பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் சாதிகளுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு - அமைச்சரவை ஒப்புதல்

இந்தியாவில் பொருளாதாரரீதியாக பின்தங்கியவர்களுக்கு கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்று தகவல்கள் தெரிவிப்பதாக பி.டி.ஐ. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த ஒதுக்கீடு பொதுப்பிரிவில் இருந்து அளிக்கப்படும்.

தற்போது நடைமுறையில் உள்ள 50 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு மேலாக இந்த இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்றும் இதற்காக அரசு நாடாளுமன்றத்தில் அரசமைப்புச் சட்டத்தைத் திருத்துவதற்கான மசோதாவை செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யும் என்றும் கூறப்பட்டுகிறது.

மிக முக்கியமாக, இதுவரை இட ஒதுக்கீட்டின் பயன்களைப் பெறாத, பொருளாதார ரீதியாக பின்தங்கிய ஏழைகளுக்கு இந்த இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொருளாதாரரீதியில் பின்தங்கிய பிரிவினருக்கு இதுவரை இந்தியாவில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதில்லை. அதற்கு அரசமைப்புச் சட்டத்தில் வழி இல்லை.

ஆண்டுக்கு 8 லட்சத்துக்கும் குறைவாக சம்பாதிப்பவர்கள் அல்லது ஐந்து ஏக்கருக்கும் குறைவாக நிலம் வைத்திருப்பவர்கள் இந்த இட ஒதுக்கீட்டைப் பெறத் தகுதியானவர்களாக இருப்பார்கள் என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: