கும்பமேளா: வயது மூத்த 2 பெண்களிடையே நட்பு மலர்ந்தது எப்படி?

    • எழுதியவர், விகாஸ் பாண்டே
    • பதவி, பிபிசி

நீங்கள் இந்த 360 டிகிரி காணொளியை பார்க்க உங்கள் கணினியில் கூகுள் குரோம், ஒபேரா,ஃபயர் பாக்ஸ் அல்லது இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் ஆகியவற்றின் சமீபத்திய பதிப்பு இருக்க வேண்டியது அவசியம்.

மொபைலில் இந்த காணொளியை பார்ப்பதற்கு ஆண்டிராய்டு அல்லது ஐஓஎஸ் என எந்த இயங்குதளமாக இருந்தாலும் யூட்யூப் செயலியின் நவீன பதிப்பு இருக்க வேண்டும்.

இந்தியாவில் நடக்கும் கும்பமேளா திருவிழா உலகிலேயே அதிகளவு மக்கள் கூடும் பிரமிக்கத்தக்க நிகழ்வுகளில் ஒன்றாகும்.

அலகாபாத் நகரில் கும்பமேளா நடைபெற்றது . சமீபத்தில் அலகாபாத் பிரக்யராஜ் என பெயர் மாற்றப்பட்டது. வடக்கு உத்தரபிரதேசத்தில் கங்கையும் யமுனையும் சங்கமிக்கும் இடத்தில் நூற்றாண்டுகாலமாக கும்பமேளா நடந்து வருகிறது. எனினும் கடந்த இருபது ஆண்டுகளில் கும்பமேளா மிகப்பெரிய நிகழ்வாக வளர்ந்துள்ளது.

பொதுவாக ஒவ்வொரு 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பமேளா நடக்கும். அதன் சிறிய வெர்ஷனாக மகா மேளா ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது.

இந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலகட்டத்தில் 220 மில்லியன் மக்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டதாக உத்தரபிரதேச மாநில அரசு தெரிவிக்கிறது.

ஆற்றில் குளிப்பது தங்களது பாவத்தை போக்குவதற்கு உதவும் இதன்மூலம் மோட்சமடைந்து பிறப்பு மற்றும் இறப்பு சுழற்சியில் இருந்து தப்பிக்க முடியும் என இந்துக்கள் நம்புகிறார்கள்.

இந்த திருவிழாவில் துறவிகள் அதிக கவனம் ஈர்ப்பார்கள். தங்களது உடல் முழுவதும் சாம்பலை அப்பிக்கொண்டு தண்ணீரில் இருந்து எழுந்து ''ஹர ஹர கங்கா'' அல்லது ''அன்னை கங்கையே'' என மந்திரம் சொல். இதற்கிடையில் அவர்களை புகைப்படம் எடுக்க வருபவர்களுக்கு நடன அசைவுகளுடன் போஸ் கொடுப்பார்கள்.

இந்த பிரம்மாண்ட நிகழ்வுகளுக்கிடையே ஒரு பக்கம் கல்பவாசிஸ் எனும் மூத்த குடிகள் ஆற்றின் நதிக்கரையோரம் மாதம் முழுவதும் அமர்ந்து ஆன்ம திருப்தி மற்றும் இறைவனின் ரட்சிப்பை நாடுவார்கள்.

பலருக்கும் இந்த திருவிழா என்பது வெறும் ஆன்மீக ஒன்றுகூடலாக மட்டும் இருப்பதில்லை. அவர்களுக்கு இந்த மேளா தனிமையான வாழ்வில் இருந்து ஒரு சிறு இடைவெளியாக அமைகிறது.

பிபிசி மெய்நிகர் காணொளி இரண்டு கல்பவாசி பெண்களைப் பற்றி பேசுகிறது. 68 வயது கிரிஜா தேவி, 72 வயது மனோரமா மிஸ்ரா ஆகிய இருவரும் முதல்முறையாக இந்த திருவிழாவில் சந்தித்தார்கள் அதன்பிறகு நண்பர்களாகிவிட்டார்கள்.

"இந்தியாவின் கிராமங்களில் வயது மூப்படைந்தவர்களுக்கு தனிமை ஒரு மிகப்பெரிய பிரச்சனை. இளைஞர்கள் வேலை , கல்வி ஆகியவற்றை காரணம் காட்டி வயதானவர்களை விட்டுவிட்டு நகரங்களுக்கு குடிபெயர்ந்துவிடுகின்றனர். ஆனால் எங்களுக்கு வேறு வாய்ப்புகள் இல்லை. அவர்களுக்கு அவரவர் வாழ்க்கையும் முக்கியமாக இருக்கிறது." என்கிறார் மனோரமா மிஸ்ரா

''எனக்கு நான்கு மகன்கள் மற்றும் மூன்று மகள்கள் இருந்தனர். ஆனால் அதில் ஒருவரும் தற்போது என்னுடன் வாழவில்லை. அதனால் கும்ப மேளாவுக்கு வருவது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. இங்கே எனது வயதையொத்தவர்களை நான் சந்திக்கிறேன் மேலும் நாங்கள் இணைந்து ஒரே குடும்பமாகிவிடுகிறோம்'' என்கிறார் அவர்.

கிரிஜா தேவிக்கும் கிட்டத்தட்ட இதே போன்றதொரு கதை உள்ளது.

''எனது கணவர் திருமணம் முடிந்த இரு ஆண்டுகளில் நான் மிகவும் குள்ளமாக இருக்கிறேன் எனக்கூறிவிட்டு சென்றுவிட்டார். அதன் பிறகு எனது தந்தைதான் என்னை பார்த்துக்கொண்டார். ஆனால் அவரும் 15ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். அதிலிருந்து எனது கிராமத்தில் நான் தனிமையாக வாழ்ந்துவருகிறேன். சில நாள்களுக்கு முன் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்த பிறகு இங்கே வருவது என்று முடிவெடுத்தேன். கும்பமேளா எனக்கு தனிமையில் இருந்து ஒரு சிறிய விடுதலையளிக்கிறது. எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. இது தற்காலிக நிவாரணம்தான். ஆனால் உண்மையில் இது மேற்கொண்டு நீடிக்கவேண்டும் என்றே எதிர்நோக்கியுள்ளேன்''என்கிறார் தேவி.

தயாரிப்பு:

இயக்கம், கதை, - விகாஸ் பாண்டே

நிர்வாக தயாரிப்பாளர்கள் - சில்லா வாட்சன், ஆங்கஸ் ஃபோஸ்டர்

பிபிசி மெய்நிகர் காணொளி தயாரிப்பு: நியல் ஹில்

துணை தயாரிப்பாளர்: சுனில் கட்டாரியா

ஹைபர்ஆர்ரியாலிட்டி ஸ்டூடியோஸ்

ஒளிப்பதிவாளர் - விஜயா செளதரி

தொகுப்பாக்கம் (எடிட்டிங்) மற்றும் ஒலி வடிவமைப்பு - சிந்தன் கல்ரா

படைப்பு இயக்குநர் - அமர்ஜோத் பைடுவான்

கள தயாரிப்பு - அங்கித் ஸ்ரீனிவாஸ், விவேக் சிங் யாதவ்

நன்றி:

உத்தர பிரதேச அரசு

ராகுல் ஸ்ரீவட்சவ் - கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர்

கும்பமேளா நிர்வாகம்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :