பிரான்ஸ் நாட்டில் #MeToo புகார் செய்தவருக்கு எதிராக நீதிமன்றம் தீர்ப்பு மற்றும் பிற செய்திகள்

#MeToo பிரசாரம் செய்தவருக்கு எதிராக நீதிமன்றம் தீர்ப்பு

பிரான்ஸ் நாட்டில் #MeToo பிரசாரத்தை முன்னெடுத்தவரும், ஆண் ஒருவர் மீது துன்புறுத்தல் புகார் அளித்தவருமான சான்ரா முல்லருக்கு எதிராக பிரான்ஸ் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இழப்பீடாக அவர் 22 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் அளிக்க வேண்டுமென அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் தனது முன்னாள் மேலதிகாரியான எரிக் ப்ரியோன் மீது புகார் அளித்திருந்தார். தன்னை அவர் பாலியல் ரீதியாக தன்னிடம் வழிந்துகொண்டிருந்தார் என அந்த புகாரில் கூறி இருந்தார். தீர்ப்பு தொடர்பாக கருத்து தெரிவித்த முல்லர், மேல் முறையீடு செய்யப்போவதாக கூறினார். 2017ஆம் ஆண்டு இது தொடர்பாக அவர் பகிர்ந்திருந்த ட்வீட்டையும் நீக்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டது.

அமெரிக்க அதிபர் டிரம்பின் அரசியல் எதிரியை வீழ்த்த வெளிநாட்டு உதவி

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும், உக்ரைன் அதிபரும் பேசிய தொலைபேசி உரையின் விவரங்களை வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ளது. டிரம்பை பதவி நீக்கம் செய்யும் நடவடிக்கையை அமெரிக்க நாடாளுமன்றம் தொடங்க இந்த விவரங்கள் காரணமாகியுள்ளன.வ ஜனநாயக கட்சியின் உறுப்பினரும், முன்னாள் துணை அதிபரமான ஜோ பைடனின் செயல்பாடுகளை விசாரிக்க உக்ரைன் அதிபர் வாலடிமீர் ஸெலன்ஸ்கியிடம் ஜூலை 25ம் தேதி அதிபர் டிரம்ப் கேட்டுக்கொண்டதாக வெள்ளை மாளிகை வெளியிட்ட விவரங்கள் காட்டுகின்றன. ஜோ பைடனின் மகன் உக்ரைன் எரிவாயு நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார்.

பாலியல் குற்றம் சாட்டிய மாணவி கைது

தன்னை பாலியல் வல்லுறவு செய்ததோடு, பாலியல் தாக்குதலும் தொடுத்தாக பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் சுவாமி சின்மயானந்த் மீது புகார் அளித்து, அவர் கைதாக காரணமாக இருந்த சட்டக்கல்லூரி மாணவியும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

ஆபாசக் காணொளிகளை வெளியிடாமல் இருக்க, இந்த மாணவி அவரது நண்பர்களோடு இணைந்து ரூ. 5 கோடி ரூபாய் தர வேண்டுமென சுவாமி சின்மயானந்துக்கு மிரட்டல் விடுத்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

காஷ்மீருக்கு காந்தி மேற்கொண்ட ஒரே பயணம்

இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைக்கப் பெறும் சூழல் நெருங்கிக்கொண்டிருந்தது. ஆனாலும், அதற்கான கதவுகள் அடைக்கப்பட்டே இருந்தது. சமஸ்தானங்களை ஒன்றிணைக்கும் பணியில் ஜவஹர்லால் நேருவும், சர்தார் படேலும் ஈடுபட்டிருந்தனர்.

சமஸ்தானங்கள் இந்தியாவுடன் இணைவதற்கு, அளவுக்கு அதிகமான நிபந்தனைகளை விதித்தன. ஏகாதிபத்திய சக்திகளால் மேலும் ஒரு சூழ்ச்சி முன்னெடுக்கப்பட்டது. அது இங்கிலாந்திலிருந்து தொடங்கி அமெரிக்கா வரை சென்றது. இந்த சக்திகள் ஆசிய அரசியலில் தாங்கள் பங்கு பெறுவதற்கு ஏதுவாக, அவர்களின் நழுவும் செல்வாக்கை அடைவதில் கவனம் செலுத்தின. அதே சமயம் சுதந்திரம் பெறவுள்ள இந்தியாவின் மீது அவர்களின் பார்வையை செலுத்த விரும்பினர்.

#MeToo - அமெரிக்கா முதல் தமிழகம் வரை

"இனப்படுகொலைக்கான அறிகுறி''

நீதிமன்ற உத்தரவை மீறி முல்லைத்தீவில் திங்கட்கிழமை பௌத்த பிக்கு ஒருவரின் உடலை நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் தகனம் செய்தமையினைக் கண்டித்தும், இதன்போது சட்டத்தரணிகள் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் கிழக்கு மாகாணத்தின் பல இடங்களில் செவ்வாய்கிழமை நீதிமன்ற சட்டத்தரணிகள் பணிப் பகிஷ்கரிப்பிலும் கவன ஈர்ப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டனர்.

மட்டக்களப்பு, கல்முனை மற்றும் அக்கரைப்பற்று உள்ளிட்ட நீதிமன்ற வளாகங்களுக்கு முன்பாக ஒன்று கூடிய சட்டத்தரணிகள், சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாக்குமாறு வலியுறுத்தினார்கள்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :