மகாராஷ்டிராவில் நிலச்சரிவு - மிக கனமழை ஏற்படுத்திய பாதிப்பால் குறைந்தது 36 பேர் பலி

ராய்கட்டில் கடும் மழை

பட மூலாதாரம், DEFENSE PRO

மகாராஷ்டிராவின் தலியே கிராமத்தில் நிகழ்ந்த பெரும் நிலச்சரிவில் இதுவரை உயிரிழந்த 32 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அருகில் உள்ள சுடர்வதி கிராமத்தில் 4 பேர் இறந்துள்ளனர்.

கடந்த 4 நாட்களாக மகாராஷ்டிராவில் தொடர்ந்து மிக கன மழை பெய்து வருகிறது.

அதுவும் கடந்த இரண்டு நாட்களாக கரையோர மாவட்டங்களான ரைகாட், ரத்னகிரி மற்றும் சிந்துதுர்க் ஆகிய இடங்களில் தொடர் மழையால் நிலைமை மிகவும் மோசமானது. அப்பகுதியில் உள்ள வஷிஸ்தி, ஜக்புடி மற்றும் கஜலி நதிகளில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் பல கிராமங்களும் சிறு நகரங்களும் தண்ணீரில் மூழ்கியுள்ளன.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு

இந்நிலையில் ஊடகங்களிடம் பேசிய அம்மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்ரே, ரைகாட் மாவட்டத்தில் 35 பேர் உயிரிழந்ததாக உறுதிபடுத்தினார். நிலச்சரிவில் பலரும் சிக்கி இருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

தலியே கிராமத்தில் 32 பேரும், சுடர்வதி கிரமாத்தில் 4 பேரும் உயிரிழந்ததாக ரைகாட் மாவட்ட ஆட்சியர் நிதி சௌத்ரி ஏஎன்ஐ செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளார்.

கனமழை பெய்து வரும் மாவட்டங்களில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் பணியமர்த்தப்பட்டிருக்கிறார்கள். நீர் சூழ்ந்த இடங்களில் உள்ள வீடுகளில் சிக்கியிருப்பவர்களை மீட்க இந்திய கடற்படையின் உதவியும் நாடப்பட்டுள்ளது.

மழை

பட மூலாதாரம், SACHIN SHINDE

முற்றிலும் சேதமடைந்த சாலைகள், செல்போன் டவர்கள் சேத்ததால் தகவல் தொடர்பு பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால் மீட்புக்குழுவினர் பல தடைகளை சந்தித்து வருகின்றனர்.

எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் எவ்வளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறித்த நிலை இன்னும் தெளிவாக தெரியவரவில்லை.

இந்நிலையில் மீட்புப் பணிகள் குறித்து மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்ரேவிடம், தொலைப்பேசி வாயிலாக இந்தியப் பிரதமர் மோதி விசாரித்தார்.

கடலோர மற்றும் மத்திய மகாராஷ்டிரா பகுதிகளில் ஜூலை 22 முதல் 26 வரை கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :