ரஜினிகாந்த்: இந்தி திணிப்பு வேண்டாம், ஆனால், பொதுமொழி நல்லது

இந்தி திணிப்பு வேண்டாம். ஆனால், பொதுமொழி ஒன்று இருப்பது நல்லதென நடிகர் ரஜினிகாந்த் கூறி உள்ளார்.

சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "இந்தியை திணித்தால் தமிழ்நாட்டில் மட்டுமல்ல தென் இந்தியாவில் யாரும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்" என்றார்.

அவர், "தமிழ்நாடு மட்டுமல்ல, எந்தவொரு நாட்டுக்கும் பொதுவான ஒரு மொழி இருந்தால் நாட்டின் முன்னேற்றத்துக்கு, ஒற்றுமைக்கு, வளர்ச்சிக்கு நல்லது. ஆனால், துரதிருஷ்டவசமாக நம் நாட்டுக்கு பொது மொழி ஒன்று கொண்டு வரமுடியாது" என்றார்.

எந்த மொழியையும் திணிக்கக் கூடாது. குறிப்பாக இந்தியைத் திணித்தால், தமிழ்நாட்டில் மட்டுமல்ல தென் இந்தியாவில் யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஏன் வட இந்தியாவிலும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்றார்.

தனது ரசிகர்களைப் பேனர் வைக்க வேண்டாமென தாம் அறிவுறுத்தி உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நேயர்கள் இதுகுறித்து தங்கள் கருத்துகளை பகிரலாம்

ரஜினி அரசியலுக்கு வருவதை மக்கள் ஆதரிக்கிறார்களா? எதிர்க்கிறார்களா?

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :