You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
5 மாநில தேர்தல் கணிப்பு: ராஜஸ்தானில் காங்கிரஸ், மத்தியப்பிரதேசத்தில் இழுபறி
மத்திய பிரதேசம், சத்திஸ்கர், மிசோரம், ராஜஸ்தான் மற்றும் தெலங்கானா மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல்களின் வாக்குப்பதிவு முடிவடைந்துள்ள நிலையில், முன்னணி ஊடகங்கள் வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் (Exit Poll) பெரும்பான்மையானவை ராஜஸ்தானில் காங்கிரஸ் வெற்றி பெறும் என்றும் மத்தியப்பிரதேசத்தில் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே மிக நெருக்கமான போட்டி நிலவுவதாகவும் தெரிவிக்கின்றன.
தெலங்கானாவில் டி.ஆர்.எஸ். கட்சிக்கும், சத்தீஸ்கரில் காங்கிரசுக்கும் வெற்றி வாய்ப்பு இருப்பதாக சில கணிப்புகள் கூறுகின்றன.
மத்தியபிரதேசம், சத்திஸ்கர், மிசோராம் ஆகிய மாநிலங்களில் நவம்பர் மாதம் வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில், தெலங்கானா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் இன்று வாக்குப்பதிவு நடந்து முடிந்தது.
வாக்குகள் எண்ணிக்கை டிசம்பர் 11ஆம் தேதி நடைபெறுகிறது.
வாக்குப் பதிவுக்குப் பிந்திய கருத்துக் கணிப்புகள்
மத்திய பிரதேசம்
மொத்த தொகுதிகள் - 230
தெலங்கானா சட்டமன்ற தேர்தல்
மொத்த தொகுதிகள் - 119
சத்திஸ்கர் சட்டமன்ற தேர்தல்
மொத்த தொகுதிகள்- 90
ராஜஸ்தான் சட்டமன்ற தேர்தல்
மொத்த தொகுதிகள் - 200
மிசோரம்
ரிபப்ளிக் - சி வோட்டர் நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகளில் மிசோரம் மாநிலத்தில் உள்ள மொத்தம் 40 தொகுதிகளில் காங்கிரஸ் 14-18 தொகுதிகளிலும், மிசோ தேசிய முன்னணி 16-20 தொகுதிகளிலும், சோரம் மக்கள் இயக்கம் 3-7 தொகுதிகளிலும் வெற்றிப்பெறும் என்று கூறுகிறது.
வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கிய தெலங்கானா சட்டசபை தேர்தல்கள் அமைதியாக நடைபெற்றது. 56.17 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தொடக்க நிலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய நாடாளுமன்ற மக்களவைக்குப் பொதுத் தேர்தல் நடக்க இன்னும் ஐந்து மாதங்களே இருக்கும் நிலையில், தற்போது ஐந்து இந்திய மாநிலங்களின் சட்டமன்றங்களுக்கான தேர்தல், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு ஒரு அரையிறுதிப் போட்டியாகவே பார்க்கப்படுகிறது.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :