You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நிர்மலா சீதாராமனை கலாய்த்த நெட்டிசன்கள்: "மக்கள் திருமணம் செய்து கொள்வதுதான் விவாகரத்துக்குக் காரணம்"
கார்கள் வாங்குவதை தவிர்த்து ஓலா, ஊபர் ஆகியவற்றில் பயணிப்பதை மக்கள் தேர்ந்தெடுப்பதால் வாகன உற்பத்தித்துறையில் வீழ்ச்சி ஏற்பட்டதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று கூறியிருந்தார்.
"விவாகரத்து அதிகமாவதற்கு காரணம் மக்கள் திருமணம் செய்து கொள்வதுதான்" என்பது போன்ற பல வாசகங்களை பதிவிட்டு, ட்விட்டர் வாசிகள் #SayItLikeNirmalaTai என்ற ஹேஷ்டேகை ட்ரெண்டாக்கி வருகின்றனர்.
அமைச்சர் நிர்மலா சீதாராமன் வாகன உற்பத்தித்துறை வீழ்ச்சிக்கு காரணம் மக்கள் ஓலா, ஊபரில் பயணிப்பதுதான் என்று கூறியதை வைத்து நக்கல் அடித்து வரும் நெட்டிசன்களில் ஒருவர், "மக்கள் ஆடைகள் அணிவதால்தான் ஆடைகள் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. காஃபி குடிப்பதால்தான் தேநீர் விற்பனை தொழில் பாதித்துள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.
"மக்கள் ஓயோ ரூம்களை பயன்படுத்துவதால், ரியல் எஸ்டேட் தொழில் பாதிக்கப்பட்டது. மக்கள் கார்போஹைட்ரேட்ஸ் எடுத்தக் கொள்வதை மக்கள் குறைத்துக் கொண்டதால் பார்லே- ஜி விற்பனையும் குறைந்துவிட்டது" என ருசிரா சத்ருவேதி என்ற ட்விட்டர்வாசி பதிவிட்டுள்ளார்.
"மக்கள் இணையத்தில் அனைத்து சுற்றுலாதளங்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பார்த்துவிடுவதால், இந்தியாவின் சுற்றுலாத்துறையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது" என்று பதிவிட்டுள்ளார் வித்யுத்
"ஸ்கைப் கால் வழியாக அனைத்து சந்திப்புக் கூட்டங்களும் நடப்பதால், ஏர் இந்தியா நஷ்டமானது"
"இக்காலத்து இளைஞர்கள் மொபைல் போனில் மட்டுமே வேலை செய்வதால், நாட்டில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துவிட்டது"
மக்கள் பெப்ஸி, கோக், மற்றும் மதுபானங்களை அருந்துவதால், நிலத்தடி நீர் குறைந்துவிட்டது என்று இதுபோன்ற பல்வேறு விஷயங்களை வைத்து, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் பேச்சை நக்கலடித்து வருகின்றனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்