You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கர்நாடக காங்கிரஸ் முக்கியத் தலைவர் டி.கே. சிவக்குமார் கைது
முன்னாள் அமைச்சரும் கர்நாடக காங்கிரசின் முக்கியத் தலைவருமான டி.கே.சிவக்குமார் அமலாக்கப் பிரிவினால் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்தை சி.பி.ஐ. கைது செய்துள்ள நிலையில், கைது நடவடிக்கைக்கு உள்ளாகும் அடுத்த காங்கிரஸ் தலைவராகியுள்ளார் சிவக்குமார்.
பணப்பரிவர்த்தனை முறைகேடு வழக்கு ஒன்றில் இந்த கைது நடந்திருக்கிறது.
கனகபுரா தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவும் இருக்கும் சிவக்குமார் அமலாக்கப் பிரிவின் முன்பு நான்காவது முறையாக இன்று செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு ஆஜரானார்.
இந்நிலையில் பணப்பரிவர்த்தனை முறைகேடு சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
புது டெல்லியில் உள்ள நீதிமன்றம் ஒன்றில் அவரை புதன்கிழமை ஆஜர்படுத்தி காவலில் எடுத்து விசாரிப்பதற்கு அமலாக்கப் பிரிவு அனுமதி கோரும் என்று தெரிகிறது.
கடந்த ஆண்டு செப்டம்பரில் சிவக்குமார், டெல்லி கர்நாடக பவன் ஊழியர் ஹனுமந்தையா உள்ளிட்டோர் மீது இந்த பணப்பரிவர்த்தனை முறைகேடு வழக்கு தொடரப்பட்டது. தன் மீதான குற்றச்சாட்டுகளை சிவக்குமார் மறுத்துவருகிறார்.
அவரது கைது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று கூறி காங்கிரஸ் கட்சி கண்டித்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி வெளியிட்ட டிவிட்டர் பதிவு:
யார் இந்த சிவக்குமார்?
கர்நாடகத்தில் சமீபத்தில் காங்கிரஸ் - மஜத கூட்டணி ஆட்சி கவிழ்ந்து பாஜக ஆட்சியைப் பிடித்தது. பல மஜத, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்காமல் புறக்கணித்தன் மூலம் இந்த ஆட்சி மாற்றம் சாத்தியமானது. இந்த மாற்றத்துக்கு முன்பாக, ஆட்சியைக் கவிழ்க்க பாஜகவும், காப்பாற்ற காங்கிரசும் தீவிரமாக பல வாரங்களாக முயற்சிகளில் ஈடுபட்டன. அந்த இழுபறியின்போது காங்கிரசின் சார்பில் மிகவும் தீவிரமாக செயல்பட்டவராக சிவக்குமார் அறியப்பட்டார்.
கலைக்கப்பட்ட ஆட்சியில் அவர் அமைச்சராகவும் இருந்தார்.
பிற செய்திகள்:
- 'ராட்சசி' படத்தை மாணவர்களும் ஆசிரியர்களும் பார்க்க வேண்டும்: மலேசிய கல்வி அமைச்சர்
- ’சாகும்வரை ஒரு ரூபாய்க்குதான் இட்லி விற்பேன்’ - நெகிழவைக்கும் 80 வயது மூதாட்டி
- பறையா பருந்தும் பிராமினி பருந்தும்: பறவைகளுக்கு சாதிப் பெயர் சூட்டப்பட்டது ஏன்?
- இந்திய விமானப்படையில் அப்பாச்சி ஹெலிகாப்டர்: 10 முக்கிய தகவல்கள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்