மார்ச் 1 நேரலை நிறைவடைகிறது - புதிய நேரலையில் இணையுங்கள்
மார்ச் 1, செவ்வாய்க்கிழமை வெளியான யுக்ரேன் மீதான ரஷ்ய ராணுவ நடவடிக்கை தொடர்பான நேரலைப் பக்கத்தை இத்துடன் நிறைவு செய்கிறோம். மார்ச் 2 புதன்கிழமைக்கான புதிய நேரலையில் எங்களோடு இணைய இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்.
யுக்ரேனில் நடப்பவை குறித்து உடனுக்குடன் தெரிந்துகொள்ள தொடர்ந்து இணைந்திருங்கள்.
இதுவரை நடந்த நிகழ்வுகளின் செய்தித் துளிகள் இதோ...
- யுக்ரேனின் கார்கிவ் நகரில் இன்று காலை வெடிகுண்டு தாக்குதலில், இந்திய மாணவர் ஒருவர் உயிரிழந்தார். அவர் கர்நாடகவைச் சேர்ந்த நவீன் சேகரப்பா என அடையாளம் காணப்பட்டுள்ளது.
- யுக்ரேனின் கார்கிவ் பகுதியில் தாக்குதல் நடத்திய ரஷ்ய படையினர், மறுபுறம் தலைநகர் கீயவில் உள்ள தொலைக்காட்சி கோபுரத்தையும் தாக்கியுள்ளனர்.
- மாணவர்கள் உட்பட அனைத்து இந்தியர்களும் இன்று கீயவ் நகரை விட்டு வெளியேறி விட்டதாக இந்திய தூதரகம் கூறியுள்ளது. அந்த நகரில் இயங்கி வந்த இந்திய தூதரகமும் மூடப்பட்டு விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- யுக்ரேனின் கார்கிவில் ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதல்களில் திங்கட்கிழமை அதிகாலையில் டஜன் கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டதாக யுக்ரேனிய உள்துறை தெரிவித்துள்ளது.
- யுக்ரேன் தலைநகரில் உள்ள முக்கிய இலக்குகளை தாக்க தயாராகி வருவதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.
- பெலாரூஸ் பேச்சுவார்த்தைக்கு முன்பாக யுக்ரேனிய அதிபர் ஸெலென்ஸ்கி, ரஷ்ய படையினர் ஆயுதங்களை கீழே போடுமாறும் ஐரோப்பிய ஒன்றியம் யுக்ரேனுக்கு உறுப்புரிமை வழங்குமாறும் கோரினார்.
- கீயவ் தாக்குதல்கள் குறித்து ரஷ்யா எச்சரித்துள்ள நிலையில், யுக்ரேனிய பாதுகாப்பு அமைச்சர் ஒலெக்ஸி ரெஸ்னிகோவ், ரஷ்யாவால் "உளவியல் தாக்குதல்" ஏற்படக்கூடும் என்று எச்சரித்துள்ளார்.
- ரஷ்ய படையெடுப்பால் யுக்ரேனில் இருந்து சுமார் 10 லட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும், லட்சக்கணக்கான மக்கள் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர் என்று அகதிகளுக்கான ஐநாவின் அமைப்பு தெரிவித்துள்ளதாக ஏ எஃ பி செய்தி முகமை ட்வீட் செய்துள்ளது.
- நேற்று முன்தினம் (பிப். 27), ஞாயிற்றுக்கிழமை, யுக்ரேனின் வட-கிழக்கு நகரம் ஓக்டிர்காவில் ரஷ்யாவின் பீரங்கித் தாக்குதலில் 70க்கும் மேற்பட்ட யுக்ரேன் படையினர் கொல்லப்பட்டதாக, உள்ளூர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கம் காலையில் மீண்டும் தொடங்கும். மேலதிகச் செய்திகளுக்குமுகப்பு பக்கம்செல்லவும்.
பிபிசி தமிழின்பேஃஸ்புக்,ட்விட்டர்,இன்ஸ்டாகிராம்,யூடியூப்பக்கங்கள் வாயிலாகவும் செய்திகளை அறியலாம்.
தாக்குதல் தொடங்கியதில் இருந்து ஒவ்வொரு நாளும் வெளியிடப்பட்டுவரும் இந்த நேரலைப் பக்கங்கள் இந்தப் படையெடுப்பில் நடந்த, நடந்துகொண்டிருக்கும் அனைத்தையும் காலவரிசைப் படி பார்ப்பதற்கான ஒரு மூலாதாரமாக விளங்கும்.
- யுக்ரேன் மீது போர் தொடுத்த ரஷ்யா: முதல் நாள் போரில் நடந்தது என்ன? - நேரலை செய்தி
- போரில் இரண்டாம் நாள் நடந்தது என்ன? நேரலைச் செய்தி
- போரில் மூன்றாம் நாள் நடந்தது என்ன? நேரலைச் செய்தி
- யுக்ரேன் போரின் நான்காவது நாளில் நடப்பது என்ன? - நேரலை

















