You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
"அனில் அம்பானி நீங்கள் குற்றவாளி" - பரபரப்பு தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம்
ஸ்வீடனில் உள்ள தொலைத்தொடர்பு சாதனங்களை உற்பத்தி செய்யும் எரிக்சன் நிறுவனம் அனில் அம்பானி மீது தொடுத்த அவமதிப்பு வழக்கில் அனில் அம்பானி குற்றவாளி என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
பிரச்சனை என்ன?
ஸ்வீடனில் தொலைத்தொடர்பு சாதனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனம்தான் எரிக்சன். அந்நிறுவனத்திடமிருந்து சாதனங்களை வாங்கிவிட்டு அதற்குரிய பணத்தை திருப்பிச் செலுத்த தவறிவிட்டது அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம்.
இதன் காரணமாக அனில் அம்பானி மீது உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது எரிக்சன் நிறுவனம். இறுதியாக, செட்டில்மென்ட் தீர்வு மூலம் ரிலையன்ஸ் கம்யூனிகேஷனிடமிருந்து 550 கோடி ரூபாய் பணத்தை பெற சம்மதித்தது. அதனை, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 30ஆம் தேதிக்குள் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் வழங்கியிருக்க வேண்டும். ஆனால், பணத்தை செலுத்ததால் உச்ச நீதிமன்றத்தில் அனில் அம்பானி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடுத்தது எரிக்சன் நிறுவனம்.
தீர்ப்பு கேட்டு அதிர்ந்த அனில் அம்பானி
இன்றைய தினம் எரிக்சன் நிறுவனம் தொடுத்த வழக்கில் தீர்ப்பை வாசித்த நீதிபதிகள், அனில் அம்பானியை குற்றவாளி என அறிவித்தனர்.
தீர்ப்பை கேட்டு அதிர்ச்சியில் எழுந்து நின்ற அனில் அம்பானி, தனது வழக்கறிஞர்கள் மற்றும் சகாக்களுடன் பேசியதாக மூத்த நீதிமன்ற செய்தியாளர் சுசித்ரா மொஹந்தி பிபிசியிடம் தெரிவித்தார்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பு பெற்ற இரண்டாவது தொழிலதிபர் அனில் அம்பானி. இதற்குமுன்பு, சுப்ரத் ராய் சஹாராவை நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு திகார் சிறைக்கு அனுப்பப்பட்டார்.
4 வாரங்களுக்குள் 450 கோடியை கட்டுங்கள்
இன்னும் நான்கு வாரங்களில் எரிக்சன் நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய தொகையான 450 கோடி ரூபாயை செலுத்த வேண்டும் என்று அனில் அம்பானியிடமும், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்தின் இரு இயக்குநர்களிடமும் கறராக தெரிவித்த நீதிபதிகள், இந்த தொகையை கட்டாத பட்சத்தில் மூவருக்கும் மூன்று மாதங்கள் சிறைத் தண்டனை பெற வேண்டியிருக்கும் என எச்சரித்தனர்.
இந்தியா எங்களை தாக்கினால் பதிலடி தருவோம் - இம்ரான் கான்
பிற செய்திகள்:
- சொக்கத்தங்கமும், கூடாநட்பும்: திமுக-காங்கிரஸ் கூட்டணி இயற்கையானதா? காலத்தின் கட்டாயமா?
- இந்தியாவால் ஏன் பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்ய முடியாது?
- செளதிக்கு அணு ஆயுதம் வழங்க அமெரிக்கா முயற்சியா?
- இந்தியா பாகிஸ்தான் இடையிலான பதற்றம் உலக நாடுகளை எப்படி பாதிக்கும்?
- ''இம்ரான்கான் சொல்வது நொண்டிச் சாக்கு'' - இந்தியா காட்டமான பதில்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்