You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
குடியுரிமை திருத்த சட்டம்: ஆதரவாக களமிறங்கிய 1000 கல்வியாளர்கள் மற்றும் அறிவுஜீவிகள்
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக 1000 சிந்தனையாளர்கள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.
தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் நாடு முழுவதும் தீவிரமடைந்து, போராட்டக்காரர்களின் உயிரிழப்பு, கைதுகள் உள்ளிட்டவை நிகழ்ந்துவரும் சூழலில், 1000 அறிவுஜீவிகள் அந்த சட்டத்துக்கு ஆதரவளித்துள்ளனர்.
அவர்கள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், "புகலிடம் கோரும் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேச மக்களின் வெகுநாள் கோரிக்கை இந்த சட்டத் திருத்தம் மூலம் நிறைவேறி உள்ளது," என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மறந்துபோன சிறுபான்மையினருக்காக எழுந்து நின்று, இந்தியாவின் நாகரீகத்தை நிலை நிறுத்தியதற்காகவும், மத ரீதியிலான துன்புறுத்தல்களைச் சந்தித்தவர்களுக்குப் புகலிடம் அளிப்பதற்காகவும் நாடாளுமன்றத்தைப் பாராட்டுகிறோம்.
இந்தக் கூட்டறிக்கையில் சென்னை ஐஐடி-யை சேர்ந்த பல பேராசிரியர்கள், முன்னாள் மாணவர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.
நாட்டில் வேண்டுமென்றே பயத்தையும், குழப்பத்தையும் ஏற்படுத்தி, வன்முறைக்கு வழிநடத்துகின்றனர். இவற்றை மிகுந்த வேதனையுடன் கவனிக்கிறோம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது
இந்த அறிக்கையில், மாநிலங்களவை உறுப்பினர் சுவபன் தாஸ்குப்தா, ஷில்லாங் ஐ.ஐ.எம். தலைவர் சிஷிர் பஜோரியா, நாளந்தா பல்கலைக்கழக துணைவேந்தர் சுனைனா சிங், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக டீன் அய்னுல் ஹசன் உள்ளிட்டோரும் கையெழுத்திட்டுள்ளனர்.
இந்த சட்டத் திருத்தமானது, இந்த பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசத்தை சேர்ந்த அகமதியாக்கள், பலூச்சிகள் அல்லது வேறு பிரிவுகள் மற்றும் இனங்கள் இந்தியாவில் குடியுரிமை கோருவதைத் தடுக்கவில்லை என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குடியுரிமை திருத்த சட்டம்: 3 கோடி குடும்பங்களை நாட பாஜக முடிவு
தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் நாடு முழுவதும் தீவிரமடைந்து, போராட்டக்காரர்களின் உயிரிழப்பு, கைதுகள் உள்ளிட்டவை நிகழ்ந்துவரும் சூழலில் மூன்று கோடிக்கும் மேலான இந்தியக் குடும்பங்களை நாடும் பிரசார இயக்கம் ஒன்றை நடத்த இந்திய அரசுக்கு தலைமை வகிக்கும் பாரதிய ஜனதா கட்சி முடிவு செய்துள்ளது.
குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து விளக்க சிறப்பு பிரசார இயக்கம் ஒன்றை நடத்த பாஜக முடிவு செய்துள்ளதாகவும், இதன்போது மூன்று கோடிக்கும் மேலான குடும்பத்தினரை பாஜகவினர் தொடர்பு கொள்வார்கள் என்றும் அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் பூபேந்தர் யாதவ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
பிற செய்திகள்
- தமிழக உள்ளாட்சி தேர்தல்: பதவியில் பெண்கள்; அதிகாரத்தில் ஆண்கள் - இந்த நிலை மாறுமா?
- குடியுரிமை, காஷ்மீர், முஸ்லிம்கள் - மீண்டும் இந்தியாவை விமர்சிக்கும் மலேசிய பிரதமர்
- குடியுரிமை திருத்த சட்டம்: 3 கோடி குடும்பங்களை நாட பாஜக முடிவு
- ஹைதராபாத் என்கவுண்டர்: அழுகிய உடல்களை மறு பிரேதப் பரிசோதனை செய்ய உத்தரவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: