சூடானில் பலியான தமிழக இளைஞர்: குடும்பத்தின் துயர் நீக்க சென்றவர் தீக்கு பலியான துயரம்

காணொளிக் குறிப்பு, சூடானி பலியான தமிழக இளைஞர்

கடந்த செவ்வாய் கிழமையன்று சூடான் நாட்டின் தலைநகரான கார்டூம் பகுதியில் உள்ள செராமிக் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் பலர் உயிரிழந்தனர். இவர்களில் 16 பேர் இந்தியர்களாவர்.

தீ விபத்தில் உயிரிழந்த 16 இந்தியர்களில் மூன்று பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள், அதில் ராஜசேகர் (வயது 35) என்பவர் கடலூர் மாவட்டம் பண்ருட்டி தாலுகாவிற்கு உட்பட்ட மானடிக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவராவர்.

இவருக்கு கலைச்சுந்தரி (வயது 33) என்பருடன் திருமணமாகி மூன்று வயதில் ஷிவானி என்ற பெண் குழந்தை உள்ளது.

ராஜசேகரின் மனைவி இதுகுறித்து கூறும்போது, "என் மீது அவர் பாசமாக இருப்பார். என் குழந்தை, என்னை அடித்தாலே அதை தாங்கிக்கொள்ள மாட்டார். எனது பெற்றோர் இறந்துவிட்டனர், சொந்தங்கள் யாரும் இல்லை, எனது உறவு என்பது என் கணவனும். குழந்தையும் தான் என்கிறார்.

காணொளி தயாரிப்பு:நட்ராஜ் சுந்தர், பிபிசி தமிழுக்காக

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: