You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வெங்காயம் ஏற்றுமதிக்கு இந்தியா தடை - பாகிஸ்தான், சீனாவுக்கு லாபம் தரும் நடவடிக்கையா?
இந்தியாவில் வெங்காய ஏற்றுமதிக்கு வர்த்தகத்துறையின் கீழ் செயல்படும் அன்னிய வர்த்தக தலைமை இயக்குநரகம் திடீரென்று திங்கட்கிழமை இரவு விதித்த தடையால் விவசாயிகளில் ஒரு தரப்பினர் கவலையில் ஆழ்ந்துள்ளனர். அரசின் நடவடிக்கையால் பாகிஸ்தான் ஆதாயம் பெறும் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு ஏற்றுமதி மூலம் இதுவரை கிடைத்து வந்த நல்ல விலை இனி பாதிக்கப்படலாம் என்றும் வியாபாரிகள் கூறுகின்றனர்.
இந்தியாவில் ஏற்கெனவே மழைக்காலத்தில் மத்திய பிரதேசம், குஜராத், கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் உள்ள விவசாயிகள் சாகுபடி செய்த வெங்காயம் போதிய மகசூலை எட்டவில்லை. ஏற்றுமதி வருவாய் மூலம் அவர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்தலாம் என எண்ணியிருந்த நிலையில், இந்திய அரசின் அறிவிப்பு வெளி வந்துள்ளதாக அவர்கள் கருதுகிறார்கள்.
இந்த நிலையில், இந்திய அரசின் இந்த நடவடிக்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (என்சிபி) சரத் பவார் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக இந்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தனது நிலையை ஏன் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டு அதற்கான காரணங்களாக தான் கருதும் சில விஷயங்களையும் தனது டிவிட்டர் பக்கத்தில் சரத் பவார் கூறியுள்ளார்.
இந்திய வெங்காயத்துக்கு ஏற்றுமதி தடை விதிக்கப்பட்டிருப்பதால் அதனால் பலன் பெறப்போவது பாகிஸ்தான்தான். சர்வதேச சந்தையில் இந்திய வெங்காயத்துக்கு உள்ள நன்மதிப்பை பாதிக்கும் வகையில் அரசின் நடவடிக்கை அமைந்துள்ளது என்று சரத் பவார் கூறியுள்ளார்.
இந்திய அரசின் நடவடிக்கைக்குப் பிறகு மகாராஷ்டிராவில் உள்ள இந்திய வெங்காய ஏற்றுமதியாளர்கள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் திங்கட்கிழமை இரவு தன்னை தொடர்பு கொண்டு பேசியதாகவும் உடனடியாக அரசின் தடை நடவடிக்கையை திரும்பப்பெற வலியுறுத்துமாறும் தன்னை அவர்கள் கேட்டுக் கொண்டதாகவும் சரத் பவார் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனை கட்சி தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சியும் சரத் பவாரின் என்சிபியும் அங்கம் வகிக்கின்றன. இந்த நிலையில், வெங்காய ஏற்றுமதி தடை தொடர்பான விவகாரத்தில் சரத் பவார் தனது எதிர்ப்பை பதிவு செய்திருப்பது முக்கியத்தவம் வாய்ந்த செயலாக கருதப்படுகிறது.
வங்கதேசத்தில் அதிகரித்த வெங்காயம் விலை
இந்தியாவில் இருந்து வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடையின் தாக்கம் அண்டை நாடான வங்கதேசத்தில் கடுமையாக எதிரொலித்தது. அங்கு செவ்வாய்க்கிழமை 50% அளவுக்கு வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ளது.
தடை உத்தரவு அமல்படுத்தப்படுவதற்கு சில மணி நேரத்துக்கு முன்பு வங்கதேசம் செல்வதற்காக நூற்றுக்கணக்கான வெங்காயம் ஏற்றி வந்த லாரிகள் எல்லை மாவட்டங்களில் நின்று கொண்டிருந்தன. அவை அனைத்தும் திங்கட்கிழமை இரவு அமலுக்கு வந்த திடீர் தடை நடவடிக்கையால் உள்நாட்டிலேயே புழக்கத்துக்கு விடப்படும் நிலை உருவாகியுள்ளது.
- கொரோனா சந்தேகங்கள்: முக்கிய கேள்விகளும் அதற்கான பதில்களும்
- கொரோனா வைரஸ்: உங்களை தற்காத்துக் கொள்வது எப்படி?
- கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு மருந்து எப்போது கிடைக்கும்?
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா வைரஸ் : இதுவே கடைசி கொள்ளை நோய் அல்ல
- கொரோனா வைரஸ்: கோவிட் - 19 பற்றி நமக்கு தெரியாத விஷயங்கள் என்ன?
அந்நாட்டில் திங்கட்கிழமை காலையில், 60 டாக்கா அளவுக்கு விற்கப்பட்ட வெங்காயம் செவ்வாய்க்கிழமை கிலோ 90 டாக்கா முதல் 100 டாக்காவரை விற்கப்படுகிறது.
2019இல் இதேபோன்ற தடையை இந்தியா அறிவித்தபோது, வங்கதேசத்தில் வெங்காயம் விலை வரலாற்றில் இல்லாத அளவுக்கு கிலோ 250 டாக்கா அளவுக்கு விற்கப்பட்டது. இதனால், வெங்காய தட்டுப்பாட்டை போக்க வேறு நாடுகளின் உதவியை வங்கதேசம் நாடும் நிலைக்கு தள்ளப்பட்டது.
இதேபோல, இந்தியாவில் இருந்து நேபாளத்துக்கு வெங்காய ஏற்றுமதி நிறுத்தப்பட்டபோது, அந்த நாடு சீனாவை அணுகி அங்கிருந்து வெங்காயத்தை பெற நடவடிக்கை எடுத்தது. இதன் பிறகு வெங்காய ஏற்றுமதி தடையை இந்தியா தளர்த்திய போதிலும், இந்தியாவிடம் இருந்து வெங்காயத்தை கொள்முதல் செய்யாமல் தொடர்ந்து சீனாவில் இருந்தே நேபாளம், வெங்காயத்தை கொள்முதல் செய்து வருகிறது.
இந்தியாவில் வெங்காயம் விலையை கட்டுப்படுத்த சமீபத்திய நடவடிக்கை உதவினாலும், அண்டை நாடான வங்கதேசம், மியான்மர் ஆகியவற்றில் இது தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அந்த நாடுகளின் வர்த்தகர்கள் கூறுகிறார்கள்.
பிற செய்திகள்:
- தமிழகத்தில் கொரோனா வைரஸ் சிகிச்சையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் என்ன?
- வெள்ளியில் வேற்று கிரக உயிர்கள்? - நம்பிக்கை ஒளி பாய்ச்சும் புதிய கண்டுபிடிப்பு
- சீனாவின் கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கு ஐக்கிய அரபு அமீரகம் அவசர ஒப்புதல்
- 'முஸ்லிம்கள் மீது ஒடுக்குமுறை'' - சீனா மீது அமெரிக்கா புதிய நடவடிக்கை
- 'இந்தி தெரியாது போடா' டி-ஷர்ட் அணிந்தாரா ஜஸ்டின் ட்ரூடோ?
- தி.மு.கவைத் துவக்கிய நாளில் அண்ணா பேசியது என்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: