இந்துக்களை புண்படுத்தும் வகையில் ஆபாச நடனமாடிய சன்னி லியோனுக்கு பாஜக அமைச்சர் கெடு

காணொளிக் குறிப்பு, இந்துக்களை புண்படுத்தும் வகையில் ஆபாச நடனமாடிய சன்னி லியோனுக்கு பாஜக அமைச்சர் கெடு

சன்னி லியோன் நடனத்தில் 'சரிகமா மியூசிக்' நிறுவனம் வெளியிட்டுள்ள ''மதுபன் மே ராதிகா'' எனும் பாடல் காணொளியை மூன்று நாட்களுக்குள் இணையத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த மத்திய பிரதேச மாநில அமைச்சர் ஒருவர் கெடு விதித்துள்ளார்.

இந்துக்கள் மனதைப் புண்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாகக் குற்றம் சாட்டி, அந்தப் பாடலில் நடனம் ஆடிய சன்னி லியோன் மற்றும் இசை அமைத்த சாகிப் டோஷி ஆகியோருக்கு மத்திய பிரதேச மாநில உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா இவ்வாறு கெடு விதித்துள்ளார்.

1960ஆம் ஆண்டு வெளியான ''கோகினுர்'' எனும் இந்தி திரைப்படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடலின் ரீமேக் சரிகமா நிறுவனத்தால் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

இது குறித்து விரிவாக அறிய இந்த காணொளியைப் பாருங்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: