விவசாயிகள் போராட்டம்: கிரெட்டா டூன்பெர்க் மீது வழக்கா? டெல்லி போலீஸ் விளக்கும் முன்பே வறுத்தெடுத்த ட்ரோலர்கள்

பட மூலாதாரம், Getty Images
டெல்லியை இணைக்கும் எல்லைகளில் இந்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக 70 நாட்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்த விவகாரத்தில் சர்வதேச சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர் கிரெட்டா டூன்பெர்க் உள்ளிட்டோரின் பெயரை முதல் தகவல் அறிக்கையில் டெல்லி காவல்துறை சேர்த்ததாக வெளியான தகவலால் நகர காவல்துறை கடுமையாக ட்விட்டரில் ட்ரோல் செய்யப்பட்டது.
இந்த நிலையில், இந்த விவகாரத்தில் எவருடைய பெயரையும் குறிப்பிடாமல் மட்டுமே நகர காவல்துறையின் சைபர் பிரிவு வழக்கு பதிவு செய்திருப்பதாக சிறப்பு ஆணையர் பிரவீர் ரஞ்சன் செய்தியாளர்களிடம் தெளிவுபடுத்தினார். சமீப காலமாக ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் ஒரு ஆவணம் பகிரப்பட்டு வருகிறது. அதில் இந்தியாவுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுக்கும் வழிமுறைகள் ஊக்குவிக்கப்படும் வகையில் இருப்பதால் அதன் பின்னணியில் வெளிநாட்டு சக்திகள் உள்ளனவா என்பது குறித்து விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளதாக பிரவீர் ரஞ்சன் தெரிவித்தார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1

X பதிவின் முடிவு, 2

X பதிவின் முடிவு, 3
விவசாயிகள் நடத்தி வரும் போராட்டங்களுக்கு இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாட்டில் உள்ள திரை, பாப் இசை பிரபலங்கள் ஆதரவு தெரிவித்து தங்களுடைய சமூக வலைதள பக்கங்களில் இடுகைகளை பதிவிட்டு வருகின்றனர். இதனால், விவசாயிகள் போராட்ட விவகாரத்தில் மத்திய அரசு கடைப்பிடிக்கும் அணுகுமுறை சர்வதேச தளங்களில் விவாதப்பொருளாகி வருகிறது.
சமீபத்தில் விவசாயிகளின் போராட்டம் தொடர்பாக சர்வதேச சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர் கிரெட்டா டூன்பெர்க், சர்வதேச பாப் இசை பாடகி ரியான்னா உள்ளிட்டோர் தங்களுடைய ட்விட்டரில் பதிவிட்டிருந்தனர். இதில் ரியான்னாவின் ட்வீட்டுக்கு பாலிவுட் பிரபலங்கள் கடுமையாக எதிர்வினையாற்றினர்.
இந்தி நடிகர் அக்ஷய் குமார், அஜய் தேவ்கன், நடிகை டாப்ஸி உள்ளிட்ட பிரபலங்கள் மட்டுமின்றி இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர், கிரிக்கெட் வீரர் விராட் கோலி, முன்னாள் தடகள வீராங்கனை பி.டி. உஷா உள்ளிட்டோரும் இந்தியாவின் இறையாண்மை விவகாரத்தில் வெளிநாட்டினர் கருத்து தெரிவிப்பதை ஏற்க முடியாது என்று குறிப்பிட்டிருந்தனர்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 4

X பதிவின் முடிவு, 5

X பதிவின் முடிவு, 6
முன்னதாக, கிரெட்டா டூன்பெர்க் தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்தியாவில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக நாங்கள் நிற்கிறோம்," என்று கூறியிருந்தார். விவசாயிகள் போராட்டம் தொடர்பாக சிஎன்ன சர்வதேச ஊடகம் வெளியிட்ட செய்தியின் பக்கத்தின் இணைய இணைப்பையும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், விவசாயிகள் போராட்ட விவகாரத்தில் வெளிநாட்டு சதி ஏதும் உள்ளதா என்பது குறித்து டெல்லி காவல்துறையின் சைபர் பிரிவு விசாரித்து வருவதாக நகர காவல்துறை சிறப்பு ஆணையர் பிரவீர் ரஞ்சன் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை தெரிவித்தார்.
இந்த நிலையில், இந்தியாவில் குற்றச்சதி மற்றும் விரோதத்தை ஏற்படுத்தும் நோக்குடன் கருத்துகளை சமூக தளங்களில் பதிவிட்டதாக கிரெட்டா டூன்பெர்க் மற்றும் சிலரின் பெயர்களை சேர்த்து டெல்லி காவல்துறை வழக்கு பதிவு செய்திருப்பதாக சில தொலைக்காட்சி ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் தகவல் வெளியாயின.
ஆனால், இந்தியாவில் மதம், இனம், பிறப்பிடம், மொழி ரீதியாகவும் நல்லிணக்கத்துக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் பெயர் குறிப்பிடாத சிலர் ஈடுபட்டுள்ளதாக மட்டுமே வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பாதக நகர சிறப்பு காவல் ஆணையர் பிரவீர் ரஞ்சன் தெளிவுபடுத்தினார்.
ஆனால், இது பற்றிய விளக்கத்தை டெல்லி காவல்துறை அளிக்கும் முன்பே, சமூக ஊடகங்களில் வெளியான தகவல்களின் அடிப்படையில் பலரும் எதிர்வினையாற்றத் தொடங்கினார்கள்.
கிரெட்டா டூன்பெர்க் மீண்டும் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு இடுகையை வியாழக்கிழமை பதிவிட்டார். அதில், "இப்போதும் நான் விவசாயிகளுடன் அவர்களின் அமைதிவழி போராட்டத்துக்கு ஆதரவாகவே இருக்கிறேன். எவ்வித வெறுப்புணர்வோ, அச்சுறுத்தல்களோ மனித உரிமை மீறல்கள் செய்தாலும் அதை மாற்ற முடியாது," என்று அவர் கூறியிருக்கிறார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 7
முன்னதாக, சர்வதேச விவசாயிகள் போராட்டம் - முதல் அலை என்ற பெயரில் ஒரு ஆவணத்தின் இணை இணைப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் வியாழக்கிழமை அதிகாலையில் கிரெட்டா பகிர்ந்திருந்தார்.
அதில் ஒரு போராட்டத்தை எப்படி எல்லாம் நடத்தலாம் என்பது விவரிக்கப்பட்டிருக்கிறது. வெளிநாடுகளில் குறிப்பாக இந்திய தூதரகங்களுக்கு அருகே விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடத்த ஊக்கப்படுத்துவது, உள்ளூர் அரசு அலுவலகங்களிலும் அதானி, அம்பானிக்கு சொந்தமான பன்னாட்டு நிறுவனங்களின் முன்பாகவும் எப்படி போராட்டம் நடத்தலாம் என்றும் அந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. கடந்த ஜனவரி மாதம் முதல் இந்த ஆவணம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் நிலையில், அதில் இடம்பெற்றிருந்த டிராக்டர் பேரணி தொடர்பான வரிகள் தற்போது நீக்கப்பட்டிருக்கின்றன. மேலும், விவசாயிகள் போராட்ட கோரிக்கைகளுக்கு ஆதரவாக ஆன்லைன் கையெழுத்து இயக்கம் நடத்தி அதை பிரதமர் அலுவலகம், இந்திய விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், அரசு பிரதிநிதிகளுக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள் என்றும் மக்களை அது ஊக்குவிக்கிறது. வரும் 13 மற்றும் 14ஆம் தேதிகளில் உள்ளூர் அரசுத்துறை அலுவலகங்கள், ஊடக அலுவலகங்கள், வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகம் மூலம் போராட்டம் நடத்துங்கள் என்றும் அந்த ஆவணத்தில் கூறப்பட்டிருக்கிறது.
இதுவே, இந்த விவகாரத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய நகர காவல்துறையை தூண்டியிருப்பதாக கருதப்படுகிறது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 8
இதேவேளை, கிரெட்டா டூன்பெர்கின் பெயரை டெல்லி காவல்துறை தனது முதல் தகவல் அறிக்கையில் சேர்த்திருப்பதாக தகவல் வெளியானதுமே நகர காவல்துறையை அதன் ட்விட்டர் பக்க முகவரியை டேக் செய்து ட்விட்டர் பயனர்கள் பலரும் ட்ரோல் செய்யத் தொடங்கினார்கள்.
இந்த இடுகையை அவர் பகிர்ந்த சில நொடிகளிலேயே அவரது பதிவு, 36 ஆயிரத்துக்கும் அதிகமான லைக்குகளை பெற்றது. பலரும் டெல்லி காவல்துறையின் மிரட்டலுக்கு அடிபணியாத கிரெட்டாவுக்கு வாழ்த்துகள் என்று குறிப்பிட்டிருந்தனர்.
ஒரு பயனர், "கிரெட்டா, உங்களுடைய துணிவுக்கு நன்றி. எங்களுடைய தலைநகர காவல்துறை போராட்டக்காரர்களை பயங்கரவாத குற்றச்சாட்டுகளில் வழக்கு பதிவு செய்யும் வரலாறை கொண்டது," என்று கூறியிருந்தார். வேறொரு பயனர், "இந்தியாவில் இப்போதும் இதுபோன்ற நபர்கள் இருக்கவே செய்கிறார்கள். அவர்களை எல்லாம் வைத்து எங்களை தவறாக எடை போட வேண்டாம்," என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.
அமித் ஷாவுடன் அஜித் தோவால், டெல்லி காவல் ஆணையர் ஆலோசனை
இந்த நிலையில், இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் வியாழக்கிழமை மாலையில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பு சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது. அஜித் தோவால் அமித் ஷாவை சந்தித்த அதே சமயம், டெல்லி நகர காவல்துறை ஆணையர் ஸ்ரீவாஸ்தவாவும் நாடாளுமன்றத்தில் உள்ள உள்துறை அமைச்சர் அலுவலகத்துக்கு அழைக்கப்பட்டார்.
இந்த சந்திப்புகளுக்கு முன்பாகவே, டெல்லி காவல்துறை சிறப்பு ஆணையர் செய்தியாளர்களை அழைத்து, விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வரும் சர்வதேச பிரபலங்கள் விவகாரத்தில் பதிவான வழக்கில் எவருடைய பெயரும் குறிப்பிடப்படவில்லை என்று தெளிவுபடுத்தியிருக்கிறார்.
பிற செய்திகள்:
- விவசாயிகள் போராட்டம்: டெல்லி எல்லையில் தடுக்கப்பட்ட தமிழக எம்.பி.க்கள் - காவல்துறையுடன் வாக்குவாதம்
- ஈஷா சிங்: தடைகளை சுட்டுத்தள்ளும் இந்திய இளம் துப்பாக்கி சுடுதல் வீராங்கனை
- INDIA Vs ENGLAND: முக்கியத்துவம் வாய்ந்த டெஸ்ட் தொடரில் யாருக்கு வெற்றி?
- மியான்மர் ஆட்சிக்கவிழ்ப்பு: ஐ.நா பொதுச் செயலர் கண்டனம், ராணுவத்தால் ஃபேஸ்புக் முடக்கப்பட்டதாக தகவல்
- "பசிக்கின்றதா..எடுத்துக்கோங்க..." - ஆதரவற்றோருக்கு இலவசமாக பிரியாணி வழங்கும் பெண்
- 'எனது திராவிட நாட்டுக்கு உரிமை கேட்கிறேன்' - நாடாளுமன்றத்தில் பேசிய அண்ணா
- அமேசான் நிறுவனத்தின் தலைமை பொறுப்பிலிருந்து விலகுகிறார் ஜெஃப் பெசோஸ்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: