You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வைரலாகும் ரஜினியின் கேலி மீம்ஸ் - "எழுச்சி வரட்டும், அப்புறம் நான் வரேன்"
தமிழக மக்களிடம் ஓர் அரசியல் எழுச்சி ஏற்பட வேண்டும் அப்போதுதான் அரசியலுக்கு வருவேன் என்று ரஜினி பேசிய நிலையில், சமூக ஊடகங்களில் ரஜினியின் பேச்சை விமர்சித்து கேலி செய்து பல மீம்களும், கருத்துகளும் பகிரப்பட்டு வருகின்றன.
இன்று (வியாழக்கிழமை) சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் ரஜினி செய்தியாளர்களை சந்திப்பார் என்ற தகவல் கிடைத்த போது, பல ஊகங்கள் வெளியாகின.
அரசியல் கட்சி குறித்து அறிவிப்பார், மாநாடு நடத்தப் போகும் இடம் குறித்து தெரிவிப்பார், முதல்வர் வேட்பாளர் யார் என்ற விவரத்தை அவிழ்ப்பார் என்றெல்லாம் ரஜினி ரசிகர்கள் சிலாகித்து வந்தார்கள்.
ஆனால், இன்று ரஜினியின் செய்தியாளர் சந்திப்பு முடிந்த நிலையில், மீண்டும் ஒரு குழப்பமான சந்திப்பையே நடத்திவிட்டு சென்றிருப்பதாக அதில் பங்கேற்ற செய்தியாளர்கள் நினைக்கின்றனர்.
அப்படி செய்தியாளர் சந்திப்பில் அவர் பேசியது என்ன என்பதை இந்த இணைப்பில் தெரிந்துகொள்ளலாம் -
தமிழக மக்களிடமும், இளைஞர்களிடமும் ஓர் அரசியல் எழுச்சி ஏற்பட வேண்டும் என்று பேசியவர், திடீரென இந்தியா முழுவதும் அந்த எழுச்சி இருக்க வேண்டும் என்றார்.
அந்த எழுச்சி வரும் நேரம் தான் அரசியலில் இறங்குவேன் என்று மேஜையைத் தட்டி கர்ஜித்த ரஜினி, இறுதியாக ஜெய் ஹிந்த் சொல்லி உரையை முடித்து கொண்டார்.
இன்று காலையிலிருந்தே ட்விட்டரில் #RajinikanthPressMeet #Rajinikanthpoliticalentry போன்ற ஹாஷ்டேக்குகள் இந்தியளவில் டிரெண்ட் பட்டியலில் இருந்த நிலையில், செய்தியாளர் சந்திப்பு முடிந்தவுடன் #பயந்துட்டியா_கொமாரு #இலவுகாத்தகிளி_ரஜினி போன்று ரஜினியை கேலி செய்யும் ஹாஷ்டேகுகள் தமிழக அளவில் டிரெண்டிங் அடித்து வருகின்றன.
சில கேலி மீம்களை இங்கு தொகுத்து வழங்கியுள்ளோம்.
பெரிய அறிவிப்பு ஒன்று வரும் என்று காத்திருந்த ரஜினி ரசிகர்களுக்கு இது ஏமாற்றம்தான் என்றாலும், ரஜினியின் இந்த எதார்த்தமான பேச்சை கொண்டாடி வருகிறார்கள்.
பிற செய்திகள்:
- கொரோனா வைரஸ் பரவல் தீவிரமானால் இந்தியாவால் சமாளிக்க முடியுமா? - விரிவான அலசல்
- கொரோனா வைரஸ்: ஐரோப்பாவுடன் விமான சேவையை துண்டித்த அமெரிக்கா, விசா வழங்குவதை நிறுத்திய இந்தியா
- ஒரு லட்சம் வாத்துகள், 1000 கோடி ரூபாய் பணம்: வெட்டுக்கிளி பிரச்சனை, திணறும் தேசங்கள்
- கொரோனா: மும்பையில் இருவர் பாதிப்பு, 73 ஆக உயர்ந்த எண்ணிக்கை - இந்தியாவில் நிலை என்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: