You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கர்நாடகாவில் ரயில் தாமதத்தால் நீட் தேர்வு தவறவிட்ட மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும்
- எழுதியவர், இம்ரான் குரேஷி
- பதவி, பிபிசி இந்திக்காக
தொடர்வண்டி தாமதமானதால் நீட் தேர்வு எழுத முடியாமல் போன மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுமென மனித வள மேம்பாட்டுதுறை அமைச்சர் பிரகாஷ் ஜாவ்டேகர் ட்விட்டரில் கூறி உள்ளார்.
தொடர்வண்டி தாமதமானதால் வட கர்நாடகாவை சேர்ந்த 500 மாணவர்கள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடந்த நீட் தேர்வில் பங்கேற்க முடியாமல் போனது
இவர்கள் அனைவரும் பெல்லாரி, கோப்பல், ஹூப்லி, கடக் மற்றும் பிற வட மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள். இவர்கள் அனைவரும் பெங்களூருவுக்கு தேர்வெழுத ஹூப்லி - பெங்களூரு ஹம்பி எக்ஸ்பிரஸில் கிளம்பினார்கள்.
ஆனால், இந்த தொடர்வணடி முழுமையாக எட்டு மணி நேரம் தாமதமானது.
காலை 6.10-க்கு வந்திருக்க வேண்டிய தொடர்வண்டி, மதியத்திற்கு மேல்தான் பெங்களூரு வந்து சேர்ந்தது.
நாங்கள் தேர்வு மையத்திற்கு செல்லும் போது மணி மதியம் 2.30. இரண்டாவது மணியே அடித்துவிட்டது என்கிறார் பிபிசியிடம் பேசிய ஒரு மாணவரின் தந்தை வெங்கட் ரெட்டி.
வெங்கட் ரெட்டி ஒரு பள்ளியின் முதல்வர். அவர், "நாங்கள் காரணத்தை சொல்லி வாய்ப்பு கேட்டோம். ஆனால், யாரும் உதவவில்லை" என்கிறார் ரெட்டி.
என் மகன் சுஹால் பன்னிரெண்டாம் வகுப்பில் 87.75 சதவீதம் மதிப்பெண் எடுத்துள்ளார். ரயில் தாமதத்தால் இந்த ஆண்டு வீண் என்கிறார் ரெட்டி.
சுஹால் போல பல மாணவர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
இது தொடர்பாக தென் மேற்கு ரயில்வே நிர்வாகத்தை அணுகினோம்
ரயில் தாமதமாகும் என்று கடந்த வாரமே தெரிவித்துவிட்டோம் என்கிறார் அதன் செய்தித் தொடர்பாளர் இ விஜயா.
அவர், "முன்பதிவு செய்த 379 பயணிகளுக்கும் மே 1ஆம் தேதியே குறுஞ்செய்தி அனுப்பிவிட்டோம்" என்கிறார்.
கர்நாடக முதல்வர் குமாரசாமி பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மற்றொரு வாய்ப்பு வழங்க வேண்டுமென மத்திய அரசிடம் கோரிக்கை வைத்திருந்தார்.
கர்நாடகாவை சேர்ந்த மத்திய அமைச்சர் சதானந்த கெளடாவும் மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷுக்கு இது தொடர்பாக எழுதி இருந்தார்.
பிற செய்திகள் :
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்