குடியுரிமை திருத்த மசோதாவை கேரளா ஏற்காது: முதல்வர் பினராயி

இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ள குடியுரிமை திருத்த மசோதாவை கேரள மாநிலம் ஏற்காது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

இந்த சட்டம் அரசமைப்புச் சட்டத்துக்கு முரணானது என்றும் அவர் தெரிவித்துள்ளார் என்று ஏ.என்.ஐ. செய்தி முகமை தெரிவித்துள்ளது.

இந்தியாவை மத அடிப்படையில் பிளவுபடுத்த மத்திய அரசு முயல்வதாக கூறிய அவர், இந்த நடவடிக்கை சமத்துவத்தையும், மதச்சார்பின்மையையும் நாசம் செய்வதற்கானது என்றும் கூறியுள்ளார்.

மேற்குவங்கம் இந்த சட்டத் திருத்தத்தை ஏற்காது என்று அந்த மாநில முதல்வர் மம்தா பானர்ஜி ஏற்கெனவே அறிவித்திருக்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: