ஜம்மு குண்டுவெடிப்பு: உத்தரகாண்டை சேர்ந்த ஒருவர் பலி, 29 பேர் காயம்

கோப்புப் படம் காஷ்மீர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப் படம்

காஷ்மீரில் பேருந்து நிலையத்தில் நடந்த குண்டுவெடிப்பில் உள்ளூரை சேராத ஒருவருக்கு ஏற்பட்ட பலத்த காயங்களால் உயிரிழந்துள்ளார். 29 பேர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்திலுள்ள ஹார்டிவாரில் கல்யாண்பூர் அகாதிவாரில், டேகா இன்டிஜாரின் மகன் மோக்ட் ஷாரிக்கு ஏற்பட்ட பலத்த காயத்தால் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இறந்துள்ளதாகவும் ஜம்மு காவல்துறை தலைமை ஆய்வாளர் (ஐஜி) எம். கே சின்ஹா தெரிவித்தார்.

காயமடைந்த 29 பேருக்கு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் எம்.கே. சின்ஹா கூறியுள்ளார்.

காயமடைந்தோரில் நான்கு பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

முன்னதாக, சந்தேகத்திற்குரிய சிலர் ஜம்மு பேருந்து நிலையத்தில் குண்டுவெடிப்பை நடத்தியுள்ளதாக அவர் கூறியிருந்தார்.

இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்த சிறிது நேரத்தில் அரசு படைப்பிரிவுகள் சம்பவ இடத்தை வந்தடைந்து தாக்குதல்தாரிகளை தேட தொடங்கினர் என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்த குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணைக்கு 10 பேரை காவல்துறை தடுத்து வைத்திருப்பதாக அதிகார வட்டாரம் கூறியுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :