தமிழ் மணக்கும் டீக்கடை: "வன்தேனீர் வேண்டுமா? மென் தேனீர் வேண்டுமா?" - காணொளி
விழுப்புரம் மந்தக்கரையில் டீக்கடை வைத்துள்ள சுப்ரமணியன் காபி, டீ என்று சொல்ல மாட்டார். தேனீர், குளம்பி என்றே சொல்வார். யாராவது டீ என்று கேட்டால், லைட்டா ஸ்டிராங்கா என்று கேட்கமாட்டார்.
வன்தேனீரா, மென் தேனீரா என்றே கேட்பார். ஸ்டிராங் டீயா என்று கேட்க மாட்டார். கடுந்தேனீரா என்பார்.
பத்திரிகைகள் படித்தும், பிபிசி தமிழோசை கேட்டும்தான் தனித்தமிழ் பேசும் ஆர்வம் வந்ததாக கூறும் சுப்ரமணியன் படித்திருப்பது 4-ம் வகுப்பு வரைதான்.
இது தொடர்பான வரிவடிவ செய்தியைப் படிக்க: தனித் தமிழ் டீக்கடை: "உங்களுக்கு 'வன் தேனீர்' வேண்டுமா? மென் தேனீர் வேண்டுமா?"
தயாரிப்பு: அ.தா.பாலசுப்ரமணியன்
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்