You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
“ஜம்மு காஷ்மீர் இளைஞர்கள் என்னை நம்ப வேண்டும்” – மோதி உரையிலிருந்து முக்கிய தகவல்கள்
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்புத் தகுதி வழங்கிவந்த, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 370வது சட்டப் பிரிவை ரத்து செய்து, மாநிலத்தை இரண்டாகப் பிரித்து இரண்டு யூனியன் பிரதேசங்களாக ஆக்கிய நடவடிக்கைக்குப் பிறகு ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு முதன் முதலாக பயணம் மேற்கொண்டுள்ளார் இந்திய பிரதமர் நரேந்திர மோதி.
20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய மோதி, தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தையொட்டி அங்கிருந்து ஓர் உரை நிகழ்த்தினார்.
ஜம்முவில் மோதி பேசியதில் முக்கிய அம்சங்கள்
- மத்திய அரசின் திட்டங்கள் தற்போது இங்கு நேரடியாக செயல்படுத்தப்படுகின்றன. அது இங்குள்ள கிராமங்களுக்கு பெரிதும் பலனளிக்கிறது.
- எல்பிஜி வசதியாக இருந்தாலும் சரி கழிவறை வசதியாக இருந்தாலும் சரி அது இங்குள்ள மக்களை நேரடியாக சென்றடைகிறது.
- வரக்கூடிய 25 ஆண்டுகளில் ஜம்மு காஷ்மீர் பெரும் வளர்ச்சியடைந்திருக்கும்.
- கடந்த 70 ஆண்டுகளில் வெறும் 17 ஆயிரம் கோடி ரூபாய் தனியார் முதலீடுகள் மட்டுமே இங்கு மேற்கொள்ளப்பட்டன. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளில் 38 ஆயிரம் கோடி ரூபாய் அளவிலான முதலீடுகள் இங்கு செய்யப்பட்டுள்ளன. தனியார் நிறுவனங்கள் இங்கு வரத் தொடங்கியுள்ளன.
- ஜம்மு காஷ்மீர் இளைஞர்கள் என்னை நம்ப வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். உங்கள் முன்னோர்கள் வாழ்ந்த கடினமாக வாழ்க்கையை நீங்கள் வாழ வேண்டாம். நீங்கள் என்னை நம்ப வேண்டும் என்றுதான் நான் இங்கு வந்துள்ளேன்.
- ஜனநாயகமாக இருந்தாலும் சரி, வளர்ச்சியாக இருந்தாலும் சரி இன்று ஜம்மு காஷ்மீர் ஒரு புதிய எடுத்துக்காட்டை உருவாக்கிக் கொண்டிருக்கிறது.
- கடந்த 2-3 ஆண்டுகளில் ஜம்மு காஷ்மீரில் வளர்ச்சியின் புதிய பரிணாமங்கள் உருவாகியுள்ளன.
- இந்த ஆண்டு பஞ்சாயத் ராஜ் நாள் ஜம்மு காஷ்மீரில் கொண்டாடப்படுவது ஒரு புதிய மாற்றத்திற்கான அறிகுறி. நாட்டில் உள்ள பிற பஞ்சாயத் ராஜ் அமைப்புகளுக்கு ஜம்மு காஷ்மீரிலிருந்து நான் உரையாற்றுகிறேன் என்பது எனக்குப் பெருமையாக உள்ளது.
- இந்திய அரசின் சட்டங்கள் பல இங்கு அமல்படுத்தப்படாமல் இருந்தன. இங்குள்ள ஒவ்வொரு குடிமக்களின் நலனுக்காகவும் நாங்கள் அந்த சட்டங்களை அமல்படுத்தியுள்ளோம்.
- நான் 'ஏக் பாரத், ஷ்ரெஷ்தா பாரத்' என்று பேசும்போது, தூரங்களை கடந்து மக்களை ஒன்றிணைப்பதே எங்களது நோக்கமாக உள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்