சாதிய பாகுபாடு சமூகத்தில் நீங்க என்ன செய்ய வேண்டும்? - நேயர்கள் கருத்து #iamthechange

சமூகத்தில் சாதிய பாகுபாடு நீங்க, என்ன செய்ய வேண்டும் என்பதை #iamthechange என்ற ஹாஷ்டாகுடன் கருத்துகளைப் பகிர நேயர்களிடம் கோரி இருந்தோம்.

ஃபேஸ்புக், ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் என பல்வேறு தளங்களில் மொத்தம் வந்த கருத்துகளின் எண்ணிக்கை ஏறத்தாழ ஆயிரம்.

அதன் சாரத்தை இங்கே தொகுத்து வழங்கி உள்ளோம்.

கருத்துகளைப் பகிர்ந்த நேயர்களில் பெரும்பாலானோர் பள்ளிகளில் வழக்கமான பாடத்திட்டத்தைக் கடந்து, சமூக விழுமியங்களைக் கற்பிக்கும் கல்வியும் இருக்க வேண்டும் எனப் பலர் கருத்து பகிர்ந்து இருந்தனர்.

அதுபோல, கல்வியறிவு கட்டாயமாக்கப் பட வேண்டும் கல்வியறிவில் பின் தங்கியுள்ளவர்களால் தான் சாதிப் பிரச்சனை எழுகிறது என்றும் சாதி உணர்வைச் சிறிதளவு காட்டினால் கூட அத்திரைப்படங்கள் தடை செய்யப்பட வேண்டும் என்றும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

வாசிப்பு பழக்கத்தை மாணவர்களிடம் ஏற்படுத்த வேண்டும். நல்ல புத்தகங்கள் மாணவர்களை நல்வழிப்படுத்துமென என நேயர்கள் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துள்ளனர்.

பெரும்பாலானவர்கள் பள்ளிகளில் சாதி சான்றிதழ் கேட்கக் கூடாதெனக் கருத்து பகிர்ந்திருக்கிறார்கள்.

பொருளாதார சமநிலை வராதவரை, சாதிய பாகுபாடு ஒழியாது எனப் பல கருத்து தெரிவித்துள்ளனர்.

iamthechange என்ற தலைப்பில் சமூக மாற்றத்தை முன்னெடுக்கும் பெண்கள் குறித்து பிபிசி தமிழில் எழுதி வருகிறோம்.

அதன் இணைப்பு:

கெளதம் வாசுதேவ் மேனனின் உதவி இயக்குநர் வாழ்வை மாற்றிய சுனாமி

சாதி மறுப்பு திருமணம் செய்ய வேண்சுமென்றும் பலர் கருத்து பகிர்ந்திருக்கிறார்கள்.

புவிதம் மீனாட்சி - தர்மபுரியில் நதியை மீட்கும் வடநாட்டு பெண்

சரண்யா: ஆதரவற்றவர்களை தேடித் தேடி உதவி செய்யும் 19 வயது பெண்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :