You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தமிழ்நாடு 50: உயிர்நீத்து பெற்ற பெயரும் மற்றும் பிற செய்திகளும்
தமிழ்நாடு 50
சென்னை மாகாணம் தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்ட நாள் இன்று (ஜனவரி 14). தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. மெட்ராஸ் மாகாணத்தில், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என, பல மொழிகள் பேசுபவர்களும் இருநதனர். பின்னர், மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. மெட்ராஸ் மாகாணத்தில் தமிழ் பேசுவோர்தான் அதிகமிருந்தார்கள். மெட்ராஸ் ஸ்டேட் என்று அழைக்கப்பட்ட தமிழகத்துக்கு தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்ய வலியுறுத்தி விருதுநகரைச் சேர்ந்த காந்தியவாதி தியாகி கண்டன் சங்கரலிங்கனார் உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்தார்.
இது குறித்து மேலும் விரிவாக படிக்க: ''நமது நாடு தமிழ்நாடா?, இந்தியாவா?''
சிரியாவைவிட்டு செல்ல வேண்டாம்
செளதி அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர் ஒருவர் சிரியாவைவிட்டு அமெரிக்க துருப்புகள் வெளியே செல்வதற்கு எதிராக எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்காவின் இந்த நடவடிக்கையானது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துமென இளவரசர் துருக்கி அல் ஃபைசல் எச்சரிக்கை விடுத்துள்ளார். சிரியாவிலிருந்து அமெரிக்க துருப்புகள் வெளியேறுமென கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்து இருந்தார்.
ரஷ்யாவுடன் ரகசிய உறவா?
எஃப்.பி.ஐ புலனாய்வு அமைப்பின் தலைவராக இருந்த ஜேம்ஸ் காமி, 2017இல் பதவிநீக்கம் செய்யப்பட்ட பிறகு, ரஷ்யாவுக்காக டிரம்ப் ரகசியமாக எதாவது வேலை செய்தாரா என்பது குறித்த விசாரணையை எஃப்.பி.ஐ தொடங்கியுள்ளதாக இந்த வாரத்தின் தொடக்கத்தில் நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டது.
ஹெல்ஸின்கியில் புதின் உடனான சந்திப்பில் இரு நாட்டு அதிபர்கள் சந்திக்கும்போது பேசப்படும் பொருளாதாரம் உள்ளிட்டவை குறித்து பேசியதாகவும், "பல நேர்மறையான விவகாரங்கள் பற்றிய சிறப்பான உரையாடலாக அது இருந்தது," என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.
தாம் பல உலக நாடுகளின் தலைவர்களை தனியாகச் சந்திப்பதாகவும், புதின் உடனான சந்திப்புகள் மட்டுமே அதிக கவனத்தைப் பெறுகின்றன என்றும் டிரம்ப் கூறுகிறார்.
விரிவாக படிக்க:'புதின் உடனான ரகசிய உடையாடல்களை டிரம்ப் மறைகிறார்'
கொடநாடு- இருவர் கைது
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை மற்றும் கொள்ளைச் சம்பவங்களின் பின்னணியில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளதாக குற்றம்சாட்டிய பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் உடன், கடந்த வெள்ளியன்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்ட சயான் மற்றும் மனோஜ் ஆகியோர் டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளனர். டெல்லி வந்த தமிழக காவல்துறையின் சிறப்புக் குழு அவர்களைக் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ராஜபக்ஷ - மைத்திரிபால கருத்து வேறுபாடு
இலங்கையில் இந்த வருட இறுதியில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படும் ஜனாதிபதி தேர்தலில், ரணில் விக்ரமசிங்க தலைமை தாங்கும் ஐக்கிய தேசிய முன்னணி சார்பான வேட்பாளரை எதிர்த்துப் போட்டியிடும் பொதுவேட்பாளர் யார் என்பது தொடர்பில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தரப்புக்கும் மஹிந்த ராஜபக்ஷ தரப்புக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளன.
2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில், மஹிந்த ராஜபக்ஷவை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றி பெற்ற மைத்திரிபால சிறிசேன, அண்மையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக, மீண்டும் மஹிந்த ராஜபக்ஷவுடன் கைக்கோர்த்தார்.
விரிவாக படிக்க:மஹிந்த ராஜபக்ஷ - மைத்திரிபால சிறிசேன இடையே கருத்து வேறுபாடு?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்