You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அல் கொய்தா தொடர்புடைய காஷ்மீர் அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டார்
தெற்கு காஷ்மீரின் புல்வமா மாவட்டத்தில் உள்ள தட்சரா கிராமத்தில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச்சண்டையில் தீவிரவாதியான ஜாகீர் முசா கொல்லப்பட்டார்.
இதனை தொடர்ந்து அங்கு பெருமளவிலான போராட்டங்கள் நடந்து வருகின்றன.
ஊரடங்கு போன்ற நிலை
ஊரடங்கு போன்ற நிலைமை அங்கு நிலவி வருவதாக கூறிகிறார் பிபிசிக்காக செய்தி தரும் சமீர் யாசீர்.
பள்ளிகள், கல்லூரிகள் அங்கு மூடப்பட்டுள்ளன. இணைய சேவையும் முடக்கப்பட்டுள்ளது.
யார் இந்த முஸா?
அன்சர் கஸ்வாத் உல் ஹிந்த் அமைப்பின் நிறுவனர் முஸா. அவரது இயற்பெயர் ஜாகீர் ரஷீத் பட்.
நூர்பொரா பகுதியில் உள்ள ட்ரால் கிராமத்தை சேர்ந்தவர் அன்சர். 2013 ஆம் ஆண்டு அவர் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பில் இணைந்தார். அந்த அமைப்பின் கமாண்டராக இருந்த புர்ஹான் வானியிடன் நெருக்கமாக இருந்தார்.
புர்ஹான் வானி ஜூலை 2016ல் கொல்லப்பட்ட பின், அவரது இடத்திற்கு வந்தார் அன்சர். 2017ஆம் ஆண்டு பாகிஸ்தானுடன் இணையவோ அல்லது சுதந்திரமான அரசை ஏற்படுத்தவோ இனி போராட போவதில்லை இஸ்லாமிய அரசை அமைக்கவே போராடப் போகின்றேன் என்று அறிவித்தார்.
இஸ்லாமிய அரசுக்கு எதிரானவர்கள் என அவர் கருதிய ஹூரியத் தலைவர்களுக்கும் அவர் மிரட்டல் விடுத்திருந்தார்.
இவரது அமைப்புக்கு அல் கொய்தாவுடனும் தொடர்பு இருந்தது.
தொடரும் போராட்டம்
இன்று காலையிலிருந்தே காஷ்மீரில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. போலீஸாருடன் போராட்டக்காரர்கள் மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஸ்ரீநகரை இந்தியாவின் பிற பகுதிகளுடன் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையில் குவிந்த போராட்டக்காரர்கள் பாதுகாப்பு படைகளின் மீது கற்களை வீசி வருகின்றனர்.
போலீஸார் கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்ததினர்.
போராடக்காரர்கள் 'முஸா முஸா ஜாகீர் முஸா' என்று கோஷம் எழுப்பி வருகின்றனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :