You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்தியப் பொதுத் தேர்தல் 2019: ஆந்திரப் பிரதேச தேர்தல் வன்முறையில் ஒருவர் பலி
ஆந்திர மாநிலத்தில் தெலுங்கு தேசம் கட்சி மற்றும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிகள் இடையே மோதல் ஏற்பட்டதில் ஒருவர் பலியானார். அங்கு மக்களவை தேர்தலோடு சட்டமன்ற தேர்தலும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், அனந்தபூர் மாவட்டம் வீரப்புரம் கிராமத்தில் இரு கட்சியினரிடைய இந்த மோதல் ஏற்பட்டது.
தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த செயற்பாட்டாளர் ஒருவர் இதில் உயிரிழந்தார்.
இந்த மோதலில் காயமடைந்த சிலர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குண்டூர் மாவட்டத்திலும் இந்த இரு கட்சியினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில் அந்த மாநில சபாநாயகர் ஷிவபிரசாத் ராவ் மயக்கமடைந்தார்.
முன்னதாக குண்டூர் மற்றும் சித்தூரில் தெலுங்கு தேசம் மற்றும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே நடைபெற்ற மோதலில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சேதப்படுத்தப்பட்டன.
எம்.எல்.ஏ மற்றும் எம்.பி வேட்பாளர்களை வாக்குப்பதிவு இயந்திரங்களில் தெளிவாக பிரித்து காட்டவில்லை என்று கூறி ஜனசேனா சட்டமன்ற வேட்பாளர் மதுசூதன் குட்டா வாக்குப்பதிவு இயந்திரங்களை தரையில் போட்டு உடைத்தார். அவரை போலீஸார் காவலில் எடுத்துள்ளனர்.
இந்நிலையில் பிபிசியிடம் பேசிய அவர், "நான் வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க சென்றேன். வாக்குப்பதிவு இயந்திரங்களில், எம்.எல்.ஏ மற்றும் எம்.பி வேட்பாளர்களை பிரித்து காட்டவில்லை. அது தெளிவாகவும் இல்லை. நான் தொட்டவுடன் வாக்குப்பதிவு இயந்திரம் கீழே விழுந்துவிட்டது" என்றார்.
தேர்தல் அதிகாரிகளுக்கு முறையான உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், வாக்குப்பதிவை தொடர்ந்து நடத்த மாற்று நடவடிக்கைகள் செய்யப்பட்டுள்ளதாகவும், ஆந்திர மாநில தலைமை தேர்தல் அதிகாரி கோபால கிருஷ்ண த்விவேதி தெரிவித்தார்.
ஆந்திர பிரதேசத்தில் 175 சட்டமன்ற தொகுதிகளுக்கும், 25 மக்களவை தொகுதிகளுக்கும் ஒன்றாக தேர்தல் நடைபெற்று வருகிறது.
மஹாராஷ்டிராவில் நக்சலைட்டுகள் பிரச்சனை நிலவும் கத்ரிச்சோலி மாவட்டத்தின் எடாப்பள்ளி
எனும் இடத்துக்கு அருகே நடந்த குறைந்த சக்தி உடைய வெடிகுண்டு ஒன்று வாக்குச்சாவடிக்கு 100 மீட்டர் தொலைவில் வெடித்தது. இதில் யாரும் காயமடையவில்லை. அங்கு சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாக்குப்பதிவு மீண்டும் தொடங்கியது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்