள்ளன என்றும் யுக்ரேனிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

  12. யுக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பில் இதுவரை நடந்தது என்ன?

    • யுக்ரேனின் கார்கிவில் உள்ள இந்தியர்கள், எந்த சூழலில் இருந்தாலும் அவர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறி யுக்ரேனிய நகரங்களான பெசோச்சின், பாபே மற்றும் ரஷ்யாவின் பெஸ்லியுடோவ் நகருக்கு செல்லுமாறு இந்திய தூதரகம் கேட்டுக் கொண்டுள்ளது.
    • யுக்ரேனின் வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கில் தீவிரமான சண்டைகள் நடைபெற்று வருகின்றன. யுக்ரேனின் முக்கிய நகரங்களான கார்கிவ் மற்றும் கெர்சன் ஆகிய பகுதிகள் ரஷ்ய பீரங்கிகளால் குறி வைக்கப்பட்டது.
    • இன்று காலை கார்கிவ் நகரில் உள்ள காவல் குடியிருப்பு மற்றும் பல்கலைக்கழக கட்டடத்தை மீது ஏவுகணை ஒன்று தாக்கியது. இதில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • யுக்ரேனின் கெர்சனில் உள்ள மூலோபாய கருங்கடல் துறைமுக நகரம் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ளதாக ரஷ்யா கூறுகிறது, ஆனால் அப்பகுதியின் உள்ளூர் அதிகாரிகள் இதை மறுத்து, யுக்ரேனின் கட்டுப்பாட்டில் இருப்பதாகக் கூறுகின்றனர்.
    • யுக்ரேனிய வரலாற்றை அழிக்க ரஷ்யா முயற்சிப்பதாக அதிபர் வொலோடிமிர் ஸெலன்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார். மேலும் யுக்ரேனிய ராணுவத்தின் உறுதியை பாராட்டினார்.
    • யுக்ரேனுக்கு நிதி, ஆயுதங்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை அதிகரிப்பதாகவும், ரஷ்யா மீது பொருளாதார அழுத்தத்தை அதிகரிப்பதாகவும், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் உறுதியளித்தார்.
    • சுமார் 7,00,000 பேர் யுக்ரேனில் இருந்து வெளியேறி உள்ளதாகவும், ஐக்கிய நாடுகள் சபை அவர்களுக்கான உதவிகளை அதிகரிக்கவும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
    • யுக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பின் ஏழாவது நாள் தொடங்கியதால், எண்ணெய் மற்றும் எரிவாயு விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
    • ரஷ்யர்கள் பாராலிம்பிக்கில் 'நடுநிலை' போட்டியாளர்களாக பங்கேற்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
  13. வந்துகொண்டிருக்கும் செய்தி, யுக்ரேனில் உள்ள இந்திய தூதரகம் லுவீவ் நகருக்கு மாற்றம் - இந்திய வெளியுறவுத்துறை

    யுக்ரேனில் உள்ள இந்திய தூதரகம் கீயவில் இருந்து லுவீவ் பகுதி மாற்றப்பட்டதாக இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்ஷி தெரிவித்துள்ளார்.

    இந்த லுவீவ் நகரம், போலாந்தின் எல்லையில் இருந்து 70 கிமீ தொலைவில் உள்ளது.

    முன்னதாக கார்கிவில் உள்ள யுக்ரேன் நகரில் உள்ள இந்தியர்கள் அனைவரும் பாதுகாப்பு கருதி உடனடியாக வெளியேறுமாறு யுக்ரேனில் உள்ள இந்திய தூதரகம் கூறியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது

    YouTube பதிவை கடந்து செல்ல
    Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது YouTubeபதிவில் விளம்பரங்கள் இருக்கக்கூடும்

    YouTube பதிவின் முடிவு

  14. வந்துகொண்டிருக்கும் செய்தி, "எங்கள் கட்டுப்பாட்டில் யுக்ரேனின் மிகப்பெரிய அணுஉலை சுற்றுவட்டாரம்" - ரஷ்யா

    தெற்கு யுக்ரேனில் உள்ள ட்னீப்பர் நதி அமைந்துள்ள சபோரிஜியா நகருக்கு அருகே யுக்ரேனிய அணுமின் நிலையம் உள்ளது. அதன் சுற்றுவட்டாரம் தங்களுடைய கட்டுப்பாட்டில் இருப்பதாக சர்வதேச அணுசக்தி கண்காணிப்பு அமைப்பிடம் ரஷ்யா தெரிவித்துள்ளது.

    ரஷ்யாவின் கூற்றுப்படி, அந்த அணுஉலை ஊழியர்கள் தங்கள் வழக்கமான செயல்பாடுகளைத் தொடர்கின்றனர். யுக்ரேனின் அணுசக்தி நிலையம், அதன் அனைத்து மின் உற்பத்தி நிலையங்களுடனும் தொடர்பில் இருப்பதாகவும், அனைத்திலும் செயல்பாடுகள் தொடர்வதாகவும் கூறுகிறது.

    யுக்ரேனின் 15 அணுஉலைகளில் ஆறு உலைகளை ஜபோரிஜியா ஆலை கொண்டுள்ளது என்று சர்வதேச அணுசக்தி முகமை கூறுகிறது.

    இதற்கிடையே, ஜபோரிஜியா ஆலை அமைந்துள்ள எனர்கோடர் நகருக்கு அறுகே குடியிருப்புவாசிகள் ரஷ்ய படையெடுப்புக்கு எதிராக சாலை மறியலில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் உள்ளன.

    இதேவேளை, ரஷ்ய துருப்புக்களால் கைப்பற்றப்பட்ட வடக்கு யுக்ரேனில் உள்ள செர்னோபில் அணுமின் நிலையத்தின் வெளிப்புற பாதுகாப்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க யுக்ரேனின் அணுசக்தி அதிகாரிகள் சர்வதேச அணுசக்தி முகமையின் உதவியைக் கேட்டுள்ளனர்.

  15. யுக்ரேனின் தற்போதைய நிலவரம் என்ன?

    YouTube பதிவை கடந்து செல்ல
    Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது YouTubeபதிவில் விளம்பரங்கள் இருக்கக்கூடும்

    YouTube பதிவின் முடிவு

  16. வந்துகொண்டிருக்கும் செய்தி, யுக்ரேனில் உள்ள கார்கிவ் நிர்வாக கட்டடம் மீது தாக்குதல் - உள்ளூர் அதிகாரி

    யுக்ரேனின் கிழக்கு கார்கிவ் நகரில் உள்ள நகர நிர்வாக கட்டடத்தை ரஷ்ய ஏவுகணை தாக்கியதாக அந்த பகுதியின் துணை ஆளுநர் கூறியிருக்கிறார். இந்த பகுதி ரஷ்ய எல்லையில் இருந்து 30 மைல் தொலைவில் உள்ளது.

    இந்த நகரின் பல இடங்கள், கடந்த இரண்டு நாட்களாக கடுமையான பீரங்கி தாக்குதலுக்கு இலக்காகியுள்ளன.

    நேற்று இரவில் ரஷ்ய பராட்ரூப்பர் வீரர்கள் அந்த பகுதியில் தரையிறங்கிய பின்னர், நகரில் உள்ள வீதிகளில் ரஷ்ய படையினருக்கும் ஆயுதமேந்திய யுக்ரேனியர்கள் மற்றும் அந்நாட்டு வீரர்கள் இடையே துப்பாக்கி சண்டைகள் நடந்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  17. வந்துகொண்டிருக்கும் செய்தி, ரஷ்யர்கள் பாராலிம்பிக்கில் 'நடுநிலை' ஆக போட்டியிடுவார்கள் என அறிவிப்பு

    ரஷ்யா மற்றும் பெலாரூஸ் சேர்ந்த பாராலிம்பிக் விளையாட்டு வீரர்கள், வரவிருக்கும் பெய்ஜிங் 2022 பாராலிம்பிக் குளிர்கால விளையாட்டுப் போட்டிகளில் நடுநிலை போட்டியாளர்களாக பங்கேற்போம் என தெரிவித்துள்ளனர்.

    சர்வதேச பாராலிம்பிக் கமிட்டியின் அறிக்கையின்படி, போட்டியில் பங்கேற்க சீனாவுக்கு வந்துள்ள விளையாட்டு வீரர்கள் - பாராலிம்பிக் கொடியின் கீழ் போட்டியிடுவார்கள் என்றும் அவர்கள் நாடுகளின் பதக்க அட்டவணையில் சேர்க்கப்பட மாட்டார்கள் என்று தெரிவித்துள்ளனர்.

    இந்த முடிவை தற்போது இருக்கக்கூடிய சூழ்நிலையில், "அதிகபட்ச நடவடிக்கையாக" எடுத்து உள்ளோம் என்றும் பாராலிம்பிக் கமிட்டு கூறியுள்ளது.

    மேலும் 20 யுக்ரேனிய விளையாட்டு வீரர்கள் இதில் பங்கெடுக்க உள்ளனர், ஆனால் யுக்ரேனிய விளையாட்டு வீரர்கள் ரஷ்யா மற்றும் பெலாரூஸ் விளையாட்டு வீரர்களுக்கு எதிராக போட்டியிடாமல் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    குளிர்கால பாராலிம்பிக் வரும் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. போட்டிகள் சனிக்கிழமை முதல் நடைபெறும்.

  18. யுக்ரேனில் மேலும் ஒரு இந்திய மாணவர் உயிரிழப்பு - பஞ்சாபை சேர்ந்தவர்

    பஞ்சாப் யுக்ரேன்

    பட மூலாதாரம்,

    படக்குறிப்பு, சந்தன் ஜிண்டால்

    யுக்ரேனில் படித்து வந்த பஞ்சாப் மாநிலம் பர்னாலாவைச் சேர்ந்த மருத்துவ மாணவர் சந்தன் ஜிண்டால் இன்று பிற்பகல் அங்குள்ள மருத்துவமனையில் உயிரிழந்தார்.

    2018ஆம் ஆண்டில் அவர் மருத்துவ படிப்புக்காக யுக்ரேன் சென்றார். மூளைக்கு செல்லும் ரத்தப்பாதை தொடர்பான முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டு சந்தன் ஜிண்டால் கடந்த பிப்ரவரி 2ஆம் தேதியே அங்குள்ள உள்ளூர் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப்பிரிவில் சேர்க்கப்பட்டிருந்தார்.

    இந்த நிலையில் அவரது உயிர் பிரிந்து விட்டதாக இன்று தகவல் வெளியாகியுள்ளது.

    இது குறித்து தகவலறிந்த மாணவரின் குடும்பத்தினர், தங்களுடைய மகனின் சடலத்தை தாயகத்துக்கு கொண்டு வர உதவி செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.

    முன்னதாக, சந்தன் ஜிண்டாலின் உறவினர் யுக்ரேனில் இருந்து கடந்த பிப்ரவரி 7ஆம் தேதி தாயகத்துக்குத் திரும்பியிருந்தார்.

    தற்போது யுக்ரேனின் வான் பரப்பில் விமானங்கள் பறக்க தடை உள்ளதால், அவரது சடலத்தை சாலை வழியாக பக்கத்தில் உள்ள நாட்டுக்கு கொண்டு வந்து அங்கிருந்து விமானம் மூலம் இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

  19. வந்துகொண்டிருக்கும் செய்தி, கார்கிவில் உள்ள இந்தியர்கள் அனைவரும் உடனடியாக வெளியேற யுக்ரேனில் உள்ள இந்திய தூதரகம் அறிவிப்பு

    கார்கிவில் உள்ள யுக்ரேன் நகரில் உள்ள் இந்தியர்கள் அனைவரும் பாதுகாப்பு கருதி உடனடியாக வெளியேறுமாறு யுக்ரேனில் உள்ள இந்திய தூதரகம் கூறியுள்ளது.

    எந்த சூழ்நிலையில் இருந்தாலும் இந்தியர்கள் உடனடியாக பெசோச்சின், பாபே, பெஸ்லியுடோவ் ஆகிய பகுதிகளை உள்ளூர் மாலை நேரப்படி 6 மணிக்குள் அடையுமாறு இந்திய தூதரகம் அவசர அறிவுறுத்தல் குறிப்பை வெளியிட்டுள்ளது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  20. யுக்ரேனில் உள்ள இந்தியர்களை மீட்கும் ஆபரேஷன் கங்காவில் இணைந்த தேசிய பேரிடர் மீட்புப்படை

    யுக்ரேனில் இருந்து இந்திய மாணவர்களை வெளியேற்ற மத்திய அரசு தொடங்கியிருக்கும் ஆபரேஷன் கங்கா நடவடிக்கையில் தேசிய பேரிடர் மீட்புப் படையும் (NDRF) இணைந்துள்ளது.

    இந்த படையினர், யுக்ரேனில் உள்ள மாணவர்களுக்கு போர்வைகள், தூங்கும் பாய்கள் மற்றும் சூரிய ஒளி விளக்குகள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கியுள்ளது.

    இன்று காலை போலாந்துக்குப் புறப்பட்ட ஒரு விமானத்தின் மூலமாகவும், பிற்பகலில் ருமேனியாவுக்குப் புறப்பட்ட இந்திய விமானப்படை (IAF) விமானத்தின் மூலமாகவும் இந்த நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.