6 லட்சம் கோடி ரூபாய்: இந்திய அரசு சொத்துகளை தனியார் மூலம் பணமாக்க திட்டம்

அரசு மற்றும் பயன்படுத்தும் நிறுவனத்தால் முன்னரே ஒப்புக்கொள்ளப்பட்ட காலக்கெடு முடிந்தபின், அந்தச் சொத்துகள் மீண்டும் அரசிடம் ஒப்படைத்தாக வேண்டும்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. நன்றி நேயர்களே!

    பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கம் நாளை காலை மீண்டும் தொடங்கும். மேலதிகச் செய்திகளுக்கு முகப்பு பக்கம் செல்லவும்.

    பிபிசி தமிழின் பேஃஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப் பக்கங்கள் வாயிலாகவும் செய்திகளை அறியலாம்.

    உங்களுக்கு இந்த இரவு இனிதாகட்டும்.

  2. நேஷனல் மானிடைசேஷன் பைப்லைன் திட்டம் தொடக்கம்

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

    இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 6 லட்சம் கோடி மதிப்பிலான நேஷனல் மானிடைசேஷன் பைப்லைன் (National Monetisation Pipeline) திட்டத்தை இன்று தொடங்கி வைத்தார்.

    இந்தத் திட்டத்தின்கீழ் பயன்பாட்டில் இல்லாத இந்திய அரசின் சொத்துகள் தனியார் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்படும். இந்த சொத்துகளின் உரிமை இந்திய அரசின் வசேமே இருக்கும்.

    அரசு மற்றும் பயன்படுத்தும் நிறுவனத்தால் முன்னரே ஒப்புக்கொள்ளப்பட்ட காலக்கெடு முடிந்தபின், அந்தச் சொத்துகள் மீண்டும் அரசிடம் ஒப்படைத்தாக வேண்டும்.

    நெடுஞ்சாலைகள், ரயில் பாதைகள், மின் திட்டங்கள் போன்ற சொத்துகள் அடுத்த நான்கு நிதியாண்டுகளில் இவ்வாறு பணமாக்கப்படும்.

  3. பிபிசி தமிழ் உலகச் செய்திகள்

    தாலிபன்கள் ஆட்சியில் கேள்விக்குறியாகும் ஆப்கானிஸ்தான் பெண்களின் எதிர்காலம். நாட்டைவிட்டு வெளியேற முயற்சிக்கும் மக்கள். முழு விவரங்களும் பிபிசி தமிழின் உலகச் செய்திகளில்.

    YouTube பதிவை கடந்து செல்ல
    Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது YouTubeபதிவில் விளம்பரங்கள் இருக்கக்கூடும்

    YouTube பதிவின் முடிவு

  4. ஃபைசர் தடுப்பூசிக்கு அமெரிக்காவில் முழு ஒப்புதல்

    ஃபைசர் மற்றும் பயோஎன்டெக் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துக்கு அமெரிக்க அரசு முழு ஒப்புதல் அளித்துள்ளது.

    இதன்மூலம் அமெரிக்காவில் முழு ஒப்புதலைப் பெறும் முதல் தடுப்பு மருந்தாகிறது ஃபைசர் தடுப்பு மருந்து.

    இதுவரை இந்தத் தடுப்பூசிக்கு அவசரகாலப் பயன்பாட்டு அனுமதி மட்டுமே வழங்கப்பட்டிருந்தது. இந்த இரண்டு டோஸ் தடுப்பூசியை 16 வயதுக்கும் மேற்பட்ட அனைவருக்கும் வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

    Pfizer becomes first Covid vaccine to gain full FDA approval

    பட மூலாதாரம், Getty Images

  5. ஹால்மார்க் அடையாள எண்ணால் என்ன நேரும்?

    இந்திய அரசின் புதிய ஹால்மார்க் விதிக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் நகைக்கடை உரிமையாளர்கள் தங்களின் கடைகளை அடைத்து எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ` வருமான வரித்துறையைக் காட்டிலும் கூடுதல் அதிகாரத்தை பி.ஐ.எஸ் எனப்படும் தர நிர்ணய அமைப்புக்குக் கொடுத்துள்ளனர்.

    இதனை எங்களால் ஏற்க முடியாது' என்கின்றனர் தங்க நகை வணிகர்கள். ஹால்மார்க் அடையாள எண்ணை வணிகர்கள் எதிர்ப்பது ஏன்?

    gold price india

    பட மூலாதாரம், Getty Images

  6. தேசிய கொடிக்கு மேல் பாஜக கொடி - புதிய சர்ச்சை

    மறைந்த உத்தர பிரதேச முன்னாள் முதல்வர் கல்யாண் சிங் உடல் மீது போர்த்தப்பட்டிருந்த இந்திய தேசிய கொடி மீது பாரதிய ஜனதா கட்சியின் காவி நிறக் கொடி வைக்கப்பட்ட நிகழ்வால் பலத்த சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

    அதுவும் பாஜகவின் காவி நிற கொடி போர்த்தப்பட்டபோது கல்யாண் சிங் உடலுக்கு உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மரியாதை செலுத்திய படங்கள் இணையத்தில் வைரலாகி கடும் விமர்சனங்களுக்கு வழிவகுத்துள்ளன.

    kalyan sing indian national flag yogi adityanath

    பட மூலாதாரம், @MYOGIADITYANATH

  7. சிங்கப்பூரில் கமலா ஹாரிஸ்

    சிங்கப்பூருக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நீடித்த பங்காளித்துவம் இருப்பதாக அந்நாட்டு பிரதமர் லீ சியென் லூங் தெரிவித்துள்ளார்.

    அமெரிக்கா - சிங்கப்பூர் இடையிலான இருதரப்பு உறவு வலுவானது என்றார் சிங்கப்பூருக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ்.

    இணையப் பாதுகாப்பு, பருவநிலை மாற்றம், பொருளியல், பெருந்தொற்று நோய்களை எதிர்கொள்வது உள்ளிட்ட புதிய அம்சங்களில் இருதரப்பும் ஒத்துழைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஆர்க்கிட் பூ வகை ஒன்றுக்கு தங்கள் நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள கமலா ஹாரிஸ் பெயரை சூட்டியுள்ளது சிங்கப்பூர்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  8. ஆப்கானியர்கள் வெளியேறுவதை தடுக்க மாட்டோம் - தாலிபன்

    "ஆப்கானியர்கள் ஆப்கானிஸ்தானிலேயே இருந்து தங்கள் நாட்டை மீண்டும் கட்டமைக்க வேண்டும். ஆனால், உரிய ஆவணங்களுடன் வெளிநாடுகளுக்குச் செல்ல விரும்புபவர்களின் வழியில் குறுக்கே நிற்க மாட்டோம்," என்று தாலிபன் அமைப்பு தெரிவித்துள்ளது.

    வெளிநாட்டுப் படைகளுக்கான கடைசி நாளான 31ஆம் தேதிக்குப் பிறகும், வர்த்தக நோக்கிலான பயண விமானங்கள் மூலம் ஆப்கானிஸ்தான் மக்கள் வெளிநாடுகளுக்குச் செல்லலாம் என்று அந்த அமைப்பைச் சேர்ந்த சுஹைல் ஷாஹீன் தெரிவித்துள்ளார்.

    இப்போது வெளிநாடுகளின் மீட்பு விமானங்கள் மூலம் ஆஃப்கன் மக்கள் நாட்டிலிருந்து வெளியேறி வருகின்றனர்.

    ஆகஸ்டு 31 எனும் கடைசி நாளை நீட்டிப்பது குறித்து முடிவெடுக்க ஜி-7 நாடுகளின் தலைவர்கள் நாளை இணைய வழியில் சந்திக்கின்றனர்.

    ஆனால், ஆகஸ்டு 31க்கு பிறகும் வெளிநாட்டுப் படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்தால் பின்விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்று தாலிபன் கூறுகிறது. அது குறித்து மேலதிக விவரங்கள் தரப்படவில்லை.

    afghanistan taliban

    பட மூலாதாரம், MOD

  9. தூத்துக்குடி துப்பாக்கி சூடு: விசாரணையை விரைவுபடுத்த மனித உரிமைகள் வழக்கறிஞர் கோரிக்கை, பிரபுராவ் ஆனந்தன்

    தமிழ்நாடு

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விசாரித்து வரும் ஒரு நபர் நீதிபதி ஆணையம் விரைவில் அதன் விசாரணையை முடிக்க வேண்டும் என்று மனித உரிமைகள் வழக்கறிஞர் ஹென்றி கோரியுள்ளார்.

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக ஒரு நபர் ஆணையத்தின் 29வது கட்ட விசாரணை இன்று தொடங்கியது.

    தூத்துக்குடியில் 2018ஆம் ஆண்டு மே மாதம் 22-ந் தேதி நடந்த துப்பாக்கி சூடு, தடியடி மற்றும் அதைத்தொடர்ந்து நடந்த சம்பவங்களில் 13 பேர் பலியானார்கள்.

    அந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக தமிழக அரசு, உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையத்தை அமைத்தது.

    இந்த ஆணையம் மாதந்தோறும் தூத்துக்குடி முகாம் அலுவலகத்தில் விசாரணை மேற்கொண்டு வருகிறது.ஏற்கெனவே 28 கட்ட விசாரணை நடத்தப்பட்டு, கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்கள், போராட்டத்தில் பங்கேற்றவர்கள், போராட்டத்தை முன்னெடுத்த முக்கிய நிர்வாகிகள், வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள், அரசு அலுவலர்கள், தீயணைப்பு வீரர்கள் உள்பட 1,053 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

    இதில் 813 சாட்சிகளிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. 1,127 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. மேலும் 1,150 ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டு உள்ளது, இதில் 1,127 ஆவணங்கள் மனுதாரர் தரப்பிலும், காவல்துறை சார்பில் 23 ஆவணங்களும் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் 29ஆம் கட்ட விசாரணை நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் தூத்துக்குடி முகாம் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் வழக்கறிஞர் ஹென்றி டிபேன் இன்று ஆஜரானார்.

    ஆணைய நீதிபதி முன்னிலையில் நடந்த குறுக்கு விசாரணை யில் அவர் தமது தரப்பு விளக்கத்தை பதிவு செய்தார்.

    பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பாக இன்னும் 400 பேரை விசாரணை செய்ய வேண்டும். ஆணையம் அதன் விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும். ஆட்சியர், கண்காணிப்பாளர், துப்பாக்கி சூட்டுக்கு உத்தரவு பிறப்பித்த அதிகாரிகள் இன்னும் விசாரிக்கப்படவில்லை. ஆணையத்தின் விசாரணையை விரைவில் முடித்து பாதிக்கபட்டவர்களுக்கு உரிய நீதி கிடைக்கவும், தவறு செய்தவர்களுக்கு தண்டனை கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

  10. ஆப்கன் விவகாரம்: ஆகஸ்ட் 26ல் அனைத்துக் கட்சி கூட்டம்

    ஜெய்சங்கர்

    பட மூலாதாரம், JAISHANKAR

    படக்குறிப்பு, ஜெய்சங்கர், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்

    ஆப்கானிஸ்தான் விவகாரம் தொடர்பாக விளக்க வரும் 26ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட இந்திய அரசு முடிவு செய்துள்ளது.

    ஆப்கானிஸ்தானில் கடந்த 15ஆம் தேதி ஆளுகையை கைப்பற்றிய தாலிபன் அமைப்பு, புதிய ஆட்சிக்கான ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருகிறது.

    அந்த நாட்டில் உள்ள இந்தியர்களை மீட்க இந்தியாவில் இருந்து விமானப்படை விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் விவகாரம் தொடர்பாக இந்திய அரசியல் கட்சிகளுக்கு விளக்குவதற்காக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுவதற்கு இந்திய அரசு முடிவு செய்துள்ளது.

    இந்த கூட்டத்தில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஆப்கானிஸ்தான் நாட்டில் நிலவும் அரசியல் சூழ்நிலை, அங்கு சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் நடவடிக்கை, தாலிபன் ஆளுகை மீதான இந்திய அரசின் நிலைப்பாடு உள்ளிட்டவை குறித்து விளக்கவுள்ளார்.

    இது தொடர்பான தகவலை தமது ட்விட்டர் பக்கத்திலும் ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார். அதில் இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் உள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் ஆப்கன் விவகாரம் குறித்து விளக்க பிரதமர் தனக்கு அறிவுறுத்தியுள்ளதாக ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  11. தாலிபனை எதிர்க்கும் முன்னாள் துணை அதிபர் படை - பஞ்ஷிர் பள்ளத்தாக்கில் என்ன நடக்கிறது?

    X பதிவை கடந்து செல்ல, 1
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு, 1

    ஆப்கானிஸ்தானின் பஞ்ஷிர் பள்ளத்தாக்கு பகுதியில் தாலிபன்களுக்கும் அவர்களின் எதிர்ப்பாளர்களுக்கும் இடையே நடக்கும் மோதல்கள் தொடர்பாக முரண்பட்ட தகவல்கள் வருகின்றன.

    அந்த பள்ளத்தாக்குப் பகுதியை தாலிபன்கள் சுற்றி வளைத்து விட்டதாகவும் எதிர்ப்பாளர்கள் பின்வாங்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர். அந்த பகுதியில் மோதல் நடவடிக்கையை தாலிபன் தளபதி காரி ஃபாசியுதின் வழிநடத்துவதாக தாலிபன்களை மேற்கோள்காட்டி பிபிசியின் உருது சேவை செய்தி வெளியிட்டுள்ளது.

    மறுபுறம் முந்தைய அரசின் துணை அதிபராக இருந்த அம்ருல்லா சாலே, பஞ்ஷிர் பள்ளத்தாக்கு பகுதியில் தமது போராளிகளை திரட்டிக் கொண்டு நுழைய தயாராகி வருவதாக கூறியுள்ளார். தங்களுடைய பிரதேசத்துக்குள் நுழையாமல் தாலிபன்கள் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

    இவரது தலைமையை ஏற்கும் ஆப்கன் ராணுவத்தினர், தாலிபன்களுடன் மோத தயாராக இருப்பதாகவும் முன்னாள் ராணுவ உயரதிகாரியை மேற்கோள்காட்டி ஏஎஃப்பி முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

    இதற்கிடையே, அந்த பள்ளத்தாக்கு பகுதியில் அமைதியாக ஆக்கிரமிப்பில் ஈடுபடுவது தொடர்பாக உள்ளூர் நிர்வாகத்துடன் தாலிபன்கள் தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ஏஎஃப்பி செய்தி முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

    X பதிவை கடந்து செல்ல, 2
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு, 2

  12. ஆப்கானிஸ்தான் நிலவரம்: விளக்க அறிவுறுத்திய நரேந்திர மோதி

    ஆப்கானிஸ்தானில் தற்போது நிலவும் சூழ்நிலை குறித்து அரசியல் கட்சிகளின் நாடாளுமன்ற தலைவர்களிடம் விளக்குமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோதி வெளியுறவுத் துறை அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

    இந்தத் தகவலை இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தமது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

    ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பதற்கு காபூலுக்கு தினமும் இரண்டு விமான சேவைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  13. தைவானில் தயாரிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தடுப்பூசி

    உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்கலை தைவான் அரசு தொடங்கியுள்ளது.

    இந்த தடுப்பூசிக்கான ஒப்புதல் வழங்கப்படுவது மிகவும் அவசரகதியில் நிகழ்ந்தது என்ற விமர்சனங்களுக்கு நடுவே விநியோகம் இந்த வாரம் தொடங்கியுள்ளது.

    மருத்துவ பரிசோதனைகள் முடிவதற்கு முன்பே தைவானின் சுகாதார அமைச்சகம் மெடிஜென் எனும் இந்த தடுப்பு மருந்துக்கு அனுமதி வழங்கியிருந்தது.

    நிறுவனங்களிடமிருந்து ஆர்டர் செய்யப்பட்ட தடுப்பூசிகள் கிடைப்பதில் உண்டான தாமதம், தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்களிடையே இருக்கும் விருப்பமின்மை உள்ளிட்ட காரணங்களால் அந்நாட்டில் கொரோனா வைரஸ் தடுப்பூசி விநியோகம் மந்தமாகவே உள்ளது.

  14. ஆப்கானிஸ்தான் மீட்புக்கு கடைசி தேதி நீட்டிக்கப்படுமா?

    கடந்த வாரத்தில் மட்டும் சுமார் 28 ஆயிரம் பேரை அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் இருந்து விமானம் மூலம் வெளியேற்றி உள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

    ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் ஆப்கானிஸ்தானில் இருக்கும் வெளிநாட்டவர்கள் அனைவரையும் மீட்க வேண்டும் என்று அமெரிக்க அரசு நிர்ணயம் செய்துள்ள கடைசி தேதியை நீட்டிக்க வேண்டும் என்ற அழுத்தமும் அவருக்கு உள்ளது.

    இந்தக் காலக்கெடுவை நீட்டிப்பது தொடர்பாக வேறு நாடுகளின் தலைவர்களுடன் ஆலோசனை நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார் பைடன்.

    ஆப்கானிஸ்தான் முழுவதும் தாலிபான்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில் காபூல் விமான நிலையம் அமெரிக்க படையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே தங்கள் நாட்டினரை அழைத்து வர பல நாடுகளும் அமெரிக்கப் படைகளைச் சார்ந்துள்ளன.

    ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற விரும்பும் வெளிநாட்டவர்கள் மற்றும் ஆப்கானியர்களின் கூட்டத்தால் விமான நிலையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதி நிறைந்துள்ளது.

    Afghanistan Kabul evacuation

    பட மூலாதாரம், US MARINE CORPS/REUTERS

  15. 10 ஆம் வகுப்பு மதிப்பெண்; வேதியியல் தேவையில்லை! - பொறியியல் கலந்தாய்வில் அரசின் புதிய அறிவுறுத்தல், ஆ. விஜயானந்த்

    education

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, கோப்புப்படம்

    பி.இ, பி.டெக் ஆகிய படிப்புகளுக்கான கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கு புதிய வழிகாட்டுதல்களை தமிழ்நாடு உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் கொரோனா இரண்டாம் அலையின் காரணமாக பிளஸ் 2 பொதுத்தேர்வு நடத்தப்படவில்லை. இதையடுத்து, பத்தாம் வகுப்பு, 11 ஆம் வகுப்பு ஆகியவற்றில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண் மற்றும் பிளஸ் 2 செய்முறைத் தேர்வு ஆகியவற்றில் பெற்ற மதிப்பெண்களை கணக்கில் கொண்டு தேர்வுமுடிவுகள் வெளியானது.

    கடந்த ஜூலை 19 அன்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவில் அரசு பள்ளி மாணவர்கள் நல்ல மதிப்பெண்ணை பெற்றுள்ளதாகவும் தகவல் வெளியானது. இதில், பொறியியல் கலந்தாய்வை கணக்கில் வைத்து தசம எண்களில் மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டது.

    தொடர்ந்து பொறியியல் கலந்தாய்வுக்கான விண்ணப்பத்தைப் பதிவு செய்யும் வேலைகள் நடந்து வருகின்றன. தமிழ்நாட்டில் 450 பொறியியல் கல்லூரிகள் உள்ளதால் ஒரு லட்சத்து 65 ஆயிரம் மாணவர்கள் பி.இ மற்றும் பி.டெக் ஆகிய படிப்புகளுக்கு விண்ணப்பித்துள்ளனர். இதற்கான விண்ணப்பத்தைபூர்த்தி செய்வதற்கான கால அவகாசமும் நாளையுடன் முடிவடைய உள்ளது.

    மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்யும் பணிகள் நிறைவடைந்தவுடன் அவர்களுக்கான ரேண்டம் எண்கள் வெளியிடப்பட உள்ளன. இதன்பிறகு தரவரிசையின் அடிப்படையில் கலந்தாய்வு நடைபெறும். இந்நிலையில், ஏராளமான மாணவர்கள் அதிகப்படியான மதிப்பெண்ணை பெற்றுள்ளதால் கட்ஆஃபில்வரக்கூடிய சிக்கலைத் தவிர்க்கும் வகையில் சில வழிகாட்டுதல்களை உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

    அதன்படி, பொறியியல் கலந்தாய்வில் கணிதம், இயற்பியல், ஆப்ஷனல் பாடத்தில் பெற்ற மதிப்பெண், பிளஸ் 2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி மதிப்பெண், பிறந்த தேதி, ரேண்டம் வரிசை எண் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு கவுன்சலிங் நடக்க உள்ளது. கடந்த ஆண்டுகளில் வேதியியல் பாடப்பிரிவில்இருந்து மதிப்பெண் எடுக்கப்பட்டன. இந்த ஆண்டு வேதியியல் பாடத்தில் பெற்ற மதிப்பெண் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. பத்தாம் வகுப்பு மதிப்பெண்ணையும் கூடுதலாகக் கணக்கில் எடுத்துக் கொள்ள உள்ளனர்.

  16. துரைமுருகனின் 50 ஆண்டு பேரவை பணி: சட்டப்பேரவையில் கண் கலங்கிய மு.க.ஸ்டாலின், ஆ. விஜயானந்த்

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

    தமிழ்நாடு சட்டப்பேரவையில் துரைமுருகனின் 50 ஆண்டுகால பணிகள் குறித்தும் முன்னாள் முதல்வர் கருணாநிதியுடனான அவரது நெருக்கம் குறித்தும் முதலமைச்சர் ஸ்டாலின் பேசியதைக் கேட்டு துரைமுருகன் கண்கலங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் நீர்வளத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. கடந்த மூன்று நாள்கள் விடுமுறைக்குப் பிறகு இன்று கூடிய பேரவைக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், `` பேரவை கூட்டத் தொடரின் முதல் நாள் நிர்வளத்துறைமானிய கோரிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. அதன் அமைச்சராக உள்ளவர் தி.மு.கவின் பொதுச் செயலாளராகவும் அவை முன்னவராகவும் இருக்கிறார். நூற்றாண்டு விழா கண்ட சட்டப்பேரவையில் அரை நூற்றாண்டுகளுக்கு முன்னரே துரைமுருகன் வந்துவிட்டார்.

    கட்சிக்கும் ஆட்சிக்கும் துரைமுருகன் உறுதுணையாக இருக்கிறார். சட்டப்பேரவையில் அவரால் சிரிப்பலையை ஏற்படுத்தவும் முடியும், அழவைக்கவும் அவரால் முடியும். மேலும் தனிப்பட்ட முறையில் கூற வேண்டும் என்றால் கருணாநிதி, அன்பழகன் ஆகியோர் மறைவுக்குப் பிறகு எனக்கு வழிகாட்டியாகஇருந்து கொண்டிருக்கிறார். கருணாநிதியின் மனதில் ஆசனம் போட்டு அவர் அமர்ந்திருக்கிறார்" என்றார்.

    மேலும், `` கருணாநிதியுடன் மணிக்கணக்கில் துரைமுருகன் பேசிக் கொண்டிருப்பார். அதனைப் பார்ப்பதற்கு பொறாமையாக இருக்கும். துரை.. துரை என கருணாநிதி அழைப்பார். சட்டப்பேரவையில் பொன்விழா நாயகனாக அவர் வலம் வருகிறார். அவரது முகத்தில் எப்போதும் புன்னகை தவழும். மனதில்பட்டதை வெளிப்படையாகச் சொல்லக் கூடியவர். எந்தத் துறையைக் கொடுத்தாலும் சிறப்புடன் செயல்படக் கூடியவர்" எனக் கூறிவிட்டு துரைமுருகனுக்கு பாராட்டு தீர்மானத்தை முதலமைச்சர் கொண்டு வந்தார்.

    சட்டப்பேரவையில் தன்னைப் பற்றி முதலமைச்சர் பேசப் பேச துரைமுருகன் கண்கலங்கியதை நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதன்பின்னர், முதலமைச்சரின் தீர்மானத்தின் மீது தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சியின் தலைவர் ஈஸ்வரன், சி.பி.ஐகட்சியின் தளி தொகுதி எம்.எல்.ஏ ராமச்சந்திரன், சி.பி.எம் கட்சியின் நாகை மாலி, வி.சி.க எம்.எல்.ஏ சிந்தனைச் செல்வன் ஆகியோர்துரைமுருகனை பாராட்டிப் பேசினர். இதனைத் தொடர்ந்து பா.ஜ.கவின் திருநெல்வேலி தொகுதி எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன், ` விசுவாசத்துக்குப் பெயர்போனவர் துரைமுருகன்' என்றார்.

  17. காபூல் விமான நிலையத்தில் துப்பாக்கி சூடு: ஒரு ஆப்கன் வீரர் பலி

    ஆப்கானிஸ்தான்

    பட மூலாதாரம், Getty Images

    ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள விமான நிலைய வளாகத்தில் நேட்டோ படையினர், ஆப்கன் படைகள் மற்றும் ஆயுததாரிகள் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் ஒரு ஆப்கன் வீரர் இறந்துள்ளதாக ஜெர்மன் ராணுவம் தெரிவித்துள்ளது.

    விமான நிலையத்தின் வடக்குப் பகுதியில் நடந்த சண்டையில் ஒரு வீரர் பலியானார், மூன்று பேர் காயம் அடைந்தனர் என்று ஜெர்மன் ராணுவம் அதன் ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளது.

    காபூல் விமான நிலையத்துக்கு வெளியே தாலிபன்கள் தங்களுடைய போராளிகளை நிறுத்தியிருக்கிறார்கள்.

    இதேவேளை காபூல் விமான நிலைய வளாகம் மற்றும் அதற்கு உள்ளே அமெரிக்கா தலைமையிலான படையினருக்கு உதவியாக ஆப்கன் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    அங்கு தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும் விமான நிலைய வாயில் மூடப்பட்டுள்ளதாகவும் நேட்டோ அதிகாரிகள் கூறியுள்ளதாக சிஎன்என் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

  18. மதுரை ஆதீனத்தின் 293ஆம் மடாதிபதியாக ஹரிஹர தேசிக பரமாச்சாரியார் பதவியேற்பு

    மதுரை ஆதீனத்தின் 293ஆம் புதிய மடாதிபதியாக ஹரிஹர தேசிக பரமாச்சாரியார் பதவியேற்றிருக்கிறார்.

    292ஆம் ஆதீனமாக இருந்த அருணகிரிநாதர் கடந்த 14ஆம் தேதி காலமானார். அவரது உடல் மடத்துக்கு சொந்தமான இடத்திலேயே நல்லடக்கம் செய்யப்பட்டது.

    இந்த நிலையில், புதிய ஆதினமாக பதவியேற்றுள்ள ஹரிஹர தேசிக பரமாச்சாரியார், முதல் நடவடிக்கையாக ஆதீன நிர்வாகம் தொடர்புடைய ஆறு ஆவணங்களில் கையெழுத்திட்டார்.

    இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

  19. ஆப்கனில் இருந்து வெளிநாட்டினரை மீட்கும் பணி விரைவுபடுத்தப்படும்: ஜோ பைடன்

    ஆப்கானிஸ்தான்

    பட மூலாதாரம், US MARINE CORPS/REUTERS

    படக்குறிப்பு, ஆப்கானிஸ்தானில் தாலிபன் வசம் ஆளுகை வந்த பிறகு அந்த நாட்டில் இருந்து வெளியேறும் நோக்கத்துடன் ஆயிரக்கணக்கானோர் காபூல் விமான நிலையத்தில் காத்திருக்கிறார்கள்.

    ஆப்கானிஸ்தானில் உள்ள வெளிநாட்டினரை மீட்கும் பணிகள் விரைவுபடுத்தப்படும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

    ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை கடந்த 15ஆம் தேதி தாலிபன்கள் கைப்பற்றிய நிலையில், கடந்த வார இறுதிவரை 28 ஆயிரம் பேர் ஆப்கானிஸ்தானில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

    ஆப்கானிஸ்தான் தாலிபன்களுடன் அமெரிக்க அரசு செய்து கொண்ட உடன்பாட்டின்படி, இந்த மாத இறுதிக்குள்ளாக அந்நாட்டில் இருந்து அனைத்து அமெரிக்கர்கள் உள்ளிட்ட வெளிநாட்டுப் படையினர் வெளியேற்றப்பட வேண்டும்.

    அதற்கு இன்னும் ஒரு வாரமே இருப்பதால், மீட்பு நடவடிக்கைக்கான அழுத்தத்தில் அமெரிக்கா இருப்பதாக கருதப்படுகிறது.

    இது தொடர்பாக வாஷிங்டனில் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இறுதிக்கெடுவுக்குள் வெளிநாட்டினரை ஆப்கானிஸ்தானி்ல் மீட்க முடியாவிட்டால், அதை நீட்டிக்கக் கோரலாமா என்பது பற்றி மற்ற நாடுகளுடனும் தாம் ஆலோசித்து வருவதாக தெரிவித்தார்.

    அத்தகைய நிலைமை வரக்கூடாது என்று தாம் எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார். ஆப்கானிஸ்தானில் இன்னும் ஆயிரக்கணக்கில் மக்கள் நாட்டை விட்டு வெளியேற காத்திருக்கிறார்கள்.

    அவர்களை எல்லாம் வெளியேற்றும்போது, நெஞ்சை பிளக்கும் காட்சிகள் மற்றும் வலிகள் இல்லாமல் இந்த முயற்சி வெற்றி பெறாது என தோன்றுகிறது என்று தாம் கவலைப்படுவதாக ஜோ பைடன் குறிப்பிட்டார்.

    முன்னதாக, ஆப்கானிஸ்தானில் உள்ள மக்களை வெளியேற்ற 18 வர்த்தக விமானங்களின் சேவை பயன்படுத்தப்படவுள்ளதாக அமெரிக்க பாதுகாப்புத்துறையான பென்டகன் தெரிவித்தது.

    காபூல் நகர விமான நிலைய வளாகத்தில் ஆயிரக்கணக்கானோர் நாட்டை விட்டு வெளியேறும் நோக்கத்துடன் முற்றுகையிட்டுள்ளனர். அவர்களுக்கு இடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளு சம்பவங்களில் இதுவரை 20 பேர் இறந்திருப்பதாக நேட்டோ அதிகாரியொருவர் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தார்.

    ஆப்கானிஸ்தான்

    பட மூலாதாரம், SOURCEREUTERS

    படக்குறிப்பு, காபூலில் இருந்து இதுநாள்வரை சுமார் 28 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
  20. தமிழ்நாட்டில் இன்று திரையரங்குகள் திறப்பு - புதிய தளர்வுகள் அமல்

    திரையரங்கு

    பட மூலாதாரம், g

    தமிழ்நாட்டில் நான்கு மாதங்களுக்குப் பிறகு இன்று முதல் திரையரங்குகள் திறக்கப்படுகின்றன.

    50 சதவிகித பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதியளிக்க வேண்டும், ஊழியர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்பன போன்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருக்கின்றன.

    அங்கன்வாடி மையங்கள், நீச்சல்குளங்கள் ஆகியவையும் இன்று முதல் செயல்படத் தொடங்குகின்றன. நீச்சல் குளங்களில் விளையாட்டுக்கான பயிற்சிகள் மட்டுமே அளிக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

    இதேபோல் கடற்கரைகள் முழுமையாக மக்கள் பயன்பாட்டுக்குத் திறக்கப்படுகின்றன. இதுவரை கடற்கரைப் பகுதியில் நடைபயிற்சிக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.