You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
1.1 டிகிரி குளிர் வாட்டிய டெல்லி புத்தாண்டு நாள்: 15 ஆண்டுகளில் இல்லாத நடுக்கம்
2021 புத்தாண்டு தினம் இந்தியத் தலைநகர் டெல்லிக்கு நடுங்கும் குளிர் நாளாக இருந்தது.
அதிகாலை குறைந்தபட்ச வெப்ப நிலை 1.1 டிகிரி செல்ஷியஸ் அளவுக்கு சென்றது.
சஃப்தர்ஜங் தட்ப வெட்ப கண்காணிப்பகத்தில் இந்த வெப்ப நிலை பதிவானது.
காலை 6 மணி அளவில் பனி மூட்டம் முழுவதுமாக சாலைகளில் எதிரில் வருவோரைக் கூட பார்க்க முடியாத அளவில் இருந்தது. அந்த நேரத்தில் காணும் திறன் பூஜ்யமாக இருந்தது என்று வானிலை ஆய்வு மையத்தின் வட்டாரத் தலைவர் குல்தீப் ஸ்ரீவாஸ்தவா தெரிவித்துள்ளார்.
இது டெல்லியில் கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்த வெப்ப நிலை என்று என்.டி.டி.வி. இணைய தளம் கூறுகிறது.
2006ம் ஆண்டு ஜனவரி 8ம் தேதி டெல்லியில் வெப்பநிலை 0.2 டிகிரி செல்ஷியஸ் என்ற அளவில் பதிவானது என்றும் கடந்த ஆண்டு ஜனவரியில் குறைந்தபட்சமாக 2.4 டிகிரி வெப்பநிலை பதிவானது என்றும் ஸ்ரீவாஸ்தவா கூறியுள்ளார்.
ஆனால் நாளை முதல் குறைந்தபட்ச வெப்ப நிலையின் அளவு தொடர்ந்து உயரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
விவசாயிகள் போராட்டம் நடக்கும் சிங்கு எல்லைப் பகுதியில் பனி எப்படி இருந்தது தெரியுமா? இந்தப் பதிவில் ஏ.என்.ஐ. பதிவிட்டுள்ள படங்களைப் பாருங்கள்:
காந்தி சமாதி அமைந்துள்ள ராஜ்காட் பகுதியில் இன்று அதிகாலைப் பனி இப்படித்தான் இருந்தது.
அதைப் போல காற்று மாசுபாடு அளவும் டெல்லியில் புத்தாண்டு நாளில் மிகவும் அபாயமான கட்டத்தில் இருந்தது.
பிற செய்திகள்:
- உள் உறுப்புகள் சிதையாமல் கிடைத்தது 20 ஆயிரம் ஆண்டுகள் முன்பு இறந்த விலங்கின் உடல்
- பூர்வகுடிகள் வரலாற்றை பிரதிபலிக்கும் வகையில் தேசிய கீதத்தை மாற்றிய ஆஸ்திரேலியா
- மாதவிடாய் கால சானிட்டரி பேட்களின் 100 கோடி கழிவுகள் எங்கு செல்கின்றன?
- 2020இல் கொரோனாவால் இந்தியாவிலேயே அதிகம் உயிரிழந்த தமிழக மருத்துவர்கள்
- "ரஜினி அரசியலை கைவிட்டதால் தப்பித்தது தமிழ்நாடு" - இலங்கை தமிழர் தலைவர்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்