You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
திருப்பதி கோயில் மீண்டும் திறக்கப்பட்டது : 15 முக்கிய தகவல்கள்
கோவிட்-19 ஊரடங்கு காரணமாக மூடப்பட்ட திருப்பதி கோயில் கிட்டத்தட்ட 80 நாட்களுக்கு பிறகு இன்று (ஜூன் 8) பரிசோதனை முறையில் திறக்கப்பட்டுள்ளது இது குறித்த 15 முக்கியத் தகவல்களைத் தொகுத்து வழங்குகிறோம்.
- ஜூன் 6 மற்றும் 7ஆம் தேதிகளில் திருப்பதி தேவஸ்தானத்தில் வேலை செய்பவர்களுக்கான முன் பதிவு தொடங்கியது.
- ஜூன் 8 மற்றும் 9ஆம் தேதிகளில் திருப்பதி தேவஸ்தானத்தில் வேலை செய்பவர்கள் பரிசோதனை முறையில் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர்.
- ஜுன் 10ஆம் தேதி ஒரு மணி நேரத்திற்கு 500 பேர் என திருப்பதியில் வசிக்கும் உள்ளூர் மக்கள் மட்டும் அனுமதிக்கப்படுவர்.
- ஜூன் 11 ஆம் தேதி முதல் ஒரு நாளுக்கு 6000 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
- இந்திய அரசின் ஆணைப்படி 65 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
- ஜூன் 11ஆம் தேதி முதல் சிறப்பு தரிசனம் செய்யலாம். ஒரு நாளுக்கு 3000 பேருக்கு மட்டுமே இது அனுமதிக்கப்படும். ஆன்லைன் மூலம் 300 ரூபாய் செலுத்தி, ஜூன் 8 முதல் இதற்காக முன்பதிவு செய்யலாம்.
- அதே போல் பொது தரிசனம் செய்ய 3000 பேருக்கு கவுண்ட்டரில் டிக்கெட் வழங்கப்படும். இவர்களும் அந்த 6000 பேரில் அடக்கம்.
- விஐபி தரிசனம் ஜூன் 11 முதல் தொடங்குகிறது. தினமும் 6.30 முதல் 7.30 வரை விஐபி-கள் அனுமதிக்கப்படுவர். விஐபி பரிந்துரை செய்பவர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.
- அடிவாரத்தில் இருந்து மேலே மலைக்கு செல்லும் இரண்டு பாதையில் அலிபிரி நடைபாதை மட்டும் காலை 6 மணி முதல் 4 மணி வரை திறந்திருக்கும். மற்றொரு நடைபாதையான ஸ்ரீவாரி மெட்டு மூடப்பட்டிருக்கும்.
- அலிபிரி பாதை மூலம் செல்லும் பக்தர்களுக்கு உடல் வெப்பநிலையை அறிவதற்கான தெர்மல் ஸ்கிரீனிங் செய்யப்படும்.
- மலையின் முக்கிய கோயில் மட்டுமே திறந்திருக்கும். அதை தவிர அருகில் இருக்கும் சிறு கோயில்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும்.
- திருப்பதியில் தங்கும் விடுதியில் ஓர் அறைக்கு இரண்டு பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். 12 மணி நேரத்திற்கு பிறகே அடுத்த நபருக்கு அந்த அறை கொடுக்கப்படும்.
- கொரோனா நோய் தடுப்பு கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இருப்பவர்கள் ஆன்லைனில் டிக்கெட்டுகள் பதிவு செய்ய வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
- பிற மாநிலங்களில் இருப்பவர்களும் அந்தந்த மாநிலங்களின் விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று தேவஸ்தானம் கூறியுள்ளது.
- கிராமப்புறங்களில் இருந்து வருபவர்களுக்கும் ஆன்லைன் முன்பதிவு அவசியம். கிராமப்புற மக்களுக்கு இணையம் மூலம், தன்னார்வலர்களைக் கொண்டு முன்பதிவு செய்யப்படும். தன்னார்வலர்களை அடையாளம் கண்டு பயிற்சி அளிக்க உதவுமாறு, ஆந்திராவில் உள்ள மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அரசின் உதவியை தேவஸ்தானம் கேட்டுள்ளது.
பிற செய்திகள்:
- இந்தியாவில் இன்று முதல் திறக்கப்படும் வழிபாட்டுதலங்கள், ஷாப்பிங் மால்கள் - சில முக்கிய தகவல்கள்
- 'வந்தே பாரத்' விமானங்களின் கட்டணம் உயர்வு: வெளிநாடுகளில் தவிக்கும் இந்தியர்கள்
- ''அரசியலமைப்பு சட்டத்திலிருந்து திசைமாறிச் செல்கிறார் டிரம்ப்'' - குடியரசு கட்சிக்குள் எழுந்த எதிர்ப்பு
- 25 பள்ளிகளில் வேலை செய்து 1 கோடி வரை சம்பளம் பெற்றதாக ஆசிரியர் மீது குற்றச்சாட்டு - நடந்தது என்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: