You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
#StopHindiImposition உலகளவில் ட்ரெண்டாகும் ஹேஷ்டேக் - காரணம் என்ன?
நாடு முழுவதும் நடுநிலை வகுப்பு மும்மொழிக் கொள்கை அமலுக்கு வருவதாக தமிழக ஊடகங்களில் செய்திகள் வெளியானதையடுத்து ட்விட்டரில் #StopHindiImposition #TNAganistHindiImposition போன்ற ஹேஷ்டேகுகள் உலகளவில் ட்ரெண்டாகி வருகின்றன.
தேசிய கல்விக் கொள்கை 2019 என்று குறிப்பிடப்பட்டு ட்விட்டரில் ஒரு ஆவணம் வைரலாகி வருகிறது. அதில், மும்மொழிகளில் ஏதேனும் ஒன்றை மாற்ற விரும்பும் மாணவர்கள் ஆறாம் வகுப்புக்கு மேல் மாற்றிக் கொள்ளலாம் என்றும், இந்தி பேசும் மாநிலங்களில் இருக்கும் மாணவர்கள் இந்தி, ஆங்கிலம் மற்றும் வேறு ஏதேனும் ஒரு நவீன இந்திய மொழியை படிக்க வேண்டியிருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இந்தி பேசாத மாநில மாணவர்கள், அவர்களது தாய் மொழி, இந்தி மற்றும் ஆங்கிலம் படிக்க வேண்டியிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
வைரலாகி வரும் ஆவணம் புதிய கல்விக் கொள்கை வரைவின் பக்கம் 84 ஆகும். இதை இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் இணையதளத்தில் காணலாம்.
எனினும், அதனை தமிழர்கள் தீவிரமாக பகிர்ந்து வருகின்றனர். இந்தி திணிப்பு போராட்டங்களை குறிப்பிட்டு, தமிழகம் என்றும் இந்தி திணிப்பை ஏற்றுக் கொள்ளாது என்று பலரும் பதிவிட்டு வருகின்றனர்.
இது தொடர்பான மீம்களும் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.
பிற செய்திகள் :
- நரேந்திர மோதி அமைச்சரவையில் சுப்பிரமணியம் ஜெய்சங்கர்: யார் இவர்?
- குடிநீர்ப் பஞ்சம்: சென்னை மெட்ரோவில் நிறுத்தப்பட்ட குளிர்சாதன வசதி - பயன் என்ன?
- நோயாளிகளே தங்களை பராமரித்து கொள்ளும் படுக்கை - தமிழரின் கண்டுபிடிப்புக்கு குவியும் பாராட்டு
- பாஜக இணையதளம் ஹேக் செய்யப்பட்டு மாட்டிறைச்சி புகைப்படங்கள் பதிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்