ரஷ்ய படைக்குவிப்பு இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு மிகப்பெரியது: அமெரிக்கா

யுக்ரேன் எல்லையில் ரஷ்ய படைக் குவிப்பு “இரண்டாம் உலக போருக்குப் பிறகு ஐரோப்பாவில் நிகழ்ந்த மிகப்பெரிய ராணுவ அணி திரட்டல்” என அமெரிக்கா கூறியுள்ளது

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

நந்தினி வெள்ளைச்சாமி

  1. நேரலை நிறைவடைகிறது

    பிபிசி தமிழின் நேரலைப் பக்கத்தில் இதுவரை இணைந்திருந்ததற்கு நன்றி. இத்துடன் இன்றைய நேரலைப் பக்கம் நிறைவடைகிறது. தமிழ்நாடு, இந்தியா, உலகம் முழுவதுமான செய்திகளுடன் நாளை காலை மீண்டும் நேரலைப் பக்கம் தொடங்கும். இன்றைய நேரலைப் பக்கத்தின் முக்கியமான செய்திகளை கீழே காணலாம்.

    • தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் ஆகியவற்றுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நாளை (பிப். 19) நடைபெற உள்ளது
    • கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம் நடத்திய அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணியை காவலர்கள் குண்டுகட்டாகத் தூக்கிச் சென்று வேனில் ஏற்றினர்
    • தேசிய பங்கு சந்தையின் முன்னாள் தலைமை செயல் அதிகாரியும், நிர்வாக இயக்குநருமான சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு எதிராக, சிபிஐ லுக்-அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது
    • பிரிட்டனில் யூனிஸ் புயல் தாக்கியதில் கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. ஏராளமானோருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
    • யுக்ரேன் எல்லையில் ரஷ்ய படைக் குவிப்பு “இரண்டாம் உலக போருக்குப் பிறகு ஐரோப்பாவில் நிகழ்ந்த மிகப்பெரிய ராணுவ அணி திரட்டல்” என அமெரிக்கா கூறியுள்ளது

    மேலதிகச் செய்திகளுக்குமுகப்புப் பக்கம்செல்லவும்.

    பிபிசி தமிழின்பேஃஸ்புக்,ட்விட்டர்,இன்ஸ்டாகிராம்,யூடியூப்பக்கங்கள் வாயிலாகவும் செய்திகளை அறியலாம்.

  2. புயலில் தரையிறங்க முடியாமல் தள்ளாடும் விமானங்கள்

    விமானம்

    பட மூலாதாரம், Getty Images

    பிரிட்டனில் யூனிஸ் புயல் காரணமாக லண்டன் ஹீத்ரு விமான நிலையத்தில் விமானங்கள் தரையிறங்க முடியாமல் தள்ளாடிய காட்சிகள் வெளியாகி உள்ளன.

    இந்தக் காட்சிகளைக் காண இங்கே கிளிக் செய்யவும்.

    ஹீத்ரு விமான நிலையத்தில் விமானங்கள் தரையிறங்குவதை நேரலையில் காண...

    YouTube பதிவை கடந்து செல்ல
    Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது YouTubeபதிவில் விளம்பரங்கள் இருக்கக்கூடும்

    YouTube பதிவின் முடிவு

  3. யுக்ரேனில் ரஷ்ய மொழி பேசும் மக்களுக்கு எதிராக மனித உரிமை மீறல்கள்: புதின் குற்றச்சாட்டு

    விளாடிமிர் புதின்

    பட மூலாதாரம், Getty Images

    கிரெம்ளினில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், யுக்ரேனில் “ரஷ்ய மொழி பேசும் மக்கள் மீது பாகுபாடு மற்றும் அவர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் நடைபெறுகிறது” என, ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்.

    மேலும், யுக்ரேன் நெருக்கடி குறித்து மேற்கு நாடுகள் தலைவர்களுடன் விவாதிக்க தான் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். ஆனால், அந்நாட்டு தலைவர்கள் ரஷ்யாவின் பாதுகாப்பு குறித்த கவலைகளை புறக்கணிப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

  4. யுக்ரேன் எல்லையில் ரஷ்ய துருப்புகள்: இரண்டாம் உலக போருக்குப் பிறகான மிகப்பெரிய ராணுவ அணி திரட்டல் - அமெரிக்கா

    யுக்ரேன் நெருக்கடி

    பட மூலாதாரம், Russian Defence Ministry

    யுக்ரேன் எல்லையில் ரஷ்ய படை வீரர்களின் பரவல் “இரண்டாம் உலக போருக்குப் பிறகு ஐரோப்பாவில் நிகழ்ந்த மிகப்பெரிய ராணுவ அணி திரட்டல்”, என, ஐரோப்பிய பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு அமைப்புக்கான அமெரிக்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

    “வெளிப்படைத்தன்மை மற்றும் ஆபத்தைக் குறைப்பதில் ஈடுபடாமல், மாறாக பொய்யான தகவல்களை ரஷ்யா வழங்கி வருகிறது”, என மைக்கேல் கார்பென்டர் தெரிவித்துள்ளார். மேலும், யுக்ரேன் எல்லையில் 1,69,000-1,90,000 துருப்புகளை ரஷ்யா நிறுத்தியுள்ளதாக தெரிவித்தார்.

    “யுக்ரேன், நேட்டோ, அமெரிக்கா ஆகியவற்றை போரை தொடங்குபவர்கள் போன்று ரஷ்யா சித்தரிக்கிறது. அதிகளவிலான படைகளுடன், தன் அண்டை நாட்டின் மீது படையெடுப்பதற்கு ரஷ்யா அச்சுறுத்துகிறது” என அவர் தெரிவித்தார்.

  5. லஷ்கர்-இ-தொய்பாவுக்கு ரகசிய ஆவணங்களை பகிர்ந்ததாக என்ஐஏ முன்னாள் அதிகாரி கைது

    என்ஐஏ

    பட மூலாதாரம், NIA

    படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

    தீவிரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவுடன் தொடர்புடையவர்களுக்கு ரகசிய ஆவணங்களை பகிர்ந்த வழக்கில், தேசிய புலனாய்வு முகமையின் (என்ஐஏ) முன்னாள் அதிகாரியை அந்த முகமை இன்று கைது செய்ததாக ஏஎன்ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.

    சிம்லாவை சேர்ந்த அர்விந்த் திக்விஜய் நேகியை இன்று என்ஐஏ கைது செய்துள்ளது. ஐபிஎஸ் அதிகாரியான இவர், தற்போது சிம்லா எஸ்.பியாக பணியாற்றி வந்தார்.

    இந்த வழக்கு தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட ஆறு பேர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  6. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: நாளை காலை 7 மணி முதல் வாக்குப் பதிவு

    வாக்காளர்கள்

    பட மூலாதாரம், GETTY IMAGES

    படக்குறிப்பு, வாக்காளர் அடையாள அட்டையோடு வாக்காளர்கள். மாதிரிப் படம்

    தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் ஆகியவற்றுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நாளை (பிப். 19) நடைபெற உள்ளது.

    நாளை காலை 6 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவும், 7 மணிக்கு வாக்குப்பதிவும் நடைபெறும். மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடையும். கடைசி ஒரு மணிநேரம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் வாக்கு செலுத்த அனுமதிக்கப்படுவர்.

    வாக்காளர் அடையாள அட்டையுடன் ஓட்டுநர் உரிமம், ஆதார் அட்டை உள்ளிட்ட 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை காண்பித்து வாக்காளர்கள் வாக்கு செலுத்தலாம்.

    வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

    மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் காவல்துறை பாதுகாப்புடன் வாக்குச்சாவடி மையங்களில் வைக்கப்பட்டுள்ளன. பதற்றமான வாக்குச்சாவடிகளில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர்.

    நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் எப்படி நடைபெறும், ஒருவர் எத்தனை வாக்குகள் செலுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட அடிப்படைதகவல்களை இங்கே படியுங்கள்:

  7. நடிகர் சிம்ஹா பேட்டி: 'மகான் படத்தில் என்னைப் பார்த்து விக்ரம் ஆச்சரியப்பட்டார்',

    மகான்

    பட மூலாதாரம், INSTA@ACTORSIMHA

    “முதலில் விக்ரமுக்கு நான் தான் சத்யவான் கதாப்பாத்திரம் நடிக்க போகிறேன் என தெரியாது. சத்யவானுக்கான டெஸ்ட் மேக்கப் எல்லாம் போட்ட பிறகுதான் அவர் என்னை பார்த்து 'நீதான் இந்த கதாப்பாத்திரம் நடிக்க போறியா?' என கேட்டு விக்ரம் ஆச்சரியமானார்"

  8. தருமபுரி மாவட்டத்தில் 3 பிடிஓக்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

    லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

    தருமபுரி மாவட்டத்தில் 3 பிடிஓக்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

    தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்தில் 2016-17-ம் ஆண்டில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றியவர் ஆனந்தன்.

    இந்த ஒன்றியத்தில் அவர் பணியாற்றியபோது ஒன்றியத்துக்கு உட்பட்ட 4 இடங்களில் உயர் கோபுர மின் விளக்கு அமைத்ததில் மோசடி நடந்ததாக புகார் எழுந்தது.

    அதேபோல, அவருக்கு பின்னர் அங்கு பணியாற்றிய வட்டார வளர்ச்சி அலுவலராக மதலைமுத்து இருந்தார். அவர் பணிக்காலத்திலும் முறைகேடுகளில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.

    இவர்களுக்குப் பின்னர் அங்கு பணியாற்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயராமன் காலத்திலும் காசோலை உள்ளிட்ட முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், இவற்றின் மூலம் அரசுக்கு ரூ.1.57 கோடி இழப்பு ஏற்பட்டதாகவும் புகார் எழுந்தது.

    அதன்பேரில், தருமபுரி லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் பிடிஓ-க்கள் ஆனந்தன், மதலைமுத்து, ஜெயராமன் மற்றும் சேலத்தைச் சேர்ந்த கடை உரிமையாளர் மதிவாணன், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த இருளப்பட்டியைச் சேர்ந்த கடை உரிமையாளர் குமார் ஆகிய 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

    அதைத் தொடர்ந்து, தருமபுரி ஆட்சியர் அலுவலகம் எதிரில் ராமன் நகர் பகுதியில் வசிக்கும் வட்டார வளர்ச்சி அலுவலர் மதலைமுத்து, அரூரில் வசிக்கும் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆனந்தன்மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பி.பள்ளிப்பட்டியில் வசிக்கும் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயராமன் ஆகியோரது வீடுகளில் இன்று லஞ்ச ஒழிப்புக் காவல்துறையின் வெவ்வேறு குழுவினர் ஒரே நேரத்தில் சோதனையில் ஈடுபட்டனர்.

    அரூர், பி.பள்ளிப்பட்டியில் இன்று பகல் வரையிலும் நடந்தது. தருமபுரி ராமன் நகரில் மாலை வரையிலும் இந்த சோதனை தொடர்ந்தது.

  9. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: மதுரை நகரின் நீங்காத பிரச்னைகளுக்கு உள்ளாட்சித் தேர்தல் தீர்வைத் தருமா?

    மதுரை நகரின் நீங்காத பிரச்னைகளுக்கு உள்ளாட்சித் தேர்தல் தீர்வைத் தருமா? - இந்த காணொலியை பாருங்கள்:

    YouTube பதிவை கடந்து செல்ல
    Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது YouTubeபதிவில் விளம்பரங்கள் இருக்கக்கூடும்

    YouTube பதிவின் முடிவு

  10. இந்தியாவில் சின்ன வெங்காய ஏற்றுமதி அதிகரிப்பு: தமிழ்நாட்டு விவசாயிகளின் நிலை என்ன?,

    சின்ன வெங்காயம்

    பட மூலாதாரம், TNAU

    படக்குறிப்பு, ஏற்றுமதி தரத்தில் சின்ன வெங்காயம்

    கடந்த ஆண்டு சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயத்தின் விலை உச்சத்தை தொட்டது. பெரிய வெங்காயத்தை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் நிலை ஏற்பட்டது. ஆனால், சின்ன வெங்காயம் ஏற்றுமதியில் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. வெங்காயம் ஏற்றுமதியில் சாதனை படைத்தாலும், வெங்காய விவசாயிகளுக்கு பெரிதாக பலன் இல்லை. இடைத்தரகர்கள் வியாபாரிகளுக்கு மட்டுமே லாபகரமானதாக இருக்கிறது என்று விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

  11. ரஷ்யா - யுக்ரேன் நெருக்கடி: புதினை பின்வாங்க வைக்க மேற்கு நாடுகளால் முடியுமா?

    ரஷ்யா - யுக்ரேன் நெருக்கடியில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை பின்வாங்க வைக்க மேற்கு நாடுகளால் முடியுமா?

    இந்த காணொலியை பாருங்கள்:

    YouTube பதிவை கடந்து செல்ல
    Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது YouTubeபதிவில் விளம்பரங்கள் இருக்கக்கூடும்

    YouTube பதிவின் முடிவு

  12. என்.எஸ்.இ: சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு எதிராக சிபிஐ லுக் அவுட் நோட்டீஸ்

    சித்ரா ராமகிருஷ்ணா

    பட மூலாதாரம், GETTY IMAGES

    தேசிய பங்கு சந்தையின் முன்னாள் தலைமை செயல் அதிகாரியும், நிர்வாக இயக்குநருமான சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு எதிராக, சிபிஐ லுக்-அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.

    சித்ரா ராமகிருஷ்ணா, சாமியார் ஒருவரிடம் கலந்தாலோசித்து பங்கு சந்தை தொடர்பான முக்கிய முடிவுகளை எடுத்ததாகவும், ரகசிய தகவல்களை அவருக்குப் பகிர்ந்ததாகவும் இந்திய பங்குச்சந்தைகளின் ஒழுங்காற்று அமைப்பான செபி சில தினங்களுக்கு முன் தெரிவித்திருந்தது.

    இந்நிலையில், மும்பையில் அவருக்கு சொந்தமான இடங்களில் நேற்று வருமான வரித்துறை சோதனை நடத்தியது.

    இந்நிலையில், இன்று சித்ரா ராமகிருஷ்ணாவிடம் சிபிஐ அதிகாரிகள் இன்று விசாரணை நடத்தியதாகவும், அவர் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லாமல் இருப்பதற்காக, அவருக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸையும் சிபிஐ பிறப்பித்துள்ளதாகவும், ஏ.என்.ஐ. செய்தி முகமை தெரிவித்துள்ளது.

  13. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: கோவையில் பண விநியோகம் நடப்பதாக அதிமுக, மக்கள் நீதி மய்யம் போராட்டம்

    எஸ்.பி. வேலுமணி
    படக்குறிப்பு, குண்டுக் கட்டாகத் தூக்கிச் செல்லப்பட்ட முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி

    நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற திமுகவினர் பண விநியோகம் செய்வதாகக் கூறி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம் நடத்திய அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணியை காவலர்கள் குண்டுகட்டாகத் தூக்கிச் சென்று வேனில் ஏற்றினர்.

  14. நாகை அருகே இரண்டு மகள்கள் மற்றும் மனைவியை கொலை செய்துவிட்டு கணவன் தற்கொலை

    நாகை

    நாகப்பட்டினம் அருகே இரண்டு மகள்கள் மற்றும் மனைவியை கொலை செய்துவிட்டு, கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

    நாகை மாவட்டம் சிக்கல் கிராமத்தை அடுத்த புதுச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன். அப்பகுதியில் உணவகம் ஒன்றை நடத்தி வந்தார். இவருக்கு தனலட்சுமி, வினோதினி, அட்சயா ஆகிய மூன்று மகள்கள் உள்ளனர்.

    இதில், மூத்த மகள் தனலட்சுமி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். இந்த திருமணத்தில் விருப்பம் இல்லாத லட்சுமணன் மன உளைச்சலில் இருந்துள்ளார்.

    வீட்டிலேயே உணவகம் நடத்தி வந்த லட்சுமணன், கடந்த நான்கு தினங்களாக கடையை திறக்கவில்லை. இந்நிலையில், வியாழக்கிழமை நள்ளிரவு மனைவி புவனேஸ்வரி மற்றும் மகள்கள் வினோதினி, அக்ஷயா ஆகியோர் தலையில் குழவிக்கல்லை போட்டு கொலை செய்துவிட்டு பின்னர் வீட்டிலேயே லட்சுமணன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜவஹர் நேரில் விசாரணை மேற்கொண்டார். இச்சம்பவம் குறித்து கீழ்வேளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    இந்த நிலையில், தனது குடும்பத்தினர் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி, மூத்த மகள் தனலட்சுமி தனது கணவருடன் நாகை எஸ்பி ஜவஹரை சந்தித்து புகார் மனு அளித்துள்ளார்.

  15. இங்கிலாந்தில் யூனிஸ் புயல் தாக்குதல்: ஒரு மணிநேரத்திற்கு 122 மைல் வேகத்தில் காற்று வீச்சு

    யூனிஸ் புயல்

    பட மூலாதாரம், PA Media

    படக்குறிப்பு, இப்புயலால் வட இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்தில் பனிப்பொழிவும் ஏற்பட்டது.

    இங்கிலாந்தின் ஐல் அவ் வைட் தீவில் ஒரு மணிநேரத்திற்கு 122 மைல் வேகத்தில் யூனிஸ் புயல் தாக்கியது.

    புயலால், இங்கிலாந்தின் தென் - மேற்கு பகுதியில் 50,000க்கும் மேற்பட்ட கட்டிடங்களில் மின் தடை ஏற்பட்டது. அதேபோன்று, தெற்கு வேல்ஸும் மின் தடையால் பாதிக்கப்பட்டது.

    இப்புயல் தாக்குதலுக்கு முன்பாகவே அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் சிகப்பு எச்சரிக்கை விடுத்திருந்தது. இதைத்தொடர்ந்து, முன்னெச்சரிக்கையாக பள்ளிகள் மூடப்பட்டன. விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும், நாடு முழுவதும் உள்ள முக்கியமான பாலங்களும் மூடப்பட்டன.

    லட்சக்கணக்கான மக்கள் வீட்டிலேயே இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  16. கோவையில் வன்முறையைத் தூண்டிவிட்டு திமுக வெற்றி பெற முயற்சி: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

    எடப்பாடி பழனிசாமி

    கோவையில் வன்முறையைத் தூண்டிவிட்டு திமுக வெற்றி பெற முயற்சி செய்வதாக, எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

    அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசியதாவது:

    “கோவை அமைதியான பகுதியாகும். அங்கு ரவுடிகள் மூலம் வன்முறையைத் தூண்டிவிட்டு திமுக வெற்றி பெற முயற்சி செய்துவருகிறது. ஜனநாயக முறையில் வாக்களிப்பதை தடுக்க நினைக்கிறார்கள்.

    அதிமுகவினர் வெளிமாவட்ட நபர்களை கண்காணித்து சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரியிடம் புகார் கொடுத்தனர். ஆனால், நடவடிக்கை எடுக்கவில்லை.

    இதையடுத்து, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோவை மாநகரத்தில் ரவுடிகளை வெளியேற்ற நேரில் சென்று பேசி மனு அளித்தனர்.

    மனு தந்த பிறகும் மாவட்ட ஆட்சியர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. காவல் ஆணையரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது கண்டனத்துக்குரியதாகும்.

    சென்னை, கரூர் போன்ற ஊர்களிலிருந்து மின்துறை அமைச்சர் உத்தரவின்பேரில் ரவுடிகள் அழைத்து வரப்பட்டு வன்முறையை உருவாக்க உள்ளனர்.

    உடனே அரசும், தேர்தல் ஆணையமும் தலையிட்டு ஜனநாயக முறைப்படி தேர்தலை நடத்த வேண்டும்.

    கோவை மாவட்டம் அதிமுகவின் கோட்டையாக உள்ளது. இதைப் பொறுத்துக் கொள்ள முடியாத திமுக, முறைகேடான செயல்களில் ஈடுபட்டு வெற்றிபெற நினைக்கிறது. இதற்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.

    கோவை மாநகராட்சி பகுதியில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது பொய் வழக்குப் போட்டு சிறையில் அடைத்துள்ளனர்.

    திமுகவினர் வெற்றி பெற முடியாத இடங்களில் அதிமுகவினரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

    சேலத்திலும் பகுதி செயலாளர் பாண்டியன் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை பரிசோதனை செய்யாமலேயே கொரோனா வார்டில் சேர்த்திருந்தனர். வெளியில் பரிசோதனை செய்தபோது அவருக்கு கொரோனா இல்லை என தெரிய வந்தது.

    எப்படியாவது அதிமுக நிர்வாகிகளை கஷ்டப்படுத்துவது, துன்புறுத்துவதன் மூலம் ஒரு பிரச்னையை ஏற்படுத்தி வெற்றி பெற நினைக்கிறார்கள்.

    திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பற்றி தரக்குறைவாக பேசியுள்ளார். இது கண்டிக்கத்தக்கது” என்றார்.

  17. பிபிசியின் சிறந்த இந்திய விளையாட்டு வீராங்கனை விருது: இங்கே வாக்களியுங்கள்

    பிபிசியின் சிறந்த இந்திய விளையாட்டு வீராங்கனை விருது

    பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை விருதின் மூன்றாவது ஆண்டு நிகழ்ச்சியை இந்த ஆண்டு பிபிசி நடத்துகிறது.

    கோல்ஃப் வீராங்கனை அதிதி அசோக், குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா போர்கோஹெய்ன், பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானு, பாராலிம்பிக் துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெகரா மற்றும் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து ஆகியோர் 2021ஆம் ஆண்டிற்கான ஐந்து போட்டியாளர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

  18. உங்கள் எதிர்காலத்துக்கு ஒரு கோடி ரூபாய் போதுமா? உண்மையில் எவ்வளவு ரூபாய் தேவைப்படும்?

    நிதி திட்டமிடல்

    பட மூலாதாரம், Getty Images

    உங்கள் எதிர்காலத்துக்கு எவ்வளவு பணம் தேவை என உங்களுக்குத் தெரியுமா? அதை எப்படி கணக்கிடுவது? அதை எப்படி சம்பாதிப்பது? இதுபோன்ற கேள்விகளுக்கு விடை தெரிய வேண்டுமா?

  19. அமைச்சருக்கு எதிராக தர்ணா: கர்நாடகா பேரவையிலேயே உறங்கி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் போராட்டம்

    காங்கிரஸ் போராட்டம்

    பட மூலாதாரம், INC Karnataka

    கர்நாடகாவில் பாஜக அமைச்சரை கண்டித்து காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சட்டப்பேரவையிலேயே நேற்று (பிப். 17) இரவு முழுவதும் உறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    காவிக்கொடியையும் தேசிய கொடியையும் இணைத்து, கர்நாடக அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பா, “காவிக்கொடி ஒருநாள் இந்தியாவின் தேசியக்கொடியாக செங்கோட்டையில் ஏற்றப்படலாம்” என கூறியதாக, கடந்த சில தினங்களாக முன்னாள் முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஈஸ்வரப்பா பதவி விலக வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதனிடையே, ஈஸ்வரப்பா கருத்து தவறாக சித்தரிக்கப்பட்டதாக, கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

    மேலும், காங்கிரஸ் கட்சியினரை விமர்சித்துள்ள ஈஸ்வரப்பா, அவர்களின் அழுத்தத்திற்கு நான் தலைகுனிய மாட்டேன் என தெரிவித்துள்ளார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  20. ஆப்பிரிக்காவில் 5 ஆண்டுகளுக்குப் பிறகு போலியோ பாதிப்பு

    போலியோ சொட்டு மருந்து

    பட மூலாதாரம், AFP

    படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

    ஆப்பிரிக்காவில் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக மாலாவி தலைநகரம் லிலோங்வியில் 3 வயது பெண் குழந்தைக்கு, ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவும் டைப் 1 போலியோபாதிப்பு ஏற்பட்டிருப்பதாக, உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், இவ்வகை போலியோ நோய் பரவல் மாலாவியில் தொடங்கியிருப்பதாக, மாலாவி சுகாதார அதிகாரிகள் அறித்துள்ளனர்.

    பாதிக்கப்பட்ட 3 வயது பெண் குழந்தைக்கு முடக்குவாதம் ஏற்பட்டது.

    ஆய்வகச் சோதனையில், இத்தகைய டைப் 1 போலியோ திரிபு, பாகிஸ்தானில் பரவும் திரிபுக்கு இணையானது என சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இத்தகைய போலியோ பாதிப்பு இன்னும் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் நாடுகளில் மட்டுமே உள்ளன.

    கடந்த 2016-ம் ஆண்டில் இத்தகைய போலியோ பாதிப்பு ஆப்பிரிக்காவின் போர்னோ மாகாணத்தில் கண்டறியப்பட்டது. பின்னர், 2020ல் இத்தகைய போலியோ பாதிப்பு இல்லாத கண்டமாக ஆப்பிரிக்கா அறிவிக்கப்பட்டது.

    போலியோ, அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும் தொற்று நோயாகும். இந்த வைரஸ், நரம்பு மண்டலத்தில் நுழைந்து சில மணிநேரங்களிலேயே முழுமையாக முடக்குவாதத்தை ஏற்படுத்தக்கூடியதாகும்.