மக்களவை தேர்தல்: வயநாடு தொகுதியை ராகுல் தேர்ந்தெடுத்தது ஏன்? பாஜக - காங்கிரஸ் ஓர் ஒப்பீடு

மக்களவை தேர்தலில் வயநாடு தொகுதியில் இருந்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுகிறார்.

நிஜமான ஆருடம்

மக்களவை தேர்தல் அடுத்த மாதம் 11ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெற உள்ளது.

பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட வேலைகளில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

இந்த சூழலில் ராகுல் காந்தி தென் இந்தியாவில் ஒரு தொகுதியில் போட்டியிடுகிறார் என்ற பேச்சு கடந்த சில நாட்களாக இருந்து வந்தது. அது தமிழகமாக கூட இருக்கலாம் என்று அரசியல் பார்வையாளர்கள் கூறி வந்தனர்.

இந்நிலையில், நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரளாவின் வயநாடு தொகுதியிலும் போட்டியிடுகிறார் என காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.கே.அந்தோனி தெரிவித்துள்ளார்

மகிழ்ச்சி

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரளா மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிடுகிறார். இதை அறிவிப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் என்றார்,

இதன் மூலம் உத்தரபிரதேசம் மாநிலம் அமேதி தொகுதியிலும், கேரளாவின் வயநாடு தொகுதியிலும் ராகுல் காந்தி போட்டியிடுவது உறுதியாகியது.

புவியியல் மற்றும் கலாசார காரணங்களுக்காக வயநாடு தொகுதியை தேர்ந்தெடுத்தோம் என்கிறார் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங்.

ஏப்ரல் 23 கேரளாவில் தேர்தல் நடக்க இருக்கிறது.

வயநாடு தொகுதி

வயநாடு தொகுதி 2008ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. 2009 மற்றும் 2014 ஆகிய இரண்டு மக்களவைத் தேர்தல்களிலும் காங்கிரஸே இந்தத் தொகுதியில் வெற்றி பெற்றது.

இரண்டு முறையும் ஷானாவாஸே இந்தத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். இவர் கடந்த ஆண்டு மரணமடைந்தார்.

2009 ஆம் ஆண்டு ஷானாவாஸ் 152,439 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். 2014 ஆம் ஆண்டு அவர் 377,035 வாக்குகள் பெற்றார்.

வயநாடு தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி பலவீனமாக இருப்பதாக தரவுகள் கூறுகின்றன. 2009 ஆம் ஆண்டு அதன் வேட்பாளர் இந்தத் தொகுதியில் பெற்ற வாக்குகள் 31,687.

2014 மக்களவைத் தேர்தலில் அதன் வேட்பாளர் பெற்ற வாக்குகள் 80, 752.

இத்தொகுதியில் சிபிஐ சார்பாக பிபி சுனீர் போட்டியிடுகிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :