‘மே 25 முதல் விமானத்தில் பயணிப்போர் தனிமைப்படுத்தமாட்டார்கள்’ - 10 முக்கிய தகவல்கள் என்ன?

பட மூலாதாரம், Getty Images
இந்தியாவில் மே 25 முதல் உள்ளூர் விமானப் போக்குவரத்து சேவை தொடங்கப்பட இருக்கிறது. இதில் பயணிப்போருக்கான விதிமுறைகள் ஏற்கனவே வெளியிடப்பட்டன.
இந்நிலையில் டெல்லியில், மத்திய சிவில் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது விமான போக்குவரத்து சேவை மீண்டும் தொடங்கப்படுவது தொடர்பாக மேலும் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

பட மூலாதாரம், Getty Images
அதனை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.
1.இதுவரை ரயிலில் பயணம் செய்தவர்கள் பரிசோதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட நிலையில், அடுத்த வாரத்தில் இருந்து விமானத்தில் பயணிப்போரை தனிமைப்படுத்தும் திட்டம் இல்லை என்று அமைச்சர் தெரிவித்தார்.
2.ஒரு மெட்ரோ நகரத்தில் இருந்து மற்றொரு மெட்ரோ நகரத்திற்கு மூன்றில் ஒரு பங்கு விமானங்கள் மட்டுமே இயக்கப்படும். உதாரணமாக ஒரு நாளைக்கு 100 விமானங்கள் சாதாரணமாக இயக்கப்படும் என்றால், தற்போது 33 விமானங்கள் மட்டுமே இயக்கப்படும்.
3.டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரூ, கொல்கத்தா மற்றும் ஹைத்தராபாத் ஆகிய 6 நகரங்கள் இந்தியாவின் மெட்ரோ நகரங்கள் ஆகும். அதே போல மெட்ரோ நகரத்தில் இருந்து மற்ற நகரங்களுக்கும் மூன்றில் ஒரு பங்கு விமானங்கள் மட்டுமே இயக்கப்படும்.
4இந்தியாவில் மே 25 முதல் உள்ளூர் விமானப் போக்குவரத்து சேவை தொடங்கப்பட உள்ள நிலையில், விமான டிக்கெட்டுகள் அதிகமாக இருக்கும் என்ற பேச்சு இருந்தது. இந்நிலையில், விமான டிக்கெட்டுகளின் விலை முறைப்படுத்தப்பட்டுள்ளது.
5.விமான டிக்கெட்டுகளுக்கு அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக டெல்லியில் இருந்து மும்பைக்கு குறைந்தபட்ச விலை 3,500 ரூபாயாகவும், அதிகபட்சமாக 10,000 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இது மூன்று மாதங்களுக்கு அமலில் இருக்கும்
6மேலும் 40 சதவீத விமான டிக்கெட்டுகள் இரண்டிற்கும் நடுவில், அதாவது அதிகபட்ச விலை மற்றும் குறைந்தபட்ச விலைக்கும் நடுவில் விற்கப்பட வேண்டும். உதாரணமாக, 3,500 ரூபாய்கும், 10,000ரூபாய்கும் இடையிலான விலை 6,700 ரூபாயாகும். எனவே 40 சதவீத விமான டிக்கெட்டுகள் 6,700 ரூபாய்கு விற்கப்பட வேண்டும். இதன் மூலம் டிக்கெட்டுகளின் விலை மிகவும் அதிகமாகாமல் கட்டுப்படுத்தலாம் என்று சிவில் விமான போக்குவரத்து துறையின் செயலாளர் தெரிவித்தார்.
7.விமான டிக்கெட்டுகளின் விலையை முறைப்படுத்த ஏழு பிரிவுகளாக விமான வழித்தடங்கள் பிரிக்கப்பட்டுள்ளன.
8.அதாவது, 40 நிமிடங்களுக்கு குறைவான பயண நேரம், 90 -120 நிமிடங்களுக்குள்ளான பயண நேரம் போன்று பல பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, அதற்கேற்ப விமான டிக்கெட்டுகளின் விலை நிர்ணயிக்கப்படும்
•40 நிமிடங்களுக்கு குறைவான பயண நேரம் - குறைந்தபட்ச விலை ரூ. 2000, அதிகபட்ச விலை ரூ. 6000
•40 - 60 நிமிடங்கள் பயண நேரம் - குறைந்தபட்ச விலை ரூ. 2500, அதிகபட்ச விலை ரூ. 7500
•60 - 90 நிமிடங்கள் பயண நேரம்
•90 - 120 நிமிடங்கள் பயண நேரம் - குறைந்தபட்சத் தொகை ரூ. 3500, அதிகபட்ச தொகை ரூ. 10000
•120 - 150 நிமிடங்கள் பயண நேரம் - குறைந்தபட்சத் தொகை ரூ. 4500, அதிகபட்ச தொகை ரூ. 13000
•150 - 180 நிமிடங்கள் பயண நேரம் - குறைந்தபட்சத் தொகை ரூ. 5500, அதிகபட்ச தொகை ரூ. 15,700
•180 - 210 நிமிடங்கள் பயண நேரம் - குறைந்தபட்சத் தொகை ரூ. 6500, அதிகபட்ச தொகை ரூ. 18,600
9. விமான சேவைகள் எப்போது முழுமையாக இயங்கும் என்பதை இப்போது கூற முடியாது என்றும் அமைச்சர் ஹர்தீப் சிங் தெரிவித்தார்.
10. தற்போது உள்ளூர் விமான சேவை மட்டும் தொடங்கப்பட உள்ள நிலையில், இதனை அடிப்படையாக வைத்து வெளிநாடுகளுக்கு விமான சேவை இயக்கப்படுவது குறித்து ஆலோசிக்கப்படும்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












