ஜல்லிக்கட்டு மாடுகளை வளர்க்கும் மதுரை திருநங்கை

காணொளிக் குறிப்பு, மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கை கீர்த்தனா, ஜல்லிக்கட்டு மாடுகளை வளர்த்து வருகிறார்.

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கை கீர்த்தனா, ஜல்லிக்கட்டு மாடுகளை வளர்த்து வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளில் 20-க்கும் மேற்பட்ட வாடிவாசல்களில் அவருடைய மாடுகள் களமிறங்கியுள்ளன.

“ஜல்லிக்கட்டுக்கான போராட்டம் வந்தபோது, காவல்துறை, ஐடி என்று பல துறைகளில் சாதிக்கிறார்களே, நாம் ஏன் மாடு வளர்க்கக்கூடாது எனத் தோன்றியது.

எனக்குத் தெரிந்த விஷயத்தில் இறங்கி ஏன் சாதிக்கக்கூடாது என்று நினைத்தேன். அப்போது தொடங்கி மாடுகளை ஜல்லிக்கட்டுக்கு வளர்த்து வருகிறேன்,” என்று கூறுகிறார் கீர்த்தனா.

2022-ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டிலும் மாடுகளைக் களமிறக்க அவர் தயார்படுத்தினார்.

தயாரிப்பு: நடராஜன் சுந்தர்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: