You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தமிழ்நாட்டில் கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் உள்ளிட்டவை வழிபாட்டுத் தலங்களை முழுமையாகத் திறக்க அரசு அனுமதி
தமிழ்நாட்டில் வார இறுதி நாட்களிலும் வழிபாட்டுத் தலங்களைத் திறக்க தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. கொரோனா ஊரடங்கில் மேலும் சில தளர்வுகளையும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருந்து வருகின்றன. இந்த நிலையில், இந்தக் கட்டுப்பாடுகளைக் குறைப்பது குறித்து புதன்கிழமையன்று முதலமைச்சர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதன் அடிப்படையில் சில தளர்வுகளை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
1. பண்டிகைக் காலம் வருவதால் அனைத்து கடைகள், உணவகங்கள், அடுமனைகள் போன்றவை இரவு 11 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படுகிறது.
2. தனிப்பயிற்சி நிலையங்கள், தனியார், அரசு வேலை வாய்ப்பு முகாம்கள் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.
3. எல்லா மத வழிபாட்டுத் தலங்களும் எல்லா நாட்களிலும் திறக்கலாம்.
மேலும் நவம்பர் 1ஆம் தேதி முதல் பின்வரும் தளர்வுகள் அமலுக்கு வருகின்றன:
1. மாவட்ட நிர்வாகங்கள் மாதாந்திர மக்கள் தொடர்பு முகாம்களை நடத்தலாம்.
2. தனியார் நிறுவனங்கள் நடத்தும் பொருட்காட்சிகளை உரிய வழிமுறைகளுடன் நடத்தலாம்.
3. மழலையர் விளையாட்டுப் பள்ளிகள், நர்சரி பள்ளிகள், அங்கன்வாடிகள் ஆகியவை முழுமையாக செயல்படலாம். பணியாற்றுவோர் அனைவரும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்.
4. ஞாயிற்றுக் கிழமைகளில் கடற்கரைக்குச் செல்ல பொது மக்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
5. திருமணம் சார்ந்த நிகழ்வுகளில் 100 பேரும் இறப்புகளில் 50 பேரும் பங்கேற்கலாம்.
6. திருவிழாக்கள், அரசியல், கலாசார நிகழ்வுகளுக்கு தடை தொடரும்.
இவை தவிர, ஏற்கனவே உள்ள கட்டுப்பாடுகள், வழிகாட்டு நெறிமுறைகள் தொடரும் எனவும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
கோயில்களை எல்லா நாட்களும் திறக்க வேண்டுமென தமிழ்நாடு பா.ஜ.க. கோரிவந்த நிலையில், பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலையின் பெரு முயற்சியாலும் தமிழ்நாடு முழுவதும் மக்களைத் திரட்டிப் போராடியதின் விளைவாகவும் அனைத்து நாட்களும் கோயில்களை திறக்க தமிழ்நாடு அரசு அனுமதித்துள்ளதாக அக்கட்சி கருத்துத் தெரிவித்துள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்